Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

டந்த ஒருமாதமாகவே ஜோஷி மத் நகரம் செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் மெல்ல மெல்ல வீடுகளும் கட்டடங்களும் விரிசல் விட, சாலைகள் பிளவுபட ஆரம்பித்தன. வீடுகள் புதைய ஆரம்பித்த நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போது மின்கம்பங்களும் சரிய ஆரம்பித்த நிலையில் அவற்றால் ஷார்ட் சர்க்யூட் ஏற்படக் கூடாது என அவற்றைச் சரிசெய்ய குழு ஒன்று விரைந்துள்ளதாம்.

Advertisment

ee

சரி, ஜோஷிமத் நகரம் ஏன் புதைந்தபடியே செல்கிறது? நகரின் மோசமான திட்டமிடல், கழிவுநீரை வெளியேற்றும் வடிகால்கள் முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த சரிவால் ஏற்பட்ட விளைவுகளால் காலப்போக்கில்தான் அங்கு மண் செட்டிலாகும். அதற்கு முன்னே அங்கு நகரத்தை உருவாக்கியதும், அருகிலேயே நீர்மின் திட்

டந்த ஒருமாதமாகவே ஜோஷி மத் நகரம் செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் மெல்ல மெல்ல வீடுகளும் கட்டடங்களும் விரிசல் விட, சாலைகள் பிளவுபட ஆரம்பித்தன. வீடுகள் புதைய ஆரம்பித்த நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போது மின்கம்பங்களும் சரிய ஆரம்பித்த நிலையில் அவற்றால் ஷார்ட் சர்க்யூட் ஏற்படக் கூடாது என அவற்றைச் சரிசெய்ய குழு ஒன்று விரைந்துள்ளதாம்.

Advertisment

ee

சரி, ஜோஷிமத் நகரம் ஏன் புதைந்தபடியே செல்கிறது? நகரின் மோசமான திட்டமிடல், கழிவுநீரை வெளியேற்றும் வடிகால்கள் முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த சரிவால் ஏற்பட்ட விளைவுகளால் காலப்போக்கில்தான் அங்கு மண் செட்டிலாகும். அதற்கு முன்னே அங்கு நகரத்தை உருவாக்கியதும், அருகிலேயே நீர்மின் திட்டத்தையும் ஆரம்பித்ததும் தவறான அணுகுமுறை என்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். இத்திட்டத்துக்காக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் வலுவான துளையிடல்கள் மேற் கொண்டதும் நகர் அழிவுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான், 81 குடும்பங்களும், 678 கட்டடங்களும் மண்ணில் புதையும் நிலை ஏற்பட்டது என்கிறார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

கொரோனாவால் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஐம்பதாண்டுகளில் காணாத சரிவை எதிர் கொண்டுள்ளது. பூஜ்ய சதவிகித கொரோனா தொற்று என்பதை இலக் காகக் கொண்டு, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடு மையாக அமல் படுத்தப்பட்டன. இதனால் சீனாவின் பெரிய மாகாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஊரடங்குக்கு உள்ளாயின. இதனால் பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலை கள் முடங்க, மக்களும் வேலை யின்றி வீட்டிலேயே அடைந்து கிடக்கவேண்டியதானது. அதன் பின்விளைவுகள் தற்போது சீனாவில் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. சீன உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4 சதவிகிதத் தில் இருந்து 3 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. 2022-ல் 17.94 ட்ரில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது அந்நாட்டு அரசு திட்ட மிட்ட தொகையைவிடவும் 5.5 சதவிகிதம் குறைவாம். குதறியெடுத்துடுச்சே கொரோனா!

Advertisment

த்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரு இறந்த உடல்களிலிருந்து தலா ஒரு கண் காணாமல் போயிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாள் இரவில் மோதிலால் கோண்ட், ரமேஷ் அகிர்வார் என இரு உடல்களிலிருந்து தலா ஒரு கண் காணவில்லை. இதில் ஒரு உடல் மார்ச்சுவரியில் அறையில் வைக்கப்பட்டிருக்க, மற்றது ப்ரீஸரில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. மருத்துவர்களோ மார்ச்சுவரிப் பெருச்சாளிகள் கண்ணைக் கடித்திருக்கலாம் என்கிறார்கள். ப்ரீஸருக்குள் இருந்த உடலுக்குச் சொந்தக்காரர் ஜனவரி 16-ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அந்த நோயாளி ப்ரீ-எம்.எல்.சி. எனும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நோய் வகைப்பாட்டைச் சேர்ந்தவராம். இதற்காக போலீஸுக்குத் தகவல் கொடுத்தும் வரவில்லை. ஜனவரி 19-ஆம் தேதி போஸ்ட்மார்ட்டத்துக்காக தகவல் தந்தும் போலீஸ் வரவில்லை. இதற்கிடையில் எலி கடித்துவிட்டது என்கிறார்கள் மருத்துவர்கள். இரண்டு உடலிலும் தலா ஒரு கண்ணை எப்படி கடிக்கும்?… அதுவும் ஒரு உடல் ப்ரீஸரில் இருக்கும்போது… என சந்தேகம் எழுப்பு கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள். அரசு ஆஸ்பத்திரின்னா எதுவேணாலும் நடக்கும்!

news

சு பாதுகாப்பு என்ற பெயரில் கால் நடை விற்பதையும் வாங்குவதையும் கெடுபிடி யாக்கியிருக்கின்றன பா.ஜ.க. ஆட்சியிலிருக் கும் மாநிலங்கள். குஜராத் மாவட்ட நீதிமன்றத் தில் 2020 ஜூலை 18-ல் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அமீன் என்பவர் இறைச்சிக்காக காளைகளையும் பசுக்களையும் கடத்தினார் என்பதுதான் வழக்கு. இந்த கால்நடைகளை ஏற்றிச்சென்ற வாகனத்தில் விலங்கு களுக்கு நீர் வைக்கவில்லை, முதலுதவி சாதனங்கள் இல்லையென்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சமீபத்தில் இதில் தீர்ப்பளித்த நீதிபதி, அமீன் இறைச்சிக்காக அவற்றைக் கடத்திய தாகக் கூறி, 5 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்தார். அத்தோடு நிறுத்தாமல், பசுவின் அருமை பெருமைகளையும் தீர்ப்பில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். “மாட்டுச் சாணத்தால் கட்டப்பட்ட வீடுகளை அணு கதிர் வீச்சு கூட ஒன்றும் செய்யாது. பசு என்பது வெறும் விலங்கல்ல, பசுவினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை ஒட்டுமொத்த உல கத்தாலும் விவரித்துவிடமுடியாது. பசுவின் ஒரேயொரு துளி ரத்தம்கூட சிந்தாத நாளில் இந்த உலகத்தின் அனைத்துப் பிரச்சனை களும் தீர்ந்துவிடும். பசுவின் கோமியத்தைக் குடிப்பதால் குணப்படுத்தமுடியாத பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்” என் றிருக்கிறார். கொரோ னாவுக்கே கோமியம் குடிச்ச மாநிலம் தான அது!

-நாடோடி

nkn280123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe