Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

nn

ரானில் நடைபெறும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒரு அதிரடி, கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்றது.

Advertisment

ee

இப்போட்டியில் கலந்துகொண்ட ஈரான் அணி, இங்கிலாந்துட னான போட்டிக்கு முன் அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடவேண்டும். ஆனால் ஆட்டத்தில் கலந்துகொண்ட 11 ஈரான் வீரர்களும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக தேசிய கீதத்தைப் பாடாமல் மௌனமாக நின்றனர். இந்நிகழ்வு, ஹிஜாப் விவகாரத் தில் அரசுத் தரப்பும், மதத் தலைவர்களுமே இவ்விஷ யத்தில் பிடிவாதத்துடன் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இப்போது, இந்த 11 வீரர்களும் அரசின் கோபத்தை எதிர்கொண்டாக வேண்டும். பொறியிலிருந்துதான் பெருநெருப்பு பிறக்கிறது!

Advertisment

தமிழகத்தின் ஆனைமலை, முதுமலைக் காப்பகங்களிலிருந்து 13 பேர் தாய்லாந்தின் யானைகள் பாது காப்பு மையத்தில் பயிற்சிபெறத் தேர்வாகியிருக்கிறார்கள். யானை கள் பராமரிப்

ரானில் நடைபெறும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒரு அதிரடி, கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்றது.

Advertisment

ee

இப்போட்டியில் கலந்துகொண்ட ஈரான் அணி, இங்கிலாந்துட னான போட்டிக்கு முன் அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடவேண்டும். ஆனால் ஆட்டத்தில் கலந்துகொண்ட 11 ஈரான் வீரர்களும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக தேசிய கீதத்தைப் பாடாமல் மௌனமாக நின்றனர். இந்நிகழ்வு, ஹிஜாப் விவகாரத் தில் அரசுத் தரப்பும், மதத் தலைவர்களுமே இவ்விஷ யத்தில் பிடிவாதத்துடன் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இப்போது, இந்த 11 வீரர்களும் அரசின் கோபத்தை எதிர்கொண்டாக வேண்டும். பொறியிலிருந்துதான் பெருநெருப்பு பிறக்கிறது!

Advertisment

தமிழகத்தின் ஆனைமலை, முதுமலைக் காப்பகங்களிலிருந்து 13 பேர் தாய்லாந்தின் யானைகள் பாது காப்பு மையத்தில் பயிற்சிபெறத் தேர்வாகியிருக்கிறார்கள். யானை கள் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு விவகாரங் களில் தமிழகம் சிறப்பான அனுபவமுடையது. தமிழகத்தின் தெப்பக் காடு, முதுமலை, கோழிக்கமுதி, ஆனை மலை ஆகியவை, இந்தியாவின் பழமையான யானை முகாம்களில் சிலவையாகும். எனினும், இங்குள்ள யானை மாவுத்தர் கள், உலகின் பிற யானை முகாம்களைப் பார்வையிட்டு பயிற்சிபெறுவதன் மூலம் அங்குள்ள சிறந்த நடைமுறைகளையும் கற்றுத் தேறமுடியும். தாய்லாந்தின் லாம்பாங்க் யானை களைப் பேணுவதில் உலகப் புகழ்பெற்றது. யானைகளைக் குணப்படுத்துவதிலும் பேர்பெற்றது. எனவே ரூ 50 லட்சம் செலவில் யானை மாவுத்தர்கள், பேணுநர்கள் அங்குள்ள நடைமுறைகளைக் கற்றுவர அனுப்பப்படுகின்றனர். மாவுத்தர்களுக்கு சுற்றுலா!

