ம் ஊரில் சினிமா கிசுகிசுக்கள் மட்டும்தான் விலைபோகும். அமெரிக்கா வில் அப்படியல்ல. சினிமா கிசுகிசுக்களுடன் பிரபல துறைகளைச் சேர்ந்தவர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் கிசுகிசுக்களுக்கும் வரவேற்பிருக் கும். அப்படியொரு கிசுகிசு அமெ ரிக்காவில் சமீபமாக கிளம்பி யிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில்கேட்ஸுடன், மற்றொரு சாஃப்ட்வேர் நிறுவனமான ஓரக்கிளின் தலைமைச் செயல் அலுவலரின் மனைவியான பௌலா ஹர்டுடன் இணைத்து கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

d

இதில் பௌலாலி மார்க் ஹர்டின் மனைவி. கணவர் 2019-ல் மரணமடைந்துவிட்டார். பில்கேட்ஸும், மனைவி மெலிந்தா கேட்ஸுடன் 2021-ல் விவாகரத்தை அறிவித்துவிட்டார். இருவரும் சேர்ந்து மைக்ரோசாஃப்டின் அறக்கட்டளையை மட்டும் நிர்வகித்துவருகிறார்கள். அமெரிக்க பத்திரிகையான பீப்பிள், இருவரும் டென்னிஸ் போட்டியொன்றின்போது சேர்ந்து காணப்பட்டதை வைத்து இந்த யூகத்தைக் கிளப்பி யிருக்கிறது. இதுகுறித்து இருவரும் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை. கார்ப்பரேட் பில்லியனர்களான இருவரும் சட்டப்படி ஜோடி சேர்ந்தால் நமக்குச் சொல்ல என்ன இருக்கிறது? அவங்க காதலிச்சா என்ன... கடலை போட்டாத்தான் என்ன!

dழக்கமாக ஆர்.எஸ்.எஸ். மீது, பிராமணர்களுக்கு ஆதரவாகவும் சிறு பான்மை இந்துக்களுக்கு எதிராகவும் பேசுவ தாகத்தான் குற்றச்சாட்டு எழும். வாக்கு அர சியல் லாபத்துக்காக, சமீபத்தில் பிராமணர் களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதாக குற்றம்சாட்டப் பட்டதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத் திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் மோகன் பகவத் பேசும் போது, "சாதியமைப்பு கட வுளால் விதிக்கப்பட்டது அல்ல. அது பண்டிட்டு களால் உருவாக்கப்பட் டது''’எனத் தெரிவித் தார். இதில் பண்டிட்டு கள் என்பது கோயிலில் அர்ச்சகராக பணியாற்றும் பிரிவினரைக் குறிப்பிடும் என்றும், இந்து மதத்தில் நிலவும் கடுமையான சாதியப் படிநிலைகளை பிராமணர்கள் உருவாக்கினார்கள் எனும் பொருளில் பேசியுள்ளார் என பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். வாக்கு வங்கி அரசியலை மனதில்கொண்டு சமூகத்தில் பிளவை உருவாக்கும் முயற்சியில் வேண்டு மென்றே பேசியுள்ளார். அவரது பேச்சு ஒட்டு மொத்த பிராமண சமூகத்தையும் இழிவுபடுத்தி யுள்ளது எனத் தெரிவித்தார் ஓஜா. அவங்க ஆயுதமே அவங்க கையை அறுக்குது. விதைச்சதைத்தான் அறுக்கமுடியும்!

Advertisment

டப்பு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான பட்ஜெட்டை மூன்றில் ஒரு பங்காகக் குறைத் துள்ளது ஒன்றிய அரசு. மாறாக, கேரளாவோ மற்ற எல்லா மாநிலங்களைவிடவும் இத்திட் டத்தின்கீழ் சிறப்பாக இயங்கி பாராட்டைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் சராசரியாக நூறு நாட்கள் வேலை கொடுக்கப்படவேண்டும். நிதிக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் அவ்வாறு வழங்கமுடிவதில்லை. இருந்தபோதும் தேசிய அளவில் இத்திட்டத்தின் சராசரி நாட்கள் 50 என் றால், கேரளாவில் 64.41. 100 நாட்கள் வேலை வழங்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களில் 8, கேரளாவில் இது 31. பட்டியலின மக்களுக்கு வேலை வழங்குவதில் தேசிய சராசரி 57.52, கேரள சராசரி 86.2. பழங்குடியினருக்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் வேலைசெய் யும் தொழிலாளர்களில் தேசிய அளவில் 55 சத விகிதம் பெண்கள், கேரளாவிலோ 90 சதவிகிதம். இத்திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி வேலைநாட்கள் உருவாக்கப்பட்டுள் ளது. அனைத்தையும் பெருமிதமாகக் குறிப்பிட்ட கேரள அமைச்சர் ராஜேஷ், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான சம்பளத்தையும், தளவாட, நிர்வாகச் செலவீனத் தொகை 416.36 கோடியை யும் ஒன்றிய அரசு பாக்கிவைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் திட்டம்னா கசக்குது!

22

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 2020-ல் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளி, புதிய கட்டடத்துடன் இயங்குவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்தின் மணி நகரில் இயங்கிவந்த மேல்நிலைப்பள்ளி, இம்மாநிலத்தின் பழமைவாய்ந்த தமிழ்வழிக் கல்விப் பள்ளியாகும். மாணவர்கள் சேர்க்கை, நிதித் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் 2020-ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதையடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு, அந்தப் பள்ளியைத் திறக்கச் சொல்லி அப்போதைய முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதினார். இதற்கிடையில் ஆட்சிமாற்றம் நிகழ்த்ததையடுத்து தி.மு.க. அரசு இந்தப் பணிகளில் ஆர்வம்காட்டியது. இந்தப் புதிய பள்ளியின் கட்டடத்துக்கான அடிக்கல், பிப்ரவரி 12-ஆம் தேதி நாட்டப்பட்டது. இதில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். இங்குள்ள வளாகத்தில் குஜராத் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தார். தமிழகத்திலிருந்து குஜராத்தில் ஐ.ஏ.எஸ்.களாகப் பணியாற்றும் நபர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தமிழன்னையை மனம்குளிர வெச்சிருக்காங்க!

நாடோடி