Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

nn

மெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா, சமீபத்தில் சென்னை கோட்டூர்புரம் இணைய கல்விக்கழக அரங்கில் சிறப்புற நடந்தது.

Advertisment

bews

இதில், நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரி, தமிழிசைப் பாடகர் டி.கே.எஸ். கலைவாணன், தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன், மகாகவி பாரதியின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி, அண்மையில் சாகித்ய பால புரஷ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ், அஞ்சலி நாட்டியாலயா நிறுவனர் ரவிச்சந்திரன், திரைக்கலைஞர் கவிஞர் ரேகா, பாடலாசிரியர் அருண்பாரதி, கவிமாமணி வெற்றிப் பேரொளி, எழுத்தாளர் மு.ஞா. செ.இன்பா, கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் பேச்சியம்மாள், பாவலர் முத்துசாமி மற்றும் அமெரிக்க எழுத்தாளர் ஜெப்ரி அலெக்சாண் டர் ஆகியோருக்கு இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரான முனைவர் தாழை இரா.உதயநேசன் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். பாராட்ட வேண்டிய முயற்சிதான்!

Advertisment

ee

ஷ்ய-உக்ரைன் போர் விளைவாக, ஐரோப்ப

மெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா, சமீபத்தில் சென்னை கோட்டூர்புரம் இணைய கல்விக்கழக அரங்கில் சிறப்புற நடந்தது.

Advertisment

bews

இதில், நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரி, தமிழிசைப் பாடகர் டி.கே.எஸ். கலைவாணன், தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன், மகாகவி பாரதியின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி, அண்மையில் சாகித்ய பால புரஷ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ், அஞ்சலி நாட்டியாலயா நிறுவனர் ரவிச்சந்திரன், திரைக்கலைஞர் கவிஞர் ரேகா, பாடலாசிரியர் அருண்பாரதி, கவிமாமணி வெற்றிப் பேரொளி, எழுத்தாளர் மு.ஞா. செ.இன்பா, கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் பேச்சியம்மாள், பாவலர் முத்துசாமி மற்றும் அமெரிக்க எழுத்தாளர் ஜெப்ரி அலெக்சாண் டர் ஆகியோருக்கு இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரான முனைவர் தாழை இரா.உதயநேசன் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். பாராட்ட வேண்டிய முயற்சிதான்!

Advertisment

ee

ஷ்ய-உக்ரைன் போர் விளைவாக, ஐரோப்பிய நாடுகள் விறகுத் தேடலில் மும்முரமாக இருக்கின்றன. உக்ரைன் போரில், மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக பொருளாதார, ஆயுத விநியோகம் செய்வதன் காரணமாக போர் நினைத்ததைக் காட்டிலும் சிரமமாகி யுள்ளது ரஷ்யாவுக்கு. பதிலடியாக மேற்கத்திய நாடுகளுக்கு விநியோ கம் செய்யும் இயற்கை எரிவாயு விநியோகத்தை பாதிக்கும் கீழாகக் குறைத்துவிட்டது. இதனால் எரி பொருள் விலையோ மும்மடங்காகி விட்டது. குளிர்காலம் அணுகிவரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் அச்சத்தில் உறைய ஆரம்பித்து விட்டன. எனவே பலரும் விறகுகளை வாங்கிக் குவித்துவருகிறார்களாம். காசு கொடுத்தாலும்கூட விறகு கிடைப்பதில்லையாம். தவிரவும் நம் ஊரைப் போல அங்கே விறகை வெட்டி அப்படியே எரித்துவிட முடியாது. மாதக்கணக்கில் உலர்த்திதான் பயன்படுத்தமுடியும். விறகு வைத் திருப்பவர்கள், அதை யாரும் திருடி விடக்கூடாது என்ற கவலையில் கவனமாகப் பாதுகாத்துவருகிறார் களாம். மேற்கத்திய நாடுகளில் ஏழை நாடுகள்தான் இந்தப் பிரச் சனையில் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறதாம். துருவப் பகுதி குளிர்னா சும்மாவா!

மேடைப் பிரச்சாரம் கிட்டத் தட்ட காலாவதியாகவிட்ட நிலையில் தற்போது சமூக ஊடகங்கள்தான் அரசியல் கட்சிகளின் வலுவான பிரச்சார மேடையாகத் திகழ்கிறது. தேசிய, மாநில அளவிலான பா.ஜ.க.வின் வெற்றிக்குப்பின்னால், சமூக ஊடகத்தை வலுவாகக் கையாண்டது வெளிப்படையான தால் அனைத்துக் கட்சிகளும் வலுவான இணையதள தகவல் தொடர்பு அணியைக் கட்ட மைப்பதில் முயற்சி களை மேற்கொண்டு வருகின்றன. இந்த அணுகுமுறை மாற்றத்தால் குறிப்பாக முகநூல், வருவாயைக் குவித்துவருகிறது. விரைவில் இமாச்சலப்பிரதேசம், குஜராத்துக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆம் ஆத்மி குஜராத்தில் வலுவாகக் கால்பதிக்க முயற்சிகளை மேற் கொண்டுவருகிறது. இதனை யொட்டி கடந்த சில மாதங்களில் மட்டும் பஞ்சாப் அரசு, பேஸ்புக் பக்கத்தில் ரூ 1.83 கோடி செலவில் 136 விளம்பரங்களை வெளியிட் டுள்ளது. இவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் குஜராத் வாக் காளர்களை இலக்காகக் கொண்டவை. பதிலுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலைக் குறிவைத்து பால்டு எக்ஸ்பிரஸ் எனும் இணையதளப் பக்கம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள் என அவதூறுப் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறது. இது எந்தக் கட்சிக்கு ஆதரவான இணையப் பக்கம் என சொல்லத் தேவை யில்லை. மக்கள் குவியற இடத்துலதான் பிரச்சாரம் பண்ணியாகணும்!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் கடன் பிரச்சனைக்காக மேற்கொள் ளப்படும் அத்துமீறல்கள் தேசிய மகளிர் ஆணையம் வரை எதிரொலித்துள்ளது. இப்பகுதி யில் கடன் பிரச்சனை, சொத்துத் தகராறைத் தீர்ப்பதற் காக காப் எனப்படும் ஜாதிப் பஞ்சாயத்துகள் நடைபெறுகின்றன. இந்தப் பஞ்சாயத்தில் கடனைச் சரிவரக் கட்டாதவரின் கடன் பாக்கிக்காக, அவரது இளம் மகள்கள் ஏலம்விடப்படுகின்றனர். ஏலம் பெற்றவர்கள் அந்தப் பெண் களை பாலியல் தொழிலில் தள்ளு கின்றனர் எனத் தெரியவந் துள்ளது. இந்த ஏலத்தை சட்டபூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப் படுகின்றனவாம். இது குறித்த புகார் தேசிய மகளிர் ஆணையத்தை எட்டியதை அடுத்து ராஜஸ் தான் மாநில தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க் கும் ஆணையம் கடிதம் எழுதியுள் ளது. ஏலத்தால வந்த ஓலமா!

news

ற்கெனவே இருபது வருடங்களுக்கும் மேலாக, குஜராத்தில் பறிகொடுத்த ஆட்சியைப் பிடிக்கப் போராடிவரும் காங்கிரஸ் அதனைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. இவ் வருடம் ஆம் ஆத்மி வேறு குஜராத் களத்தில் இறங்கியிருப்பதோடு, போட்டியை பலப்படுத்தும் வகையில் பலமான களச்செயல்பாட்டிலும் மும்முரம் காட்டிவருகிறது. இந்நிலை யில்தான் காங்கிரஸில் இணைந் திருக்கும் பா.ஜ.க. பிரமுகர், குஜராத் காங்கிரஸுக்கு தெம்பூட்டி யிருக்கிறார். அது வேறு யாருமல்ல, குஜராத் பா.ஜ.க. முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திரசிங் வகேலாதான். "நான் பா.ஜ.க.வில் எப்போதுமே இயல்பாக இருந்ததில்லை. வெறுப்பு அரசிய லுக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறேன்'' என்றிருக்கிறார். அவ்வளவு நல்லவரா சார் நீங்க!

-நாடோடி

nkn051122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe