Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

மிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப் படுவதாகவும் கொலை செய்யப் படுவதாகவும் பா.ஜ.க.வினர் உள்ளிட்ட ஒரு கும்பல் செய்தி பரப்பமுயன்று சமீபத் தில் தோல்வியடைந்தது. இத்தகைய வதந்திகளை உ.பி. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் ட்வீட் டரில் பரப்பினார். வதந்தி பரப்பியதில், மற்றொரு பா.ஜ. செய்தித்தொடர்பாளரான நுபுர்சர்மாவின் வலைத்தளமான ஓபி இந்தியா, பீகார் பா.ஜ.க. உள்ளிட்டவையும் அடக்கம். இந்த வதந்தியை தமிழ்நாட் டோடு இணைந்து, உண்மை கண்டறியும் சில வலைத்தளங்களும் முறியடித்தன. அவற்றுள் ஒன்றுதான் ஆல்ட் நியூஸ். இதன் உரிமையாளர்களில் ஒருவர் ஜூபைர். பா.ஜ.க.வின் வதந்தி, போலிச் செய்திகளை பலமுறை உண்மையில்லை என நிரூபிப்பதால் அவர் மீது வலதுசாரி கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளனர். ட்வீட் ஒன்றுக்காக, இவரை டெல்லி போலீஸ் கைதுசெய்து 24 நாட்கள் சிறை வைக்க, நீதிமன்றம் அவரை விடுவித்தது. பீகாரி தொழிலாளர் தொடர்பான விவகாரத் துக்குப

மிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப் படுவதாகவும் கொலை செய்யப் படுவதாகவும் பா.ஜ.க.வினர் உள்ளிட்ட ஒரு கும்பல் செய்தி பரப்பமுயன்று சமீபத் தில் தோல்வியடைந்தது. இத்தகைய வதந்திகளை உ.பி. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் ட்வீட் டரில் பரப்பினார். வதந்தி பரப்பியதில், மற்றொரு பா.ஜ. செய்தித்தொடர்பாளரான நுபுர்சர்மாவின் வலைத்தளமான ஓபி இந்தியா, பீகார் பா.ஜ.க. உள்ளிட்டவையும் அடக்கம். இந்த வதந்தியை தமிழ்நாட் டோடு இணைந்து, உண்மை கண்டறியும் சில வலைத்தளங்களும் முறியடித்தன. அவற்றுள் ஒன்றுதான் ஆல்ட் நியூஸ். இதன் உரிமையாளர்களில் ஒருவர் ஜூபைர். பா.ஜ.க.வின் வதந்தி, போலிச் செய்திகளை பலமுறை உண்மையில்லை என நிரூபிப்பதால் அவர் மீது வலதுசாரி கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளனர். ட்வீட் ஒன்றுக்காக, இவரை டெல்லி போலீஸ் கைதுசெய்து 24 நாட்கள் சிறை வைக்க, நீதிமன்றம் அவரை விடுவித்தது. பீகாரி தொழிலாளர் தொடர்பான விவகாரத் துக்குப் பின், இவருக்கு அச்சுறுத்தல்களும் கொலை மிரட்டல்களும் அதிகளவில் வர ஆரம் பித்துள்ளன. மிரட்டல் விடுத்தவர்களில் பலரும் பா.ஜ.க.வுடனும் சங் அமைப்புகளுடன் நேரடி யாகத் தொடர்புள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்க பிடுங்குறதெல் லாமே தேவையில்லாத ஆணிதான்!

