Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

newss

கொரோனா தொற்றின்போது, கொரோனா மட்டுமே முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட்டதால் ஊரடங்கு காலத்தில் காசநோய் பெருமளவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் தமிழக அரசு காசநோய் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் காசநோய் பிரிவுக்கான இயக்குநரும் மருத்துவருமான ஆஷா பிரெடரிக், “"தற்போது காசநோய் மற்றும் சர்க்கரை நோய் இணைந்து காணப்படும் போக்கு ஆய்வுகளில் தட்டுப்படத் தொடங்கியுள்ளது. இதனால் சிகிச்சை பலனளிக்காமை, மரணம், காசநோய் மீண்டும் தொற்றுதல் போன்றவை ஏற்படுகின்றன. கட்டுக்குள் நிற்காத சர்க்கரை, ஏனென்றே தெரியாமல் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் காசநோய்க்கான சோதனைகள் மேற்கொள்ளவேண்டும்''’என்கிறார். 2022-ல் மட்டும் காசநோயால் தமிழகத்தில் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடு

கொரோனா தொற்றின்போது, கொரோனா மட்டுமே முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட்டதால் ஊரடங்கு காலத்தில் காசநோய் பெருமளவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் தமிழக அரசு காசநோய் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் காசநோய் பிரிவுக்கான இயக்குநரும் மருத்துவருமான ஆஷா பிரெடரிக், “"தற்போது காசநோய் மற்றும் சர்க்கரை நோய் இணைந்து காணப்படும் போக்கு ஆய்வுகளில் தட்டுப்படத் தொடங்கியுள்ளது. இதனால் சிகிச்சை பலனளிக்காமை, மரணம், காசநோய் மீண்டும் தொற்றுதல் போன்றவை ஏற்படுகின்றன. கட்டுக்குள் நிற்காத சர்க்கரை, ஏனென்றே தெரியாமல் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் காசநோய்க்கான சோதனைகள் மேற்கொள்ளவேண்டும்''’என்கிறார். 2022-ல் மட்டும் காசநோயால் தமிழகத்தில் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, காசநோய் உள்ளவர்களைக் கண்டறிதல், காசநோயைக் கட்டுக்குள் கொண்டுவருதல் போன்றவற்றில் தமிழக அரசு வேகம் காட்டத் தொடங்கியுள்ளது. காசநோய்- சர்க்கரை ஆபத்தான ஜோடியாச்சே!

Advertisment

கேரளாவின் பிரபலமான வழக்குகளில் ஒன்று சிஸ்டர் அபயா வழக்கு. 1922-ல் கேரளாவின் கோட்டயம் நகரில் செயிண்ட் ddப்யூஸ் கான்வென்ட் கிணற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் சிஸ்டர் அபயா. முதலில் தற்கொலை வழக்காகப் பதியப்பட்ட இதில், பின்பு பலருக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்தது. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிஸ்டர் செபி கைதுசெய்யப்பட்டார். பாதர் காட்டூர் என்பவருடன் சேர்ந்து செபி, அபயாவைக் கொன்று கிணற்றில் வீசியதாக சி.பி.ஐ. கூறியது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சிஸ்டர் செபிக்கும் பாதர் காட்டூருக்கும் ஆயுள் தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதித் தது. 2009-ஆம் ஆண்டு சிறைசென்ற சிஸ்டர் செபியை சி.பி.ஐ. கன்னித் தன்மை சோதனைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த வர்மா தற்போது வழங்கிய தீர்ப்பில், "ஒரு கைதியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ஐ மீறிய செயல்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சோதனைக்குப் பின் அதன் முடிவுகள் வெளியில் கசிந்ததுடன், பல்வேறு கட்டுக்கதைகள் கிளம்பவும் காரணமாகியது. இந்த வழக்கில்தான் நீதிபதி எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். கோர்ட் குட்டுனாத்தான் புத்தி வருது!

Advertisment

news

ரு பலூன் விவகாரத்தில் சீனாவை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பலூன் அந்நாட்டு ராணுவத்தின் கவனத்தை ஈர்க்க, அதன் பின்னணியைத் துருவினர் அதிகாரிகள். அது சீனாவின் கைங்கர்யம் எனவும், உளவு பார்ப்பதற்காகவே அந்த பலூன் பறக்கவிடப்பட்டது என்பது தெரியவந்தது. அமெரிக்க போர்விமானம் அந்த பலூனைச் சுட்டுவீழ்த்த, அட்லாண்டிக் கடலில் போய் விழுந்தது. இதன் உதிரிபாகங்களை மீட்டு உளவுக் கருவிகளை சோதனைசெய்ய அமெரிக்கா முயற்சித்துவருகிறது. இதனையடுத்து 40 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை சந்தித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் வெண்டி ஷெர்மேன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல ஆண்டுகளாகவே இந்தியா, ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளையும் சீன உளவுப் பலூன்கள் கண்காணித்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பலூன்னு இளப்பமா நினைச்சா, சீனாக்காரங்க அதைவெச்சு எவ்ளோ பெரிய வேலை பார்த்துருக்காங்க! பட்னு வெடிச்சிருச்சே பலூன்!

news

குழந்தையைப் பெற்றெடுத்து, இந்தியாவின் முதல் மாற்றுப் பாலின தாய்- தந்தை என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறது கேரளாவின் ஜியா-ஜகத் ஜோடி. ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாற விரும்பியவர். அடிப்படையில் நடனக் கலைஞர். ஜகத் பாசில் கணக்காளர். இவர் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறவிரும்பியவர். மூன்று வருடங்களுக்கு முன் அறிமுகமான இவர் கள் இணைந்து வாழ முடிவுசெய்தனர். முதலில் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள முடிவுசெய்த இவர்கள், அதிலிருந்த சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தை பெற்றுக்கொள்வதெனத் தீர்மானித்தனர். ஆணாக மாறவிரும்பிய ஜகத், ஏற்கெனவே மார்புகளை அகற்றியிருந்தார். அதிர்ஷ்டவசமாக கர்ப்பப்பையை அகற்றி யிருக்கவில்லை. மருத்துவர்களின் துணையுடன் கர்ப்பம்தரித்த ஜகத், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். அனைத்து மருத்துவச் செலவுகளையும் மருத்துவ மனையே பார்த்துக்கொண்டது. குழந்தைக் கான பாலும், மருத்துவமனையிலுள்ள தாய்ப் பால் வங்கியிலிருந்து பெற்றுத்தரப்படுகிறது. தாயுமானவ(ள்)ர்!

-நாடோடி

nkn150223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe