Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் ஜாக்குலின். தனியார் நிறுவனமொன்றில் சமீபத்தில் பணிக் குச் சேர்ந்த இவர், நிறுவனத்தால் வங்கிக் கணக்கு தொடங்கி, தரப்பட்ட புதிய ஏ.டி.எம். கார்டிலிருந்து பண மெடுக்க எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றார். புதிய ஏ.டி.எம். கார்டைச் செயல்பட வைக்க அவர் திணறிய நிலையில், அருகில் நின்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் உதவி செய்வது போல் நடித்துவிட்டு, ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

Advertisment

dd

சற்று நேரத்தில் ஜாக்குலின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.29,500 பணம் எடுத்ததாக செய்தி வர, பதறிப்போன ஜாக்கு லின் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட கேமராவைச் சோதித்தபோது, பெரம்பூர் பிரபு என்பவர் பணம் எடுத்ததைக் கண்டறிந்தனர். ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் மத்திய அரசின் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் வீட்டைச் சோதனையிட்ட போது, அவரிடம் இதுபோல் 270 ஏ.டி.எம். கார்டுகள் இர

சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் ஜாக்குலின். தனியார் நிறுவனமொன்றில் சமீபத்தில் பணிக் குச் சேர்ந்த இவர், நிறுவனத்தால் வங்கிக் கணக்கு தொடங்கி, தரப்பட்ட புதிய ஏ.டி.எம். கார்டிலிருந்து பண மெடுக்க எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றார். புதிய ஏ.டி.எம். கார்டைச் செயல்பட வைக்க அவர் திணறிய நிலையில், அருகில் நின்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் உதவி செய்வது போல் நடித்துவிட்டு, ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

Advertisment

dd

சற்று நேரத்தில் ஜாக்குலின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.29,500 பணம் எடுத்ததாக செய்தி வர, பதறிப்போன ஜாக்கு லின் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட கேமராவைச் சோதித்தபோது, பெரம்பூர் பிரபு என்பவர் பணம் எடுத்ததைக் கண்டறிந்தனர். ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் மத்திய அரசின் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் வீட்டைச் சோதனையிட்ட போது, அவரிடம் இதுபோல் 270 ஏ.டி.எம். கார்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவரிடம் போலீசார் விரிவாக விசாரணை செய்துவருகின்றனர். பார்ட் டைமா மத்திய அரசுப் பணி பார்த்திருக்கிறார்போல!

தெலுங்கானா மாநிலம் பீர்கூர் பகுதி ரேஷன் கடை பேனரில் ஏன் மோடி படம் வைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்து கொண்ட விவகாரம், கேஸ் சிலிண்டர் உருளைகளில் அதன் விலையைக் குறிப் பிட்டு மோடி படம் வைக்குமளவுக்கு போனதைக் குறிப் பிட்டிருந்தோம். அது அத்துடன் நிற்க வில்லை. தெலுங் கானா முதல்வரின் மகன் கே.டி.ராமாராவ், “"மாநில அரசுகள் செலுத்தும் வரியைத்தான் ஒன்றிய அரசு திருப்பித்தருகிறது. சொந்தப் பணத்தை அல்ல. 2015- 2021 வரை ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா வழங்கிய வரி 3,65,797 கோடி. ஒன்றிய அரசு திருப்பித் தந்தது 1,97,150 கோடி மிச்சத் தொகை பா.ஜ.க. ஆளும் உ.பி.க்கும், ம.பி.க் கும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தெலுங்கானாவுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்க வேண்டும்''”என பதிலடி தந்துள் ளார். நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்!

Advertisment

ந்தியா முழுவதும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந் தப் பணியிடங் களை நிரப்புவதற்கு வழிவகை செய்யாமல் அனுபவ அறிவுப் பேராசிரி யர்களை நியமித்துக்கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அனுபவ அறிவுப் பேராசிரியர்கள் யார்? பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், சிவில் சர்வீசஸ், ராணுவம் இன்னும் பல துறைகளில் பதினைந்து ஆண்டுகள் அனுபவமோ அல்லது அனுபவ அறிவோ உள்ளவர்களை பேராசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம் என்று சொல்லி யுள்ளது. இவர்களை துணை வேந்தர், உயர்கல்வி நிறுவன இயக்குநர்கள் நியமிக்கலாம். சுருக்கமாக, முறையாகப் படித்த, பேராசிரியராகும் தகுதியுள்ளவர்களுக்கு அவர் களது பணிவாய்ப்பு மறுக்கப் படுகிறது. மற்றொரு விதத்தில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களை அனுபவப் பேராசிரியர் களாக நியமித்துக் கொள்ளலாம். இதற்கு பேராசிரியர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நியாயமான எதிர்ப்பு தான்!

dd

னிதா ஜக்தியோவை உங்களுக்குத் தெரியுமா? மகா ராஷ்டிர மாநிலம் புல்தானாவில் வசிக்கும் வனிதா, தன்னை பாம்புகளின் தோழி என அழைத்துக் கொள்பவர். பாம்பு என்றால் படை வேண்டுமானால் நடுங்கலாம். வனிதா நடுங்கு வதில்லை. நகர்மயமாதல், வசிப்பிடம் சுருங்குதல் காரணமாக நகருக்குள் வரும் 50,000-க்கும் அதிக மான பாம்புகளை மீட்டு காட்டுக்குள் விட்டிருக் கிறார். 12 வயதிலே பாம்புகளை தைரியமாகப் பிடிக்க ஆரம்பித்த இவரின் ஆர்வம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காட்டு உயிரிகளைப் பாதுகாத்தல் ஆகியவை சார்ந்தது. இவரது தன்னார்வ அமைப்பான "சோய்ரே வஞ்சாரே' பாம்பு, கழுகுகளைப் பாதுகாப்பதில் ஆர்வம்காட்டி வருகிறது பாம்புகளுக்கான இவரது சேவையைப் பாராட்டி, 2020-ல் ஒன்றிய அரசு நாரி சக்தி புரஷ்கார் விருது வழங்கி யிருக்கிறது. வானமே வசப் படும்போது பாம்பு வசப் படாதா!

2020, செப்டம்பர் 14-ல், உத்தரப்பிரேதச மாநிலம் ஹத்ராசில் பழங்குடியினப் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத் துக்கு உள்ளான விவகாரத்தை செய்தியாக்குவதற்குச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், வன்முறையைத் தூண்ட முயன்றதாகக் கூறி தேசத் துரோகச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கீழ் நீதி மன்றங்களைத் தாண்டி அலகாபாத் உயர்நீதிமன்றத் திலும் இவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. பின்பு உச்சநீதிமன்றத்தை அணுகிய சித்திக், இரண்டு ஆண்டு களுக்குப் பின் தற்போதுதான் நிபந்தனை ஜாமீன் பெற்றிருக் கிறார். சிறையிலிருந்தபோது, இவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிய, உடல்நிலை மோசமானது. சிறை வளாக மருத்துவமனையோ இவருக்கு கொரோனா நெகட்டிவ் எனத் தெரிவித்தது. பின் இவர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட பின், எய்ம்ஸில் வைத்து சிகிச்சையளிக் கப்பட்டது. ஜாமீன் கிடைத்தாலும், இன்னும் ஆறு வாரத்துக்கு டெல்லி போலீஸிடம் ஆஜராகி கையெழுத்திட வேண்டு மென்பதால் அவர் கேரளா திரும்பமுடியாது. ஊடகத் துறையின் குரல்வளையில் எதேசத்திகாரத்தின் கால்!

-நாடோடி

nkn170922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe