Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

காலம் வேடிக்கை காட்டும்போது பார்த்துச் சிரிக்கவேண்டியதுதான். கூடுவாஞ் சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சந்திரா. 72 வயதான இந்த அம்மையார், மாதம்தோறும் அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோவிலுக்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டவர். அப்படித்தான் இந்த மாதமும் போனார்.

Advertisment

dd

மாலையான பின்பும் வீடு திரும்பவில்லை. மறுநாள் அவரது மகன் சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, தாம்பரம் ரயில்வே போலீஸ் அடையாளம்தெரியாத ஒரு பிணத்தைப் பார்க்க சுப்பிரமணியை அழைத் தது. சிதைந்துபோயிருந்த உடலைப் பார்த்து திகைத்துப் போனாலும், புடவையை வைத்து அம்மாதான் என்று சொல்ல, ஊரெல்லாம் போஸ்டர் அடித்து இறுதி ஊர்வலம் நடைபெற்றுவிட்டது. புதன்கிழமை சந்திரா, அம்பேத்கர் நகருக்குள் நுழைய, தெருவே பீதியடித்துப் போய் பார்த்தது. வழக்கத்துக்கு மாறாக, இரண்டு மூன்று கோவிலைப் பார்க்கப் போய்விட்டார் சந்திரா. இடையில்தான் இத்தனையும் நடந்திருக்கிறது. அப்ப செத்துப் போனது யார

காலம் வேடிக்கை காட்டும்போது பார்த்துச் சிரிக்கவேண்டியதுதான். கூடுவாஞ் சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சந்திரா. 72 வயதான இந்த அம்மையார், மாதம்தோறும் அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோவிலுக்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டவர். அப்படித்தான் இந்த மாதமும் போனார்.

Advertisment

dd

மாலையான பின்பும் வீடு திரும்பவில்லை. மறுநாள் அவரது மகன் சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, தாம்பரம் ரயில்வே போலீஸ் அடையாளம்தெரியாத ஒரு பிணத்தைப் பார்க்க சுப்பிரமணியை அழைத் தது. சிதைந்துபோயிருந்த உடலைப் பார்த்து திகைத்துப் போனாலும், புடவையை வைத்து அம்மாதான் என்று சொல்ல, ஊரெல்லாம் போஸ்டர் அடித்து இறுதி ஊர்வலம் நடைபெற்றுவிட்டது. புதன்கிழமை சந்திரா, அம்பேத்கர் நகருக்குள் நுழைய, தெருவே பீதியடித்துப் போய் பார்த்தது. வழக்கத்துக்கு மாறாக, இரண்டு மூன்று கோவிலைப் பார்க்கப் போய்விட்டார் சந்திரா. இடையில்தான் இத்தனையும் நடந்திருக்கிறது. அப்ப செத்துப் போனது யாரென விசாரித்துக் கொண்டிருக்கிறது போலீஸ்! ஓ! இதுதான் செத்துப் பிழைக்கிறதா!

dd

Advertisment

ந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியை வளர்க்கவும், காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் தொடங்கியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ராகுலை வரவேற்று நகரெங்கும் பேனர்கள் இடம்பெற்றன. அதில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பிலான பேனரில் சாவர்க்கார் படமும் இடம்பெற்றது கேலிப்பொருளாகி யிருக்கிறது. சமீபகாலமாக, பா.ஜ.க.வால் சாவர்க்கார் சுதந்திரப் போராட்ட வீரராக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதை காங்கிரஸும் வழிமொழிவதுபோல இச்சம்பவம் அமைந்துவிட்டது. இதுபற்றி விசாரித்த கேரள மாநில காங்கிரஸ், பேனருக்காக சுதந்திரப் போராட்ட வீரர்களை கூகுள் செய்து தேடிய கட்சித் தொண்டரின் தவறு இது எனக் கண்டறிந்துள்ளது. இச்சம்ப வம் தொடர்பாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவரை கட்சி யிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. அவசர அவசர மாக சாவர்க்கரின் படத்தின்மேல் காந்தியின் படத்தைப் போட்டு மறைத்துள்ளது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

பாகிஸ்தானின் வெள்ள விவகா ரத்தில் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தை களின் எண்ணிக்கை மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகம். பாகிஸ்தான் வெள்ளத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 550-க்கும் அதிகம். உடனடியாக உதவியில் இறங் கிய ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பான யுனிசெஃப், 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள உணவு, மருந்து உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளது. தவிரவும், 39 மில்லியன் டாலர்களைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளுக்கு அது வேண்டுகோளும் விடுத்துள்ளது. எனினும் கொரோனாவுக் குப் பின் பல்வேறு நாடுகள் பொரு ளாதார நெருக்கடியிலிருந்து முழுமை யாக மீளாத நிலையில், பெரிய அளவில் உதவிகள் திரளவில்லை. இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இயற்கைப் பேரிடர்களில் பரஸ்பரம் உதவிக்கொண்டுள்ளன. இந்தியா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு இன்னும் எந்த ஒரு நிதி உதவியையும் அறிவிக்கவில்லை. மதமா... மனிதாபிமானமா... எது வெல்லப் போகிறது?

லெபனான் நாட்டில் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்துவருகின்றனர். ஒருவேளை உணவுக்குக் கூட நிச்சயமில்லாத நிலை நிலவுகிறது. இதனால் சமாளிக்க முடியாத மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் புகத் துடிக்கின்றனர். ஆனால் எந்த ஒரு நாடும் அகதிகளை வரவேற் காத நிலையில், ஐரோப்பிய நாடுகளில் திருட்டுத்தனமாக நுழைவதொன்றே வழியாக இருக்கிறது. இதற்காக லெபனான் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் படகு மூலம் லெபனானிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக வெளியேறினர். அப்போது அந்தப் படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. 20 பேர் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு நிலையில், 86 பேர் உயிரிழந்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை மிகச் சரியாகத் தெரியாதநிலையில் மேலும் சிலர் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இதயமே துயரத்தில் மூழ்கிடும்போலிருக்கே!

து செயலிகளின் காலம். அனைத்துக்கும் செயலிகள். நிற்பதற்கும் நடப்பதற்கும் எத்தனை அடி நடந்தோம் எனக் கணக்கிடுவதற்கும்கூட செயலிகள் வந்துவிட்டன. குற்றச் செயல்களைத் தடுக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் விரை வில் காவல்துறையால் "பருந்து' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ரவுடிகளின் பெயர், இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களது கூட்டாளிகள், குடும் பத்தில் வேறு யாரேனும் குற்றவாளிகளாக உள்ளனரா, எத்தனை முறை சிறை சென்றுள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்தச் செயலியில் பதிவேற்றப்படும். ரவுடிகள், கொலைக் குற்றவாளிகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு எதிராக பிடி ஆணைகள் இருந்தால் நிறைவேற்றவும், நிலுவை வழக்குகளைக் கண்காணிக்கவும் வசதியாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறதாம். தொழில்நுட்ப வளர்ச்சி எதுக்கெல்லாம் உதவுது!

-நாடோடி

nkn011022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe