டி.சீரிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் யூட்யூப் பக்கத்தில் பீட் படத்தின் ட்ரெய்லர், வெளியான வேகத்தில் நீக்கப்பட்டுள்ளது. பீட் என்ற வார்த்தைக்கு கூட்டம் எனப் பொருள். இப்படம் கொரோனா ஊரடங்குக் காலத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயர்ந்ததையும் அப்போது அவர்கள் எதிர்கொண்ட சிரமத்தையும் மையக்கருவாகக் கொண்டது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, பூமி படேன்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ட்டிகிள் 15 படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் அனுபவ் சின்ஹாதான் இதனை இயக்கியுள்ளார். ட்ரெய்லர் வெளியான ஒரு வார காலத்தில், நீக்கப்பட்டுள்ளது.

news

இதுபற்றி தயாரிப்பாளரோ, இயக்குநரோ அதிகாரப்பூர்வமாக கருத்துக்கள் எதனையும் சொல்லவில்லை. படத்தின் ட்ரெய்லர் நீக்கப்பட்டுள்ளதற்கு வேறெந்தக் காரணமும் கிடையாது. மோடியைப் பற்றிய பயம்தான் என்று ஒருபுறமும், இந்தப் படம் தேசவிரோதமானது என்பது உள்ளிட்ட கமெண்டுகள் ஒருபுறமுமாக சமூக ஊடகங்களில் மோதல் தூள்பறக்கிறது. ட்ரெய்லருக்கே சிக்கல்ன்னா… படத்துக்கு?

சென்னை கோயம்படு வடக்கு மாடவீதியில் ஒரு செல்போன் கோபுரம் காணாமல் போனதாக புகார் வர, செல்போன் கோபுரம் திருட்டா என போலீசார் திருதிருவென விழித்திருக் கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட செல் போன் கோபுரம் சந்திரன், கருணா கரன், பாலகிருஷ்ணன் என்பவர் களுக்குச் சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் செல்போன் கோபுர நிறுவனம் 6 வரு டத்துக்கு முன்பே மூடப்பட, ஒப் பந்தப்படி மாத வாடகையைத் தரா மல் இழுத்தடித்தபடியே வந்திருக் கிறது. சரியான பராமரிப்பில்லாத தால் அந்தக் கோபுரம் துருப் பிடித்து கீழே விழும் நிலையில் இருந்திருக்கிறது. பார்த்தார்கள், இடத்துக்குச் சொந்தக்காரர் கள், கோபுரத்தைப் பிரித்து பழைய இரும்புக் கடையில் விற்றுவிட்டனர். இப் போது அந்நிறுவனத் தின் மேலாளர் செல் போன் கோபுரத்தைத் தேடிவரும்போதுதான் இந்தப் பிரச்சனை விவ காரமாயிருக்கிறது. "நீ வாடகைப் பாக்கியைக் கொடு, நான் செல்போன் டவரைக் கொடுக்கிறேன்" என நிறுவனத்திடம் பஞ்சா யத்துப் பேசுகிறார்களாம் இட உரிமையாளர்கள். இருந்தாலும், செல்போன் கோபுரத்தை எடைக்குப் போடுறதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான குறும்புதான்!

Advertisment

மோடி அரசின் இன்னொரு குட்டு உடைபட்டுள்ளது. மார்ச் 13-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா வந்த பிரதமர் தனது உரையில், “எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை எனது அரசு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது” என்று மார்தட்டிக்கொண்டார். அதாவது மோடி பிரதமராகும்போது 7 ஆக இருந்த எய்ம்ஸ் இப்போது 22 ஆக அதிகரித்துள்ளது. இதனைத்தான் தனது பேச்சில் குறிப்பிட்டார். ஆனால் சி.பி.ஐ.(எம்) கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியோ, “"மோடி ஆட்சிக்கு வந்தபின் அடிக்கல் நாட்டப்பட்ட 16 எய்ம்ஸில் வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுதான் இருக்கிறதே தவிர, டெல்- எய்ம்ஸை போல முழுமையான எய்ம்ஸ் ஆகத் திகழவில்லை. அதிலும் கௌகாத்தியில் எய்ம்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத் தகவல்படி, வெளிநோயாளி, உள்நோயாளிகள் பிரிவுகள் கூட செயல்படவில்லை என தெரியவருகிறது. செயல்படாமல் இருக்கும் மருத்துவமனைக்கு மூன்றாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. 2023-ல்தான் இந்த எய்ம்ஸ் முறையாக இயங்கும் என தெரியவந்துள்ளது''” என்றுள்ளார். கௌகாத்தி எய்ம்ஸ் பரவாயில்லை, தமிழகத்தில் அடிக்கல் நாட்டியதோடு சரி, அடுத்த கட்டப் பணிகள் தொடங்கவேயில்லை. எய்ம்ஸ் குட்டும் வெளியே வந்துடுச்சா!

2005-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு 15%, பட்டிய-ன மக்கள் வாழும் பகுதிக்கு 7.5 சதவிகிதமும் தனி நிதி ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்கியது. இந்த விதியால் பழங்குடியின, பட்டிய-ன மக்கள் ஓரளவு குறிப்பிடத்தக்க முறையில் வசதிகளைப் பெற்றனர். இந்நிலையில் 2023 ஏப்ரல் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டிய-ன, பழங்குடியின மக்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்வது கட்டாயமில்லை என மோடி அரசு அறிவித்தது. இந்த புதிய விதிவிலக்குக்கு எதிர்க்கட்சிகள் தரப்பி-ருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இது பழங்குடி, பட்டிய-ன மக்கள் மீதான ஒடுக்கு முறையை நிலைநிறுத்தவும், அவர்களை பின்னடைவுக்கு இட்டுச்செல்லவுமே உதவும் என எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து எம்.பி.க்களின் தொகுதி மேம் பாட்டு நிதி தொடர்பான புதிய வழி காட்டுதலை திரும்பப்பெறுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. கொடுக்கலைன்னா லும் கெடுக்கக் கூடாதுல்லா!