Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரான சுதா தர்மலிங்கம் கலந்துகொண்டார்.

Advertisment

gg

வார்டில் தனியார் மூலம் அகற்றப்பட்ட குடிநீர்த் தொட்டியை மீண்டும் அமைப்பது, பேளுக்குறிச்சி ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு மேற்காக அமைந்துள்ள சாலையில் பள்ளங்கள் விழுந்து மழைநீர் தேங்கி பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியே செல்ல இயலாமல் உள்ளதால் அந்த சாலையை சீர் செய்யவும், பேளுக்குறிச்சி ஊராட்சி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையுள்ளதால் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எதிர்காலம் கருதி உடனடியாக நிரப்பவும் கோரி கிராம சபா தலைவரிடம் ஆம் ஆத்மி கட்சி சார்பாக சுதா தர்மலிங்கம் கோரிக்கை மனுவை அளித்தார். குடியரசு தினத்துல குடிமக்கள் பணியில இறங்கியிருக்காங்க!

ர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவின் வரவுக்குப் பின், பலரிடமும் மெல்ல மெல்ல நடுக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. நீங்கள் உரையாற்றினால் பதில்சொல்லக்கூடிய சாட்பாட் தொழில்நுட்பங்களில் இந்த செயற்கை நுண்ணறிவுதான் பயன்படுத்தப்படுகிறது. ரோபோவுடன் இந்த செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும்போது மனிதனுக்கு இணையாக சிந்திக்கவும் செயலாற்றவும்கூடிய எந்திரங்கள் வந்துவிடும். இதனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதனின் இடத்தைக் குறைத்து விட்டு செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை பெருமளவு நாடிச்செல்லும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதை நிரூபிப்பது போல் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞ ராக அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகிறது. டூநாட் பே எனும் பெயரில் சட்ட ஆலோசனை மையத்தை நடத்திவரும் இங்கி லாந்தின் ஜோஸ்வா பிரவுடர், ரோபோ வழக்கறிஞரை உரு வாக்கியுள்ளார். மிகக் குறைந்த கட்டணத்தில் குடியுரிமை, மனித உரிமை சம்பந்தமான வழக்குகளில் இது ஆஜராகுமாம். அமெரிக்க நீதிமன்றத்தில் முதல்முறையாக ஆஜராக உள் ளது. ஆனாலும் எந்த நகரத்தில், யாருடைய வழக்கில் ஆஜ ராகவுள்ளது என்ற விவரங்களை அமெரிக்கா வெளி யிடவில்லை. கனம் ரோபோட்டார் அவர்களே!

Advertisment

ff

நாள், மாதக் கணக்கைத் தாண்டி வருடக் கணக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறது ரஷ்ய- உக்ரைன் போர். சமீபத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்ததை வைத்து குறிபார்த்து தாக்குதல் நடத்தியது உக்ரைன். இதில் ரஷ்ய வீரர்கள் பலர் பலி யாகினர். இதையடுத்து உக்கிரமான ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்துவரு கிறது. ஜனவரி 14-ஆம் தேதி டினிப்ரோ நகர அடுக்கு மாடிக் குடியிருப்பின்மீது நடத்திய தாக்குதல் முக்கியமானது. இதில் 29 பேர் இறந்ததாக உக்ரைன் தெரிவித் தாலும், இறப்பு எண் ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும் என்கிறது ரஷ்யா. 1700 பேர் அந்த அடுக்கு மாடியில் வசித்துவந்த னர். அத்துடன் கிவ், கார்கிவ் நகரங்களையும் தொடர்ந்து தாக்கி வருகிறது ரஷ்யா. இதையடுத்து மேற் கத்திய நாடுகளிட மிருந்து ருஷ்யாவைத் தாக்குவதற்கான டாங்கி, ஏவுகணை உள்ளிட்ட வைகளை உக்ரைன் எதிர்பார்த்துவருகிறது. இதில் ஜெர்மனி, உக்ரை னுக்கு டாங்கிகளை அளிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இதையடுத்து உக்ரைனுக்கு டாங்கி களைக் கொடுத்தால் அதற் கான பிரதிபலனை அனுபவிக்க வேண்டி யிருக்குமென ஜெர்மனியை ரஷ்யா எச்சரித்துள்ளது. மூன்றாம் உலகப் போரை ஆரம்பிச்சுடா தீங்கப்பா!

பி.பி.சி. உருவாக்கியுள்ள 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படமான, “இந்தியா: தி மோடி கொஸ்டின்” இந்தியாவில் பரவு வதைத் தடுக்க படத்தின் இணைப்புகளைப் பகிரும் யூடியூப் வீடியோக்கள், ட்விட் டர் பதிவுகளைத் தடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கேரளத்தில் இந்திய ஜனநாயகர் வாலிபர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்றவை திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம் போன்ற பல இடங்களில் இந்த ஆவணப் படத்தைத் திரையிட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜய னிடம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் புகார் செய்துள்ளார். இதேபோல ஹைதராபாத் பல்கலையில் ஆவணப்படம் திரையிடப் பட்டதையடுத்து பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் ஆவணப் படத்தைத் திரையிட முயல, கல்லூரி நிர்வாகம் மின்சாரத்தைத் துண்டித்தது. இதையடுத்து தங்கள் மொபைல் போன், லேப்டாப்பில் ஆவணப்படத்தை பார்க்க முயல, அவர்களை இருட்டிலிருந்து சிலர் கற்களால் தாக்கியதாகத் தெரிகிறது. அது ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த வர்கள்தான் என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊர்வாயையும் இன்டர்நெட்டையும் மூட வழிகிடையாது!

-நாடோடி

nkn010223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe