சில நேரங்களில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற் கென்றே சிலர் வழக்குத் தொடுப்பதுண்டு! உச்சநீதிமன்றத்தில் அப்படியொரு வழக்கு டிசம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்தவர் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ். இவரது மனுவின் சாரம் இதுதான்: "தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பதை ஏன் ஷாஜகான் குறிப்பிடவில்லை? உண்மையில் தாஜ்மகால், இந்து அரசர் ராஜா மன்சிங்கின் அரண்மனையே. அதனைச் சற்றே சீர்படுத்தி புதுப்பித்து, ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டியிருக்கிறார். தற்போதைய தாஜ்மகாலுக்குக் கீழே பழைய அரண்மனையின் எச்சங்கள் இருக்கிறது. எனவே பள்ளி, வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து தாஜ்மகால் கட்டு மானம் பற்றிய தகவல்கள் அகற்றப்படவேண்டும்' என வாதாடினார். இறுதியில் நீதிபதிகள் "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல' எனக்கூறி தள்ளுபடி செய்தனர். அடுத்து, மொகலாய ஆட்சி என்பதே வரலாற்றாசிரியர்களின் பகல் கனவு. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லைனு வழக்குத் தொடுப்பாங்களோ...

Advertisment

nn

ப்பிளுக்குப் பேர்பெற்ற ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து பீஹாருக்கு ஆப்பிள் ஏற்றிக்கொண்டு கிளம்பியது ஒரு லாரி. பஞ்சாப் மாநிலம் பதேகர் சாகிப் பகுதியில் லாரி நிலை தடு மாறியதில் கவிழ்ந்துவிட்டது. அந்த வழியே வந்த கிராம மக்கள், கவிழ்ந்த லாரியிலிருந்து ஆப்பிள் பெட்டிகளை அள்ளிக் கொண்டு பறந்தனர். இது செல்போனின் காலமென்பதால், இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகின. இந்நிலையில் லாரியின் சொந்தக்காரரான ஷாகித்தை போலீசார் மூலம் தொடர்புகொண்டு, விபத்தால் ஏற்பட்ட இழப்புக்காக ரூ 9.12 லட்சம் வழங்கி ஆச்சரியப்படுத்தி யுள்ளனர் பாட்டியாலா நகரைச் சேர்ந்த ராஜ்விந்தர்சிங், குர்பிரீத் சிங் ஆகியோர். “"விபத்தில் லாரி சிக்கும் போது, அதில் உள்ளவர்களுக்கு முதலில் உதவவேண்டும். மாறாக, சிலர் ஆப்பிள் பெட்டிகளைத் திருடுவதில் மும்முரமாக இருந்தனர். பஞ்சாபைப் பற்றி நல்ல செய்தி பதிவாகவேண்டும். அதனால்தான் லாரி உரிமையாளருக்கு உதவினோம்'’என்கிறார்கள் இருவரும். உயர்ந்த உள்ளங்கள்!

ந்தியக் காவல்துறையின் திறமை உலகறிந்ததுதான். என்றாலும் சில ஏடாகூடங்களுக்கும் குறைவில்லை. அலிகாரில் 2015-ல் 14 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டதாக ஒரு வழக்கு பதிவானது. கிடைத்த உடலை வைத்து போஸ்ட்மார்ட்டம் எல்லாம் நடத்தப்பட்டு, குற்றவாளியும் சிறை யில் அடைக்கப்பட்டுவிட்டார். இந் நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளியின் தாயார், தன் மகன் மேலான நம்பிக்கையில் 14 வயதுப் பெண்ணைத் தேடிவந்தார். அந்தப் பெண்ணின் புகைப்படத்தைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கொடுத்து தகவல் தெரிந்தால் சொல் லச் சொன்னார். திடீரென ஹாத் ராஸ் பகுதியில் இறந்துபோனதாகச் சொல்லப்பட்ட பெண் தனது கணவன், குழந்தைகளுடன் வாழ்வதாகத் தெரியவர, குற்றவாளியின் தாய், காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். விசாரணையில், அந்தப் பெண் காதலித்தவருடன்dd ஹாத்ராஸ் ஓடிப்போனதாக தெரியவந்திருக்கிறது. இப்போது விஷயம் நீதிமன்றம் வரை போய், ஹாத்ராஸில் இருப்பது இறந்ததாகச் சொல்லப்பட்ட பெண்தானா என டி.என்.ஏ. சோதனை நடத்தச் சொல்லியிருக்கிறது. யாரோ செத்ததுக்கு, யாரையோ ஜெயிலில் தள்ளியிருக்கிறதா போலீஸ் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. செத்துப் பிழைக்கிறதுல இவ்வளவு குழப்பம் இருக்கா!

வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தவர் அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரு ஹப். இவர் சமீபத்தில் "த ட்ருத் அபவுட் வூஹான்' என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் "கொரோனா வைரஸ் மனிதன் உருவாக்கியது தான். குறிப்பாக வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியது' என குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ஆய்வகங்களில் சரியான உயிரியல் பாதுகாப்பு, இடர் மேலாண்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள் கிடையாது. அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் வெளியேறி உலகெங்கும் பரவியது. பத்தாண்டுகளாக வூஹான் ஆய்வு மையம், வவ்வால்களில் பல வகையான கொரோனா வைரஸ்களைக் குறித்து ஆய்வு செய்துவருகிறது. இதற்கு நிதி உதவி செய்தது அமெரிக்க அரசின் முதன்மை நிறுவனமான என்.ஐ.எச். ஆகும். ஆபத்தான தொழில்நுட்பத்தை அமெரிக் காவே சீனாவிடம் ஒப்ப டைத்துவிட்டது என்றிருக்கிறார். இரு நாடுகள் தவறுக்கு உல கமே விலைகொடுத் திருக்கிறது!

-நாடோடி