nn

உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. குடும்பத்தை எதிர்த்து விரும்பிய ஆணுடன் சென்ற ஷ்ரத்தாவை, காதலனே துண்டு துண்டாக வெட்டி அதிரவைத்தார். அந்த அதிர்ச்சி மாறுவதற்குள் டெல்லியில் நடந்த இன்னொரு ஆணவக்கொலை அதிர வைத்திருக்கிறது. டெல்லி பார்தாபூர் பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ். இவரது மகள் 22 வயதான ஆயுஷி, வீட்டுக்குத் தெரியாமல் தன்னுடன் படித்த வேறொரு மாணவனை பதிவுத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த விவரம் தெரியவந்ததும், மகளை கண்மண் தெரியாமல் தாக்கிய நிதேஷ், தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார். அத்துடன், இறந்த மகளை ஒரு சூட்கேஸில் திணிக்க ஆயுஷின் தாயும் உதவியிருக்கிறார். வெகுதொலைவில் வீசப் பட்ட பிணத்தைவைத்து அடையாளம் கண்டு வந்துவிட்டது போலீஸ். இப்போது நிதேஷும் அவரது மனைவியும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பெற்ற மனசே கல்!

ஏர்டெல் நிறுவனம் அதன் குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் கட்டணத்தை ரூ 99--ருந்து ரூ.155-ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 57% விலை உயர்வாகும். இந்தத் திட்டத்தில் 200 மெகாபைட் டேட்டாவும், நொடிக்கு இரண்டரை பைசா கட்டணத்தில் 99 ரூபாய் வரையும் பேசமுடியும். புதிய திட்டத்தில் 300 குறுஞ்செய்திகள், 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் என மாற்றம்செய்துள்ளது. எனினும் புதிய திட்டத்தால் பெருமளவிலான சந்தாதாரர்கள் ஏர்டெல்லை கைவிட்டால் என்ன செய்வதென்ற அச்சத்தில், முதலில் அரியானா, ஒடிசாவில் மட்டும் நடைமுறைப்படுத்திப் பார்க்கிறார் கள். அங்கே எதிர்ப்பில்லாத பட்சத்தில் இந்தத் திட்டம் இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்தப்படும். வெறுமனே 35 ரூபாயாக மட்டுமே இருந்த மினிமம் ரீசார்ஜை, 79, பின் 99 எனக் கொண்டுசென்று தற்போது 155-க்கு எடுத்துச்சென்றுள்ளது ஏர்டெல். அழைப்புகளை அட்டெண்ட் செய்ய மட்டும் ரீசார்ஜ் செய்யும் அடித்தட்டு மக்களே இந்த மாற்றத்தால் பெரிதும் சிரமப்படுவார்கள். கட்டணக் கொள்ளை!

nn

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, செங்கல்பட்டு- திருப்போரூர் சாலையில் இணையும் 18 கிலோமீட்டர் நீளமுள்ள கூடுவாஞ்சேரி- நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ளது வேலம்மாள் வித்யாஸ்ரமம் பள்ளி. இச்சாலையில் வேறு சில பள்ளிகளும், 25-க்கும் மேற்பட்ட கிராமங்களும் அமைந்துள்ளன. தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளை அழைத்துவந்து விடவும், கூட்டிச்செல்லவும் வாகனங்கள் திரளாக வருவதால், இப்பகுதியில் காலை -மாலை நேரங்களில் சுமார் அரைமணி நேரத்துக்கு, கிலோமீட்டர் கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலால் வேலைகளுக்கும், இதர பணிகளுக்கும் செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். அத்துடன் மழைக்காலங்களில் இந்தச் சாலையில் நீர் தேங்கி வெள்ளக்காடாக இருப்பதுவேறு, போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் இச்சாலையைப் பயன்படுத்தும் கூடுவாஞ்சேரி பகுதி மக்கள். "ஒருநாள் பிரச்சினை என்றால் பொறுத்துக் கொள்ளலாம். தினசரி பிரச்சனையாக இருக்கும்போது, பள்ளியும் அரசு அதிகாரிகளும் இணைந்து இதற்கொரு தீர்வு காண வேண்டும்''’என்கிறார்கள். ட்ராபிக்ல மக்கள் ஜாம் ஆகக்கூடாதுல்ல...

-நாடோடி

nkn301122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe