மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

த்தியப்பிரதேசத்தி லிருந்து சென்னைக்கு அடைக்கலமாக வந்து சேர்ந் திருக்கிறார் ஒரு பெண். தனது குடும்பத்தினரே தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பாதுகாப்பு கேட்டி ருப்பது பலரையும் அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது. ஷாலினிசர்மா மத்தியப் பிரதேசம், போபால் பகுதி யைச் சேர்ந்தவர். கொரோனா காலகட்டத்தில் தனது பெற்றோர் உண்மையான பெற்றோர் இல்லை, தன்னை வளர்த்தவர்களே என அறியவந்தார். அவரது பெற்றோரான சுதாஷர்மா, பிரேசம்சந்த்சர்மா மற்றும் உறவினர்கள் தன்னை நரபலி கொடுக்கத் திட்ட மிடுவதாகவும், ஏற்கெனவே தனது தம்பியை நரபலி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

dd

தனது குடும்பம் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். செல்வாக்குடை

த்தியப்பிரதேசத்தி லிருந்து சென்னைக்கு அடைக்கலமாக வந்து சேர்ந் திருக்கிறார் ஒரு பெண். தனது குடும்பத்தினரே தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பாதுகாப்பு கேட்டி ருப்பது பலரையும் அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது. ஷாலினிசர்மா மத்தியப் பிரதேசம், போபால் பகுதி யைச் சேர்ந்தவர். கொரோனா காலகட்டத்தில் தனது பெற்றோர் உண்மையான பெற்றோர் இல்லை, தன்னை வளர்த்தவர்களே என அறியவந்தார். அவரது பெற்றோரான சுதாஷர்மா, பிரேசம்சந்த்சர்மா மற்றும் உறவினர்கள் தன்னை நரபலி கொடுக்கத் திட்ட மிடுவதாகவும், ஏற்கெனவே தனது தம்பியை நரபலி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

dd

தனது குடும்பம் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். செல்வாக்குடையது. எனவே போலீஸ் எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு ஆதரவளித்த தட்சிணாமூர்த்தியை சட்டவிரோதமாகப் பிடித்து வைத்துள்ளனர். எனவே அங்கிருந்து தப்பி தமிழ் நாட்டிலுள்ள நண்பர்களிடம் வந்துள்ளேன். ம.பி. போலீசார் என்னை சட்டவிரோதமாக பிடித்துச் செல்ல முயற்சிக்கின்றனர். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த நூற்றாண்டிலும் நரபலி நடைபெறுகிறதா என வேதனைப்பட்ட நீதிபதி ஜி.சந்திரசேகரன் மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்கவும், மத்தியப்பிரதேச போலீசார் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள் ளார். இன்னும் ஆதிவாசி மன நிலையிலே இருக்காங்களே...!

dd

ருவநிலை மாறுதலால் அதிக ஆபத்துக்கு உள்ளாகும் 50 பகுதிகளை ஒர் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 9 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. 2050-ல் உலகில் பெரும் ஆபத்துக்குள்ளாகும் மாநிலங் கள், மாகாணங்கள் என 2,600 பகுதிகளை "க்ராஸ் டொமஸ்டிக் க்ளைமேட் ரிஸ்க்' என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கை செய்துள்ளது. அதீத வெப்பநிலையால் வரும் வெள்ளம், காட்டுத் தீ, கடல் மட்டம் உயர்வதால் சொத்து, கட்டடங்களுக்கு வரும் பாதிப்புகளை இந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது. ஆபத்துக் குள்ளாகும் இடங்களில் 50 சதவிகித இடங்கள் இந்தியா, சீனா, அமெரிக்காவைச் சேர்ந்தவை என எச்சரித்துள்ளது இவ்வமைப்பு. இந்தியாவில் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆபத்து காத்தி ருக்கிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜாக்கிரதை!

dd

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க.வின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய ஆம் ஆத்மி, மேயர் தேர்விலும் வெற்றிபெற்று பா.ஜ.க.வின் பதினைந்து ஆண்டு வெற்றிப் பவனியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. நடந்து முடிந்த மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் வெற்றிபெற்றது ஆம் ஆத்மி. டெல்லி யூனியன்பிரதேசம் என்பதால் மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை ஆளுநர் வி.கே. சக்சேனா நியமித்தார். "நியமன உறுப்பினர்களும் மேயர் தேர்தலில் வாக்களிப்பர்' என பா.ஜ.க. அடம் பிடிக்க ஆம் ஆத்மி மறுக்க... 3 முறை தேர்தல் தள்ளிப்போனது. உச்சநீதிமன்றக் கதவைத் தட்டியது ஆம் ஆத்மி. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை' என தீர்ப்பளித்தது. இதையடுத்து நடந்த தேர்தலில், 236 வாக்குகள் பதிவானது. அதில் 150 வாக்குகள் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய்க்குக் கிடைக்க, அவர் மேயராக வெற்றி பெற்றிருக்கிறார். துணைமேயர் தேர்த லிலும் பா.ஜ.க. வேட்பாளர் கமல் பக்ரி யைப் பின்னுக்குத் தள்ளி, ஆம் ஆத்மி வேட்பாளர் முகமது இக்பால் வெற்றிபெற் றிருக்கிறார். இதுகுறித்த கருத்துத் தெரி வித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், "குண்டர் கள் தோல்வியடைந்தனர், பொதுமக்கள் வெற்றி பெற்றனர்'’என்றிருக்கிறார். வௌக்கமாறு தாமரையை பெருக்கித் தள்ளிடுச்சு!

-நாடோடி

nkn010323
இதையும் படியுங்கள்
Subscribe