Advertisment

news

வேலையில்லாத, முதுமையினால் எங்கும் வேலை கிடைக்காத நபர்கள்தான் நூறுநாள் வேலைத்திட்டத்தை நம்பி வருகிறார் கள். அத்தகைய இக்கட்டான சூழலில் இருப் பவர்களிடமே பணம் பிடுங்க முயன்றிருக்கிறார் பா.ஜ.க. பிரமுகர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அமைந்துள்ளது ஸ்ரீராம புரம். இப்பகுதியில் நூறுநாட்கள் வேலை நடந்து வர, அப்பகுதி பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் என்பவர் இத்திட்டத்துக்கான பொறுப்பாளர்களிடமும் வேலையாட்களிடமும், "கட்சிக்கு நிதி கொடுங்கள். நீங்கள் வேலைசெய்யும் நூறுநாள் திட்டத்துக்கு மோடி ஆட்சியிலிருந்துதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது''’எனக்கூறி வம்புசெய்திருக்கிறார். அப்போதைக்குக் கிளம் பிய அவர் மீண்டும் மார்ச் 8-ஆம் தேதி வந்து பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத் திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரைப் பிடித்துவைத் துக்கொண்டு, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ள னர். அத்தோடு ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இனிமேல் இதுபோல் பணம் வாங்கமாட்டேன் என எழுதிக்கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதன்பிறகே அவரை அனுப்பியுள்ளனர். பிச்சையெடுத்தாராம் பெருமாள் அதைப் பிடுங்கினாராம் அனுமார்!

dd

Advertisment

மாஷா அமினி விவகாரத்தில் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈரான் மாணவிகளுக்கு விஷம் வைத்த விவகாரம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே செல்கிறது. ஈரானின் 25 மாகாணங்களைச் சேர்ந்த 5000 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 250 பள்ளிகளில் இந்த விஷம் வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர். விஷயம் சர்வதேச கவனத்தைப் பெற்றதை அடுத்து, விஷம் வைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமென ஈரானின் இஸ்லாமியத் தலைவரான அயத்துல்லா கொமேனி கோபம் காட்டினார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கோபத்தில் கொந்தளித்து எழுந்ததையடுத்து 100 பேர் தற்போது கைதாகியுள்ளனர். எனினும் ஒரு தரப்பு "தீவிர மதவாதிகளின் கைவரிசைதான் இது. ஹிஜாப்புக்கு எதிராக மாணவிகள் ஒன்றுதிரண்டது மதவாதிகளின் தன்னம்பிக்கையைக் குலைத்துள்ளது. அதன் எதிரொலிதான் இந்த விஷம்வைக்கப்பட்ட நிகழ்வு' என்கின்றனர். ஈரான் மாணவிகளுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பல நாடுகள் மூடர் கூடமாத்தான் இருக்கு!

dd

விஞ்ஞானிகள் தற்போது நுண்ணுயிரிகளை சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஏன்? ஏனெனில் பல நுண்ணுயிரிகள் அழிவின் விளிம்பிலிருக்கின்றன. பெரிய பெரிய விலங்கினங்கள் அழிவதுபோல நுண்ணுயிரிகளிலும் சில வகை அழிவில் இருக்கின்றன. நுண்ணுயிரிகளின் அழிவுக்கு பல காரணிகள் இருக்கின்றன. மனிதர்கள் சாப்பிடும் ஆன்டிபயாடிக்குகள் நுண்ணுயிரிகளை அழித்துவிடுகின்றன. இரைப்பை முதல் சிறுகுடல் வரையான பகுதி மைக்ரோபயாட்டா எனும் நுண்ணுயிரிகள் வாழும் இடமாக இருக்கிறது. நுண்ணுயிரி… பாக்டீரியா என்றதும் நமக்குத் தீங்கு செய்பவை என நினைக்கக்கூடாது. பல நுண்ணுயிரிகள் நமக்கு நன்மை செய்பவை. அவை இல்லாவிட்டால் மனிதன் உள்பட பல்வேறு உயிரிகள் அழிந்துபோகும். ஆன்டிபயாடிக் உபயோகப்படுத்தாததன் காரணமாக, நவீன மனிதனைவிட அமேசான் பழங்குடிகளின் குடலில் அதிக நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகளைக் காப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு விநோத முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் நுண்ணுயிரிகள் அதிகம் காணப்படும் பல்வேறு மாதிரிகளைச் சேகரித்துவருகின்றனர். அவற்றில் மனித மலமும் அடக்கம் என்பதுதான் விநோதம். வேஸ்ட்ல இவ்வளவு விஷயமிருக்குதா!

nkn180323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe