Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

டிசம்பர் மாதமென்பதால் உலகின் பெரும்பாகத்தை பனிதான் ஆட்சிசெய்து வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மஞ்சள் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது ஜெங்சின் ஹூவாங்கே மேம்பாலம். இந்த மேம்பாலத்தில் டிசம்பர் 28-ஆம் தேதி கடும் பனிமூட்டம் நிலவியதை அடுத்து போக்குவரத்து போலீசார் தடைவிதித்திருந்தனர். ஆனால், அந்தப் பாலம் முறையாக தடுக்கப்படாததால், அதில் வாகனங்கள் வந்துசென்றுகொண்டிருந்தன.

Advertisment

dd

இந்நிலையில் பனிமூட்டத்தால் முன்சென்ற வாகனம் தெரியாமல் ஒரு வாகனத்தின்மீது மோத, தொடர்ந்து பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. சங்கிலித் தொடராக வரிசையாக 200 வாகனங்கள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் உயிரும் இழந்திருக்கிறா

டிசம்பர் மாதமென்பதால் உலகின் பெரும்பாகத்தை பனிதான் ஆட்சிசெய்து வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மஞ்சள் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது ஜெங்சின் ஹூவாங்கே மேம்பாலம். இந்த மேம்பாலத்தில் டிசம்பர் 28-ஆம் தேதி கடும் பனிமூட்டம் நிலவியதை அடுத்து போக்குவரத்து போலீசார் தடைவிதித்திருந்தனர். ஆனால், அந்தப் பாலம் முறையாக தடுக்கப்படாததால், அதில் வாகனங்கள் வந்துசென்றுகொண்டிருந்தன.

Advertisment

dd

இந்நிலையில் பனிமூட்டத்தால் முன்சென்ற வாகனம் தெரியாமல் ஒரு வாகனத்தின்மீது மோத, தொடர்ந்து பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. சங்கிலித் தொடராக வரிசையாக 200 வாகனங்கள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் உயிரும் இழந்திருக்கிறார். தகவ லறிந்து மீட்புக் குழுவினர் வந்து நிலைமையைச் சரிசெய்ய பல மணி நேரம் ஆகியிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது. செம்மறியாட்டு மந்தைமாதிரி போயிருக்காங்க!

Advertisment

திரிபுராவில் கரம்சேரா தொகுதியின் கராங்வால், திபா சந்திரா ஆகியோர் டிசம்பர் 28-ஆம் தேதி பா.ஜ.க.வி லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது அக்கட்சியி லிருந்து விலகும் ஐந்தா வது எம்.எல்.ஏ. திரிபுரா வில் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் மட்டுமே கோலோட்சி வந்த நிலை யில், ஆபரேஷன் லோட்டஸ் மூலம் ஒட்டுமொத்த காங் கிரஸ் ஆதரவாளர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, 2018 தேர்தலில் களமிறங்கியது. 34 இடங்களில் வென்ற பா.ஜ.க., திரிபுரா பூர்வகுடி மக்கள் கூட்டணியுடன் ஆட்சி யமைத்தது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொருவராக 5 எம்.எல்.ஏ.க்கள் வரை கட்சி யைவிட்டு வெளியேறியுள்ள னர். அதேபோல் கூட்டணிக் கட்சியிலிருந்தும் 3 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியுள்ள னர். 2023-ல் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிவருவதை பா.ஜ.க. தலைமை கவலையுடன் கவனித்து வருகிறது. கரன்ஸியிருக்கப் பயமேன்!

dd

ந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தைச் சாப்பிட்ட, உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 21 குழந்தைகள் பலியாகியுள்ளது உலக அளவில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு, உ.பி.யைச் சேர்ந்த மரியான் பயோடெக், டாக்1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை ஏற்றுமதி செய்துள் ளது. இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தைக் குடித்த 21 குழந்தைகள் உயிரிழந் திருப்பதாக அறிக்கை வெளியிட் டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மெய்டன் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைச் சாப்பிட்டு காம்பியாவின் 70 குழந்தைகள் உயிரிழந்தது சர்ச்சைக் குள்ளானது. உலகின் மருந்தகம் என வெற்றுப் பெருமை பேசுவதை விடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை விமர்சித் துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாட்டுக் கழகம், சண்டிகரிலுள்ள ஆய்வுக்கூடத்துக்கு அந்த மருந்தை சோதனைக்கு அனுப்பியுள் ளது. இப்பதான் தரப்பரிசோதனையே நடக்குதா!

ப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் குறைச்சலே இல்லை. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இங்குள்ள போர்னோ மாகாணத்தில் சிபோக் இன மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான இளம்பெண்களைக் கடத்திச் சென்றனர். இது நடந்தது 2014-ஆம் ஆண்டு. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் 160 பெண்கள் விடுவிக்கப்பட்டனர். மிச்சமுள்ள 108 பெண்கள் விடுவிக்கப்படவும் இல்லை. மீட்கப்படவும் இல்லை. கடத்தப்பட்ட பெண்களின் நினைவாக ப்ரெஞ்சுக் கலைஞர் ப்ரூனே நோரே, கடத்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுடன் பேசி, டெரகோட்டா எனும் சுடுமணல் சிற்பங்களாக அவர்களை வடித்துள்ளார். இதில் மட்பாண்ட சிற்பக் கலைஞர்களும் கலைக்கல்லூரி மாணவர்களும் ப்ரூனேவுக்கு உதவிசெய்துள்ளனர். எட்டு வருஷமாவா மீட்கலை!

-நாடோடி

nkn070123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe