Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

மல் மகள் ஸ்ருதிஹாசன் "வால்டர் வீரய்யா' படத்தில் நடித்திருந்தார். சிரஞ்சீவி, ரவிதேஜா நடித்து கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து "ஸ்ருதிஹாசனுக்கு மனநலப் பிரச்சனை எனவும், அதற்கான சிகிச்சையில் இருந்ததால்தான் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை' என சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

Advertisment

dd

இதையறிந்த ஸ்ருதிஹாசன், “"மனநல பிரச்சனை எனக்கு இல்லை. இந்தச் செய்தியை கிளப்பியவர்களுக்குத்தான் இருக்கும் போலிருக்கிறது. மனநல பிரச்சனை என்பதும் மற்ற பிரச்சனைகளைப்போல ஒரு பிரச்சனைதான். இத்தகைய பேச்சுக்கள்தான் மனநல பிரச்சனையை நினைத்து நடுங்கச் செய்கின்றன. அன்றைக்கு எனக்கு வைரல் பீவர். அதனால்தான் புரமோஷனில் கலந்துகொள்ளவில்லை'’என்று ரொம்பவே கூலாகப் பதிலளித்திருக்கிறார். ஸ்ருத

மல் மகள் ஸ்ருதிஹாசன் "வால்டர் வீரய்யா' படத்தில் நடித்திருந்தார். சிரஞ்சீவி, ரவிதேஜா நடித்து கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து "ஸ்ருதிஹாசனுக்கு மனநலப் பிரச்சனை எனவும், அதற்கான சிகிச்சையில் இருந்ததால்தான் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை' என சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

Advertisment

dd

இதையறிந்த ஸ்ருதிஹாசன், “"மனநல பிரச்சனை எனக்கு இல்லை. இந்தச் செய்தியை கிளப்பியவர்களுக்குத்தான் இருக்கும் போலிருக்கிறது. மனநல பிரச்சனை என்பதும் மற்ற பிரச்சனைகளைப்போல ஒரு பிரச்சனைதான். இத்தகைய பேச்சுக்கள்தான் மனநல பிரச்சனையை நினைத்து நடுங்கச் செய்கின்றன. அன்றைக்கு எனக்கு வைரல் பீவர். அதனால்தான் புரமோஷனில் கலந்துகொள்ளவில்லை'’என்று ரொம்பவே கூலாகப் பதிலளித்திருக்கிறார். ஸ்ருதி பிசகலையாம்!

யர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் மத்திய அரசின் பிடியைக் கொண்டுவர பா.ஜ.க. அரசு தொடர்ந்து அழுத்தம் தந்துவருகிறது. இதன் முதற்கட்டமாக, பா.ஜ.க. ஆட்சிக்குவந்ததுமே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை இயற்றியது. அதனை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது. எதிர்க்கட்சிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஆளும் அரசின் போக்கை விமர்சித்தபோதும் மத்திய அரசு தன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குமீது விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலியிடப் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, "புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும்வரை இந்தச் சிக்கல் தொடரும்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு, மத்திய சட்ட அமைச்சர் நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் மத்திய-மாநில அரசின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமென பரிந்துரை செய்திருந்தார். இதைக் குறித்து காங்கிரஸ், "மத்திய அரசு நீதித்துறையை மிரட்டுகிறது'’என விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில், "கொலீஜியத்தில் அல்ல… நீதிபதிகளை தேர்வுசெய்யும் மதிப்பீட்டுக் குழுவிலேயே மத்திய -மாநில அரசின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமென' குறிப்பிட்டதாக” கிரண் ரிஜ்ஜு விளக்கமளித்துள்ளார். நீதிபதிகளுக்கே தீர்ப்பெழுதப் பார்க்கிறாங்க!

Advertisment

dd

மிழகத்தில் 2023- ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாநில அரசு தயாரித்தளித்த உரையில் சில பகுதிகளை விடுத்தும், சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி சர்ச்சையான விவகாரம் அடங்கும்முன்பாக, டெல்லி ஆளுநர் விவகாரம் கவனத்துக்கு வந்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துவருகிறது. இங்கு வி.கே. சக்சேனா துணைநிலை ஆளுநராக பதவிவகித்து வருகிறார். அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக, கல்வியில் சிறந்துவிளங் கும் ஃபின்லாந்துக்கு அனுப்பத் திட்ட மிட்டிருந்தது டெல்−லி அரசு. இதற்கு மாநில ஆளுநர் சக்சேனா எதிர்ப்புத் தெரிவித் தார். இதையடுத்து மாநில அரசின் பணிகளில் ஆளுநர் தலையிடுவதாகக் கூறி, டெல்லி− சட்டப்பேரவை நாள்முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டதோடு, டெல்−லி சட்ட மன்ற உறுப்பினர் கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று எதிர்ப் புத் தெரிவித்த னர். இதையடுத்து அரசியல்சாசன அமர்வுக்கு இந்தப் பிரச்சனையை எடுத்துச்சென்ற மத்திய அரசு, தில்−லி துணைநிலை ஆளுநருக்கு எதிரான பேரணி விரும்பத்தகாதது என முறையிட்டது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. டெல்−லி மக்களின் வரிப் பணம் இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆளுநருக்கு என்ன பிரச்சனை?' என கேள்வியெழுப்பியிருக்கிறார். "கில்−' முதல்வரும் டெல்−லி ஆளுநரும்!

dd

நாசா விண்வெளி மையம் 2023-ஆம் ஆண்டுக்காக, நாசா சார்பில் வெளியிடப்படும் நாட்காட்டியில் இடம்பெறும் ஓவியங் களைத் தேர்வுசெய்ய போட்டியொன்றை நடத்தியது. உலக அளவில் பயிலும் குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம் என அறிவிப்புச் செய்திருந்தது. இந்தப் போட்டியில் பழனியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் 6-ஆம் வகுப்புப் பயிலும் மாணவி தித்திகா கலந்துகொண்டார். 25,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட போட்டியில் 9 ஓவியங்களை நாசா தேர்வுசெய்தது. அதில் தித்திகாவின் ஓவியம் இரண்டாம் இடம் பிடித்தது. இதனால் நாசா வெளியிடும் காலண்டரில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளதுடன், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் இடம்பெற உள்ளது. வெல்டன் தித்திகா!

-நாடோடி

nkn250123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe