புரட்சி, போராட்டம் போன்றவைதான் ஒரு நாட்டின் அரசுக்கு மிகப்பெரிய இக்கட்டு. இதற்காகவே காவல்துறை, ராணுவம் போன்றவற்றை வலுவாக அமைக்க நாடுகள் முயல்கின்றன. இதன் அடுத்தகட்டமாக காவலர்களுக்கு உதவியாக ரோபாட்டுகளை பணியிலமர்த்துவதைப் பற்றி நாடுகள் யோசித்துவருகின்றன. சான்பிரான்சிஸ்கோவில் காவலர்களுக்கு உதவியாக ரோபட்டுகளைப் பணியிலமர்த்துவது பற்றிய வாக்கெடுப்பு வெற்றியில் முடிந்திருக்கிறது. ராணுவமயமாக்கம், நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங் கள் ஏழைகளுக்கும் சிறுபான்மையருக்கும் எதிராகவே முடிவதாக எதிர்க்கட்சியினர் வாதாட, ஆளும் கட்சியோ, “காவல்துறையில் ஆயுதங்களுடனான ரோபட்டுகளைப் பணியமர்த்தப்போவதில்லை. தொடர்புகொள்ளவும், வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாத, எதிர் கொள்ளவியலாத தருணங்களிலும், ஆயுதம் தரித்த, மிகவும் சந்தேகத்துரிய நபரை எதிர்கொள்ளவும் போன்ற உயிரைப் பலிவாங்கக்கூடிய தருணங்களில்தான் ரோபோட்டுகளைப் பயன்படுத்தப் போகிறோம். அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்கவே இது உதவும்” என விவாதித்து, ரோபட்டுகளை பணியமர்த்தத்
புரட்சி, போராட்டம் போன்றவைதான் ஒரு நாட்டின் அரசுக்கு மிகப்பெரிய இக்கட்டு. இதற்காகவே காவல்துறை, ராணுவம் போன்றவற்றை வலுவாக அமைக்க நாடுகள் முயல்கின்றன. இதன் அடுத்தகட்டமாக காவலர்களுக்கு உதவியாக ரோபாட்டுகளை பணியிலமர்த்துவதைப் பற்றி நாடுகள் யோசித்துவருகின்றன. சான்பிரான்சிஸ்கோவில் காவலர்களுக்கு உதவியாக ரோபட்டுகளைப் பணியிலமர்த்துவது பற்றிய வாக்கெடுப்பு வெற்றியில் முடிந்திருக்கிறது. ராணுவமயமாக்கம், நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங் கள் ஏழைகளுக்கும் சிறுபான்மையருக்கும் எதிராகவே முடிவதாக எதிர்க்கட்சியினர் வாதாட, ஆளும் கட்சியோ, “காவல்துறையில் ஆயுதங்களுடனான ரோபட்டுகளைப் பணியமர்த்தப்போவதில்லை. தொடர்புகொள்ளவும், வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாத, எதிர் கொள்ளவியலாத தருணங்களிலும், ஆயுதம் தரித்த, மிகவும் சந்தேகத்துரிய நபரை எதிர்கொள்ளவும் போன்ற உயிரைப் பலிவாங்கக்கூடிய தருணங்களில்தான் ரோபோட்டுகளைப் பயன்படுத்தப் போகிறோம். அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்கவே இது உதவும்” என விவாதித்து, ரோபட்டுகளை பணியமர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. சம்பள உயர்வு, பென்ஷன் கேட்காது!
கடந்த ஆகஸ்டு முதல் எதிலீன் கிளைக்கால் கலந்த இருமல் மருந்தைப் பயன்படுத்திய இந்தோனேஷியாவின் 200 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மருந்தைத் தயாரித்த நிறுவனங்களில் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றும் அடக்கம். தற்போது குழந்தைகள் மரணத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்கள் அரசுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவ னங்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடுத்துள்ளன. எத்திலீன் கிளைக்கால் கலந்த மருந்தைத் தயாரித்ததாக 7 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. "அரசு அதிகாரிகள் தீங்குபயக்கும் பகுதிப் பொருட்கள் அடங்கிய மருந்தின் விற்பனையைத் தடுக்கத் தவறிவிட்டனர். அதனாலேயே அதிகாரிகளின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளோம். இந்த மருந்துகளைச் சாப்பிட்டு உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 1,27,049 டாலர்களும், உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒவ்வொருவருக்கும் 63,524 டாலர்களும் நஷ்ட ஈடு தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்'' என்கிறார் வழக்கறிஞர் அவான் புர்யாடி. இந்த மருந்தைச் சாப்பிட்ட பெரும் பாலோனாருக்கு சிறுநீரகச் செய லிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நிவாரணம் போதாது நீதியும் வேணும்!
குஜராத்தின் குட்ச் மாவட்டத்தின் காவ்டா பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்ப்பிணியான இவருக்கு இங்குள்ள அங்கன்வாடியில் கர்ப்பிணிகளுக் குத் தரப்படும் சுண்டல், துவரம்பருப்பு, சமையல் எண்ணெயைத் தர மறுக்கிறார்கள் அங்குள்ள ஊழியர்கள். “"நான் கர்ப்பமாக இருப்பது அவர்களுக்கு தெரியவில்லையா?'’என்கிறார் வனிதா. ஊழியர்களோ, "நாங்கள் எதுவும் செய்யமுடியாது. முதல்வரின் தாய்சக்தி திட்டத்தில் பலன் பெறுபவர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை மொபைல் செயலியில் பதியவேண்டும். பதியும்போது இவருக்கு 18 வயது பூர்த்தியாகாதது தெரிந்துவிடும்'’என்கிறார்கள். வனிதா மட்டுமில்லை, குஜராத்தில் அவரைப்போல் இத்திட்டத்தின் கீழ் பலன்பெற முடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் தருவது நல்ல விஷயம்தான். அதைவிட நல்ல விஷயம், குழந்தைப் பருவ திருமணம் நடை பெறாமல் மாநில அரசு பார்த்துக்கொள்வது! சிறார் திருமணத்துக்கு முதல்ல செக் வைங்க ஆபிசர்ஸ்!
நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பாகத் தேர்வானார் லோகப்பிரியா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் கல்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த வர். செல்வமுத்து-ரீட்டாமேரி தம்பதியின் மூத்த மகள் லோகப்பிரியா, சிறு வயது முதலே பளு தூக்கும் ஆட்டத்தில் ஆர்வம்கொண்டு பல்வேறு பரிசு களை வென்றுவந்தார். இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள நியூசிலாந்து சென்றிருந்தார். நவம்பர் 30-ஆம் தேதி லோகப்பிரியாவின் தந்தை செல்வமுத்து எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் உயிரிழந் தார். இது தெரிய வந்தால் லோகப்பிரியா ஊக்க மிழப்பார் எனக் கருதிய தாய் ரீட்டாமேரி, அவருக்கு தக வல் தெரிவிக்க வில்லை. அன்று இரவு 52 கிலோ எடைப்பிரிவில் 350 கிலோ பளுவரை தூக்கி லோகப்பிரியா தங்கம் வென்றார். அதன்பிறகே தந்தை இறந்த செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. தங்கம் வென்ற மகிழ்ச்சி, தந்தை இறந்த சோகமாக மாற... சக வீரர்கள் ஆறுதல் படுத்தியிருக்கிறார்கள் பிரியாவை. அம்மான்னா இப்படி இருக்கணும்!
மாஸா அமினியிடமும் ஈரான் மக்களிடமும் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறது ஈரான் அரசு. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி சரியாக ஹிஜாப் அணியாததாகக் கூறி மாஸா அமினியை காவல்துறையின் ஒழுக்கப் பிரிவு கைது செய்தது. போலீஸ் கஸ்டடியில் அவர் 16-ஆம் தேதி இறந்தார். இதன் எதிரொலியாக ஈரானே போராட் டத்தால் குலுங்கத் தொடங்கியது. அலையலையாக பெண்கள் வீதிக்கு வந்து ஹிஜாப் அணிய மறுத் தனர். அதை எரித்தனர். பதிலுக்கு கடும் அடக்கு முறையில் இறங்கியது ஈரான். இப்போராட்டத்தில் இதுவரை அரசு கணக்குப்படியே 300 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த 2 மாதப் போராட்டத்துக்குப் பின், ஹிஜாப் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி ஆலோசிப்பதாக ஈரானின் தலைமை சட்ட அறிஞர் ஜாபர் மான்டசெரி டிசம்பர் 3-ல் தெரி வித்திருந்தார். டிசம்பர் 4-ல் காவல்துறையின் ஒழுக்கப்பிரிவு கலைக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. எப்பவுமே சுதந்திரத்தின் விலை அதிகம்தான்!
-நாடோடி