Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

ந்தியாவிலேயே கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியையொட்டி மாநிலமெங்கும் பல்வேறு பகுதிகளில் திரைகட்டி போட்டியை ஒளிபரப்பிய நிகழ்வுகள் இங்கு பரவலாக நடைபெற்றது. போட்டியின்போது இரு நாடுகளுக்கும் ரசிகர்கள் இருந்தத னால், இறுதிப்போட்டியன்று தகராறுகள் மாநிலமெங்கும் பல இடங்களில் பதிவாகியுள்ளதாம். சில இடங்களில் சமாதானம் செய்யவந்த போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்துள்ளது.

Advertisment

ff

ஆனால் இதற்கெல்லாம் மாறாக அர்ஜென்டினா ரசிகரான திருச்சூரின் ஓட்டல் உரிமையாளர், போட்டிக்கு முன்பே அர்ஜென்டினா ஜெயித்தால் ரசிகர்களுக்கு பிரியாணி என அறிவித்திருந்தார். மறுநாள் சொன்னபடி 1000 பேருக்கு தனது ஓட்டலில் இலவச பிரியாணி வழங்கினார். கோழிக்கோடு பகுதியைச

ந்தியாவிலேயே கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியையொட்டி மாநிலமெங்கும் பல்வேறு பகுதிகளில் திரைகட்டி போட்டியை ஒளிபரப்பிய நிகழ்வுகள் இங்கு பரவலாக நடைபெற்றது. போட்டியின்போது இரு நாடுகளுக்கும் ரசிகர்கள் இருந்தத னால், இறுதிப்போட்டியன்று தகராறுகள் மாநிலமெங்கும் பல இடங்களில் பதிவாகியுள்ளதாம். சில இடங்களில் சமாதானம் செய்யவந்த போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்துள்ளது.

Advertisment

ff

ஆனால் இதற்கெல்லாம் மாறாக அர்ஜென்டினா ரசிகரான திருச்சூரின் ஓட்டல் உரிமையாளர், போட்டிக்கு முன்பே அர்ஜென்டினா ஜெயித்தால் ரசிகர்களுக்கு பிரியாணி என அறிவித்திருந்தார். மறுநாள் சொன்னபடி 1000 பேருக்கு தனது ஓட்டலில் இலவச பிரியாணி வழங்கினார். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாகுல் என்பவர், நூறு கிலோ அல்வா கிண்டி ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். சேட்டைக்கார சேட்டன்கள்!

ff

Advertisment

இந்திய ஒற்றுமை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டி ருக்கும் ராகுல்காந்தி ராஜஸ்தானின் அல்வார் நகரில் ராகுலுடன் நடை பயணத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அருணாசல பிரதேச எல்லையில் சீனாவின் ஊடுருவல் குறித்துப் பேசும்போது, “"இந்த நாட்டுக்கு காங்கிரஸ் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. இந்த நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோர் உயிரிழந்திருக் கிறார்கள். பா.ஜ.க. எதையும் இழக்கவில்லை. அவர்கள் வீட்டு நாய்கூட உயிரிழக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள்'’என குறிப்பிட்டார். இந்த விவகாரம் டிசம்பர் 20-அன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. நாகரிகமற்ற முறையில் பேசியதற்காக பா.ஜ.க.விடமும் நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்புக் கேட்கும்படி பியூஷ் கோயல் வலியுறுத்தினார். ஆனால் பாராளுமன்றத்தில் பேசப்படாத ஒன்றுக்காக மன்னிப்புக் கேட்க அவசியமில்லை யென மறுத்துவிட்டார் கார்கே. கதறவிட்டுட்டிருக்கார் கார்கே!

"ராஸ்கல் என்ன வேலை பார்த்துட்டான்' என திட்டிக்கொண்டி ருக்கிறது உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவார் மாவட்டம் பகத்ராபாத்தைச் சேர்ந்த பதஞ்சலி யோக மையம். பதஞ்சலி நிறுவனத்தின் யோகப் பயிற்சி மைய மொன்று பகத்ராபாத்தில் உள்ளது. இந்த மையம் ஆன்லைன் வழியே தேவைப் படுவோருக்கு யோகா வகுப்புகளை நடத்தும். அதுசம்பந்தமாக கூட்டம் ஒன்று நடந்துள்ளது. கூட்டத்தில் இந்திய, வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்- பெண் இரு தரப்பினரும் பங்குபெற்றிருந்தனர். இக்கூட்டத்தில் பங்குபெற்ற புனேயைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், தனது மொபைலி-ருந்து ஆபாச வீடியோவை அப்லோட் செய்து, பதஞ்சலியின் ஜூம் கூட்டத்துக்கான திரையில் ஒளிபரப்பு செய்துவிட்டார். இதனால் கூட்டத்திற்கு வந்தவர்கள் தர்மசங்கடமாக நெளிந்திருக்கிறார்கள். பிறகென்ன, போலீஸ் புகாரின் பேரில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறாராம். ஆகாஷ் இல்ல ஆபாஷ்!

ff

மீண்டுமொரு இக்கட்டில் சிக்கியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப். கடந்த ஜனவரியில் அமெரிக்க தேர்தலில் அதிபராகத் தேர்வான ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்க நாடாளுமன்றம் கூடியது. இதில் ட்ரம்பின் ஆதர வாளர்கள் புகுந்து கலவரம் செய்த தில் அமெரிக்காவே ஆடிப்போனது. ட்ரம்பின் தூண்டுதலின் பேரிலே இந்தக் கலவரம் நடந்ததென குற்றம் சாட்டப்பட்டது. இதற்கென ஜன நாயகக் கட்சியின் 7 உறுப்பினர் கள், குடியரசுக் கட்சியின் 2 உறுப் பினர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 18 மாத விசாரணைக்குப் பின், இந்தக் குழு 161 பக்கங்கள் கொண்ட இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித் துள்ளது. ஜோ பைடனுக்கு அமைதி யான முறையில் அதிகாரம் மாற்றப் படுவதை தடுக்கும் முயற்சியில், ட்ரம்ப் பல சதிகளை மேற்கொண்ட தாக விசாரணைக் குழு குற்றம்சாட்டி யுள்ளது. தேர்தல்முடிவு குறித்து பொய்த் தகவல் பரப்புதல், அமெரிக் காவை ஏமாற்ற சதிசெய்தல் உள் ளிட்ட 4 கிரிமினல் குற்றச்சாட்டு களை பதிவுசெய்ய நீதித் துறைக்கும் பரிந்துரைத்துள் ளது. அதுக்கெல்லாம் அசந்துடுவாரா!

-நாடோடி

nkn241222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe