Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ff

திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி 1 நடைபெற்றுவருகிறது. அதில் தமிழகத்தின் கூடூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி அட்டகாசமான சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

Advertisment

ff

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் கவனம் பெற்ற ஹிமாதாஸ், டூட்டிசந்த் ஆகியோரோடு தனலட்சுமியும் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் தனலட்சுமி தங்கப் பதக்கத்தை வென்றார். விஷயம் அதுவல்ல... இந்தியாவின் பெண் உசேன் போல்ட் எனப்படும் பி.டி. உஷா 200 மீட்டர் தூரத்தை 20.26 விநாடிகளில் கடந்ததே இதுவரை சாதனை. இந்தப் போட்டியில் தனலட்சுமி அந்த தூரத்தை 20.21 விநாடிகளில் கடந்து 23 ஆண்டு சாதனையை முறியடித்திருக்கிறார். கூடூர் மாணவிக்கு தமிழகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது. வாம்மா மின்னல்!

dd

Advertisment

மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவில் இதுவரை ஆறு பேர் பெற்றுள்ளனர். ரீட்டா பரியா, ஐஸ்வர்யாராய், டயானா ஹேடன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா, மனு

திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி 1 நடைபெற்றுவருகிறது. அதில் தமிழகத்தின் கூடூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி அட்டகாசமான சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

Advertisment

ff

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் கவனம் பெற்ற ஹிமாதாஸ், டூட்டிசந்த் ஆகியோரோடு தனலட்சுமியும் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் தனலட்சுமி தங்கப் பதக்கத்தை வென்றார். விஷயம் அதுவல்ல... இந்தியாவின் பெண் உசேன் போல்ட் எனப்படும் பி.டி. உஷா 200 மீட்டர் தூரத்தை 20.26 விநாடிகளில் கடந்ததே இதுவரை சாதனை. இந்தப் போட்டியில் தனலட்சுமி அந்த தூரத்தை 20.21 விநாடிகளில் கடந்து 23 ஆண்டு சாதனையை முறியடித்திருக்கிறார். கூடூர் மாணவிக்கு தமிழகம் முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது. வாம்மா மின்னல்!

dd

Advertisment

மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவில் இதுவரை ஆறு பேர் பெற்றுள்ளனர். ரீட்டா பரியா, ஐஸ்வர்யாராய், டயானா ஹேடன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா, மனுஷி சில்லர் ஆகியோர்தான் அந்த ஆறுபேர். அவர்களில் சினிமாவிலும் தாக்கம் செலுத்தியதால் ஐஸ்வர்யாவும், பிரியங்காவும் இன்னும் பிரபலமானார்கள். இந்த வருடம் இந்தியாவுக்கு மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. போலந்தின் கரோலினா மிஸ் வேர்ல்டு 2021 பட்டத்தை தட்டிச் சென்றிருக்கிறார். இந்தியாவுக்கு நேரடியாக பரிசு இல்லாவிட்டாலும், சுற்றிவளைத்து ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. இரண்டாவது பரிசு அமெரிக்காவின் ஸ்ரீசைனிக்குக் கிடைத்திருக்கிறது. இந்த சைனியின் பூர்வீகம் பஞ்சாப்பின் லூதியானா. அழகுக்கும் திறமைக்கும் இங்கே பஞ்சமேயில்லை!

மிழகத்தில் பத்து வயதுச் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால் தண்டனைக்கு ஆளானவரின் வயதுதான் ஆச்சரியத்துக்குரியது. அவரது தற்போதைய வயது 103. 2018-ல் இந்தக் குற்றச்சாட்டு எழுந்தபோது அவரது வயது 98. முதியவரின் வீட்டில் வாடகைக்கிருந்த குடும்பத்தினரின் 10 வயதுக் குழந்தையிடம் தனிமையில் இருந்தபோது அத்துமீற முயல, குழந்தை தன் தாயிடம் விவரத்தைச் சொல்லிவிட்டது. ஆவடி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் பதிவாக, முதியவர் மேல் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவானது. நான்காண்டு விசாரணைக்குப் பின் பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும், ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், ஐந்தாயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.45,000 நிவாரணமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். இந்த வயசுல இது தேவையா!

dd

திருவாரூர் மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் ஒரு மாணவியைப் பாராட்டியிருக்கிறார்கள் என்றால் வியப்பாக இல்லையா! திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பிரிய தர்ஷினிதான் அந்த மாணவி. அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? பல்வேறு காரணங்களால் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்ற 20 மாண வர்களை அடையாளம்கண்டு, அவர்களிடமும் குடும்பத்திட மும் அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்களிடமும் பேசி பள்ளி திரும்பவைத் திருக்கிறார். வயதுக்கு மீறிய சாதனைதான். பிரியதர்ஷினியே ஆரம்பகட்டத்தில் வேலைக்குப் போய்க்கொண்டு, கல்வியைத் தொடர்ந் தவர் என்பதால் கல்வியின் அருமை தெரிந்தவர். கொரோனா காலகட்டத்துக்குப் பின் பள்ளிவராமல் வேலைக் குப் போன மாணவர் களை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பள்ளிக்கு அழைத்துவந்த சாதனைக்குத்தான் பிரியதர்ஷினிக்கு பாராட்டு குவிகிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

ஸ்ஸாம் மாநிலம் காம்பூர் மாவட்டம் மிலான்பூர் பகுதியில் அரிய வகைக் கழுகுகள் நூற்றுக்கணக்கில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டது வனத்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தவிரவும் உயிருக்குப் போராடும் சில கழுகுகளை மருத்துவர்கள் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த வருடம் 34 கழுகுகள் அஸ்ஸாமின் வேறொரு மாவட்டத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கழுகுகளின் உணவில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். கழுகுகளுக்கு அருகே உயிரிழந்த ஆட்டின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. கழுகுகளுக்கு விஷம் வைத்தது யார் என்ற விசாரணையில் வனத்துறை இறங்கியுள்ளது. கழுகுப் பார்வையில விசாரிக்கட்டும்!

ஆண்டுதோறும் ஐ.நா. ஆதரவுடன் தனியார் அமைப்பொன்று உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 146 நாடுகள் பட்டியலிடப்படும் இந்த அட்டவணையில் ஃபின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதுவும் ஐந்தாவது முறையாக. நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு அலகுகளை எடுத்துக்கொண்டு அந்நாட்டு மக்களிடம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு மதிப்பெண்கள் இடப்பட்டு வரிசைப்படுத்தப்படும். இதில் வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன. கோவிட் தொற்றுக்குப் பின் பல்வேறு நாடுகளின் இடங்கள் தலைகீழாக மாறியுள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கெல்லாம் கீழே 136-வது இடத்தில் இருக்கிறது இந்தியா! இதுதான் இந்தியா ஒளிருகின்ற லட்சணமா!

-நாடோடி

nkn260322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe