Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

bb

மிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் விரைவில் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. ரவி, தமிழக அரசுக்கு இந்த விஷயத்தை முன்மொழிவாக அனுப்பியிருக்கிறாராம். இதற்குமுன்பே தமிழக தீயணைப்புத் துறையில் பெண்கள் உண்டென்றாலும், அவர்கள் எல்லாம் ஆபீசர்கள்தான். இதுவரை தீயணைப்புத் துறையில் 22 பெண் அலுவலர்கள் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

Advertisment

vv

இத்துறையை சர்வதேசத் தரத்துக்கு நவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பெண்களை தீயணைப்பு வீரர்களாக நியமிக்கும் யோசனையும் இருக்கிறதாம். சிறந்த பயிற்சியுடன் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வீராங்கனைகளாக அவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றிருக்கிறார் ரவி. இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ஹர்ஷினி கன்ஹேகர் என்பது குறிப்பிடத்தக்கது. நெருப்பணைக்க கங்காவும் யமுனாவும்தானே வேணும்!

மேற்குவங்காள மாநிலத்தின் பிர்பும்

மேற்குவங்காள மாநிலத்தின் பிர்பும் மாவட்டம் பர்ஷால் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்தவர் பாது ஷேக். திரிணா முல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரை மார்ச் 21-ஆம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். ஷேக் இறந்த செய்தியை அறிந்து அவரது கிராம மக்கள் கோபத்தில் கொந்தளித்தனர். ஷேக்கின் மரணத்துக்குக் காரணம் எனக் கூறி அந்தக் கிராமத்தின் சில வீடு களுக்குத் தீவைத்தனர். விஷயம் தெரிந்து கிளம்பி வந்த தீயணைப்பு வாகனங்கள் அந்த வீடுகளின் தீயை அணைத்தன. ஆனால் இதற் குள் அந்த வீடுகளில் இருந்த 10 பேர் இறந்தனர். இதையடுத்து பா.ஜ.க. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டுமென வும், இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமெனவும் மாநில அரசு குறைத்துக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அரசியல் பகை நெருப்பைவிட ஆபத்தானது!

Advertisment

ff

2021-ஆம் ஆண்டுக்கான காற்றுத் தர அறிக்கையை சுவிஸ் நாட்டின் ஐ.க்யூ.ஏர். அமைப்பு வெளியிட்டுள்ளது. 117 நாடுகளைச் சேர்ந்த 6,475 நகரங்களின் காற்றின் தரம் இவ்வமைப்பால் பரிசோதிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 5 மைக்ரோகிராம் மாசு இருந்தால் அத்தனை பாதிப்பில்லாத காற்று என உலக சுகா தார நிறுவனம் வரையறுத்துள்ளது. ஆனால் இந்தியாவிலுள்ள எந்த ஒரு நகரமும் 5 மைக்ரோகிராமோ, அதற்குக் கீழாகவோ இல்லை. இந்தியாவிலுள்ள 50 நகரங்களில் 35 நகரங்களின் காற்றுத் தரம் படுமோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரமாக டெல்லியை அது வரையறை செய் துள்ளது. 2020-ல் டெல்லி காற்றில் 84 மைக்ரோகிராமாக இருந்த மாசு, 2021-ல் 96.4-ஆக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. இந்திய நகரங்களில் வாழ்வதென்பது நுரையீரலைக் கெடுத்துக்கொள்வதற்கு சமமென தெரிவித்துள்ளது இவ்வறிக்கை. நிலம், நீர், காற்று, ஆகாயம் அத்தனையும் மாசாக்கிட்டாங்க!

சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவுக் கேமரா பொருத்தப்பட உள்ளதாம். சி.சி. டி.வி. கேமரா தெரியும்?… அதென்ன செயற்கை நுண்ணறி வுக் கேமரா. வெறுமனே ஒரு காட்சியை பதிவுசெய்வ தோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் நடவடிக்கையை யும் கண்காணிக்கும் இத்தகைய கேமராக்கள் அச்சம், கோபம், ஆத்திரம் உள்ளிட்டவற்றைக் கவனித்து முன்கூட்டியே எச்சரிக்கும். இதனால் சிலவகையான குற்றங்களை போலீசார் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கமுடியும் என்கிறார்கள். இதற்காக சென்னை வேப்பேரி காவல் ஆணையரகத்தில் ரூ 60 கோடியில் கட்டுப்பாட்டு அறையும் அமையவிருக்கிறதாம். டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூருவிலெல்லாம் இது வந்தாச்சு. க்ரைம் ரேட் குறைஞ்சா சரிதான்!

தி காஷ்மீர் பைல்ஸ் படம் இந்தியா முழுவதும் வெளியாகி சர்ச்சையையும் வசூலையும் குவித்து வரும் நிலையில், இன்னொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இந்தியா முழுக்க படம் வெளியானாலும், சில இடங்களில் இந்தப் படம் வெளியாவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இந்தப் படத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து விநோதமான முறையில் இந்தப் படம் இங்கு வெளியாகியுள்ளது. இப்பகுதியில் முதலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு அதிகமாக கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு படம் திரையிடப்பட்டுள்ளது. திரையரங்கு முன் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த யுக்தியாம்! படம் பார்க்க 144 பேராச்சும் வந்தா சரிதான்!

bb

லங்கையின் கழுத்தை நெரித்துக் கொண்டுள்ளது பொருளாதார நெருக்கடி. தாறுமாறான விலைவாசியில் உணவைக்கூட சமைத்துண்ண முடியாத நிலையில், இலங்கையிலிருந்து தமிழர்கள் புகலிடம் தேடி இந்தியாவுக்கு வரத் தொடங்கி யுள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடியில் ஒரே தினத்தில் 16 அகதிகள் புகலிடம் தேடி அடைக்கலம் புகுந்துள்ள னர். மூன்று ஆண்கள், ஐந்து பெண்கள், எட்டுக் குழந்தைகள் படகில் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரடையாத பட்சத்தில் இந்தியா வரும் படகுகள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கலாம். எப்போது விடியும் இலங்கைக்கு?

-நாடோடி

nkn300322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe