மாநிலம் தேசம் சர்வதேசம்!

ff

மார்ச் 11, 2022-ல் ஒரு விசேஷம் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்து, அதனால் உயிரிழப்பு தினசரி வாடிக்கையான நிலையில், ஒரேயொரு உயிரிழப்புகூட ஏற்படாத தினம். 2019- கடைசியில் கொரோனா கிருமி கண்டறியப்பட்டு 2020-ல் உலகெங்கும் உயிரிழப்புகள் தினசரி நடைமுறை யானது. தமிழகத்தில் கொரோனாவால் 38,023 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. கொரோனாவால் தினசரி உயிரிழப்பு ஏற்பட்டுவந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மார்ச் 11-ல் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லையென தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். நல்லவிஷயம்தான்… இது வாரம், மாதம், வருடமென வளரட்டும். கேட்கவே தித்திப்பாயிருக்கு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வலி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜாய்ப்கான். இவர் தனது முறைப்பெண்ணான பாத்திமாவை இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடத்துக்

மார்ச் 11, 2022-ல் ஒரு விசேஷம் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்து, அதனால் உயிரிழப்பு தினசரி வாடிக்கையான நிலையில், ஒரேயொரு உயிரிழப்புகூட ஏற்படாத தினம். 2019- கடைசியில் கொரோனா கிருமி கண்டறியப்பட்டு 2020-ல் உலகெங்கும் உயிரிழப்புகள் தினசரி நடைமுறை யானது. தமிழகத்தில் கொரோனாவால் 38,023 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. கொரோனாவால் தினசரி உயிரிழப்பு ஏற்பட்டுவந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மார்ச் 11-ல் கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லையென தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். நல்லவிஷயம்தான்… இது வாரம், மாதம், வருடமென வளரட்டும். கேட்கவே தித்திப்பாயிருக்கு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வலி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜாய்ப்கான். இவர் தனது முறைப்பெண்ணான பாத்திமாவை இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடத்துக்குமுன் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பாத்திமா கருவுற்றாள். திரும்பவும் பெண் குழந்தையைப் பெற்ற பாத்திமா மீதான கோபத்தில் வீட்டுப் பக்கமே சில நாட்களாக வரவில்லை. நாலைந்து நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய கான், மனைவியை வசைபாடி அடித்து உதைத்தார். பின் பிறந்து ஏழே நாட்களான குழந்தையின் உடலில் தோட்டாவைப் பாய்ச்சிவிட்டு தலைமறைவாகி விட்டார். பாகிஸ்தானே இப்போது ஷாஜாய்ப்கானை சபித்துக்கொண்டிருக்கிறது. பிறக்கும் குழந்தை ஆணா- பெண்ணா என்பதில் பெண்ணுக்குப் பங்கில்லை யென ஆண்களுக்கு யார் புரியவைப்பது? ஆயிரம் பெரியார்கள் போதாது! இந்த உலகின் மூடத்தனத்தை அகற்றத்தான்.

லக அளவிலுள்ள பிரபலமான பிஸினஸ் ஸ்கூல்களில் அட்மிஷன் வேண்டுமென்றால் ஜிமேட் (ஏஙஆப) தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வை நடத்துவதற்கென்றே ஒரு அமைப்பு இருக்கிறது. அவர்கள் நடத்தும் தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த 108 பேர் மோசடி செய்ததாகக் கூறி அவர்களது மதிப்பெண்களை ரத்துசெய்திருக்கிறது. மோசடி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஜிமேட் தேர்வில் பங்குபெறவும் தடைவிதித்துள்ளது. இப்படி தேர்வில் மோசடி செய்தவர் களின் பின்னணியில் இந்திய அதிகாரிகளின் பங்கிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது இவ்வமைப்பு. அம்மையப்பனை சுத்தி பிள்ளையார் மாம்பழத்தை வாங்குன நாடு... கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க சார்! புராணத்துலயே முன்னுதா ரணம் இருக்கே!

ன்லைன் சேல்ஸா… கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். வடபழனி ஆற்காடு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷிகார் சுக்லா. காரைக்கால் ஒ.என்.ஜி.சி.யில் பொறியாளர். தனது ஃபரிட்ஜை விற்பதற்கு ஆன்லைனில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவர் சொன்ன விலைக்கே வாங்கிக் கொள்ள முன்வந்தார் ஒருவர். சுக்லாவுக்கு ஒரு க்யூஆர் கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்தால் உங்கள் கணக்குக்கு பணம் வரும் என்றார். சுக்லா ஸ்கேன் செய்ய, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.18,000 போய்விட்டது. சுக்லா பதறிப்போய் ஃப்ரிட்ஜை வாங்கியவரிடம் சொல்ல, ஸாரி ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது. இம் முறை சரியான க்யூஆர் கோடை அனுப்பியிருக்கிறேன். கணக்கையும் நேர்செய்துவிடுகிறேன் என்றிருக்கிறார் அவர். இந்த முறை ரூ 54,000 போய் விட்டது. பிறகுதான் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்திருக்கிறார். பி கேர்ஃபுல் மக்களே!

ss

ந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன், இளம் விஞ்ஞானி எனும் திட்டத்தின்கீழ் நாடு முழுவது மிருந்து 150 மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளிக்க உள்ளது. விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மாணவ- மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படுபவர் களுக்கு விண்வெளி பயன்பாடுகள், அறிவியல் குறித்த அடிப்படை அறிவு இஸ்ரோவால் கற்பிக்கப்படும். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்காக இத்திட் டம் எனச் சொல்லும் இஸ்ரோ ஒன்ப தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனச் சொல்லி யுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி, மாலை நான்கு மணியோடு பதிவு முடிவடைவதால் ஆர்வமுள்ளவர்கள் https://www.isro.gov.in தளத்தில் உங்கள் பெயரை முன்கூட்டியேபோய் பதிவு செய்து பயன்பெறுங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

முகநூல் வழக்க மாக வன்முறை சார்ந்த பதிவுகளை அனுமதிக் காது. ஆனால் விதிவிலக் காக சில பகுதிகளில் மட்டும் புதினின் மரணம், ரஷ்யப் படைகளின் அழிவு குறித்த பதிவுகளை வெளியிட அனுமதிப்ப தாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. “பொதுவாக இத்தகைய பதிவுகளை அனுமதிக்க மாட்டோம். ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உணர்ச்சி களை வெளிப்படுத்தி வடியச் செய்வதற்காக அனுமதிக்கிறோம்” என் கிறது. அர்மீனியா, அஜர்பெய்ஜான், எஸ் தோனியா, ஜியார்ஜியா, ஹங்கேரி, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, ரோமானியா, உக்ரைன் போன்ற நாட்டு மக்களுக்கு மட்டும்தான் இந்த அனுமதியாம். நாளை அமெரிக்கா, ஏதாவது குட்டி நாட் டைத் தாக்கினால், அந்த நாடுகள் அமெரிக்க அதிபரின் மரணம் பற்றி பதிவிட அனுமதிக்குமா பேஸ்புக்? ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு!

-நாடோடி

nkn160322
இதையும் படியுங்கள்
Subscribe