Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

மிக்ரானின் துணை வகையான பி.எஃப்.7 சீனாவை சூறையாடிக்கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் சீனாவில் 25 கோடி பேரை கொரோனா தாக்கியிருயிருக் கிறது. இன்னும் சீனாவில் முதியவர்களில் மட்டும் 13 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட வில்லையாம்.

Advertisment

dd

இதுபோக கொரோனாவுக்கான மருந்துகள் விநியோகத்திலும் அங்கு தட்டுப் பாடு. இத்தனைக்கும் வழக்கத்தை விட 6 மடங்கு அதிகமாக கொரோனாவுக்கான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. இதுவரை இந்த மாதத்தில் 10 பேரே இறந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் நாளொன்றுக்கு சராசரி யாக 5000 பேர் இறக்கின்றனர். சமூக வலைத்தளங்கள், வீடியோ, புகைப்படங்கள் சொல்லும் சேதி, சீனாவின் மயானங்கள் 24 மணி நேரமும

மிக்ரானின் துணை வகையான பி.எஃப்.7 சீனாவை சூறையாடிக்கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் சீனாவில் 25 கோடி பேரை கொரோனா தாக்கியிருயிருக் கிறது. இன்னும் சீனாவில் முதியவர்களில் மட்டும் 13 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட வில்லையாம்.

Advertisment

dd

இதுபோக கொரோனாவுக்கான மருந்துகள் விநியோகத்திலும் அங்கு தட்டுப் பாடு. இத்தனைக்கும் வழக்கத்தை விட 6 மடங்கு அதிகமாக கொரோனாவுக்கான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. இதுவரை இந்த மாதத்தில் 10 பேரே இறந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் நாளொன்றுக்கு சராசரி யாக 5000 பேர் இறக்கின்றனர். சமூக வலைத்தளங்கள், வீடியோ, புகைப்படங்கள் சொல்லும் சேதி, சீனாவின் மயானங்கள் 24 மணி நேரமும் பிசியாக இருக்கின்றன என்பதுதான். இந்நிலையில் அதி வேகமாக 600 மின் மயானங் களைக் கட்ட சீனா முடிவெடுத் துள்ளது. இப்படிப் படுத்துதே கொரோனா!

ee

Advertisment

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரயில் நிலையத்தை சர்வதேசத் தரத்துக்கு மாற்ற ரூ.734 கோடி மதிப்பில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் பழமை மாறா மல், கூடுதல் வசதிகளுடன் இதனைப் புதுப்பிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தெலுங் கானா மாநிலம் ஹைதரா பாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டு காலத்தில் இந்தப் புதுப்பிப்புப் பணிகளை நிறைவுசெய்யத் திட்டமிடப் பட்டுள்ளது. கார்கள், ஆட்டோ முதல் அனைத்து வகை வாகனங்களையும் நிறுத் தும் வகையில் பார்க்கிங் வசதி, மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்துவதற்கு ஏற்ற கழிவறை வசதிகள், நடை மேம்பாலங்கள், புதிய லிப்ட், எஸ்கலேட்டர்கள் ஆகியவை யும் இவற்றில் அடங்கும். அதேபோல, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரயில் நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகளும் இருக்குமெனச் சொல்லப்படு கிறது. கட்டி தனியார்கிட்ட ஒப்படைச்சுட மாட்டாங்களே!

dd

டையாய் நடந்து சாதித்திருக்கிறார் கௌகாத்தியின் ரதுல்குமார் ஜகாரியா. 55 வயதான போர்டோலி சர்வதேச விமான நிலையப் பணியாளரான இவர் 16 மணி 35 நிமிடங்களில் நூறு கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்திருக்கிறார். இதற்குமுன் இந்த தூரத்தை 19 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்ததே சாதனையாகப் பதிவாயிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பயிற்சியை மேற்கொண்ட இவர், நவம்பர் மாதம் 7-ஆம் தேதி சாதனைக்குத் தயாராகி 100 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கிறார். வழித்துணைக்கு நீரும், சக்தி பானங்களும் மட்டுமே எடுத்துக்கொண்ட இவரது சாதனை, இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸில் பதிவாகியிருக்கிறது. இதே ஜகாரியா, இவரது துறையில் 100 கிலோமீட்டருக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதுதான் அவரை நடந்துசெல்வதற்கு ஊக்குவிப்பதற்கு காரணமானதாம். லாக்டவுன்ல மாட்டிக்கிட்டோம்னு நினைச்சுக்கிட்டே நடந்துருப்பாரோ!

மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நமது அண்டை நாடான மாலத் தீவில் கடந்த 2013 முதல் 2018 வரை அதிபராக பதவி வகித்தவர் யாமீன். இவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்குச் சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு அளிக்க லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் அப்துல்லா மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்த நீதிமன்றம், சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததற்காக 7 ஆண்டுகளும், லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டுகளும், கூடுதலா 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதித்துள்ளது. இவர் மீது அரசுப் பணத்தை சொந்தத் தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டும் முன்பு எழுந்தததுண்டு. அதில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற நிலையில், மேல்முறையீட்டில் தண்டனையிலிருந்து தப்பித்தார். இந்நிலையில் இப்புதிய வழக்கில் சிக்கியுள்ளார். அதிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!

-நாடோடி

nkn311222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe