Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாடு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தெலங் கானா மாநிலத்தில் செப். 2-ஆம் தேதி ரேஷன் கடையொன்றை ஆய்வுசெய்த நிர்மலா, அங்கிருந்த பேனரில் ஏன் பிரமதர் மோடி படம் இல்லையென கலெக்டரிடம் ஆட்சேபனை தெரிவித்தார். ரேஷனில் வழங்கும் அரிசிக்கான மானியத்தில் பெரும்பகுதி மத்திய அரசு அளிப்பது. ஆனால் பேனரில் மோடி படம் இல்லை.

Advertisment

dd

இன்று மாலைக்குள் பேனரில் மோடி படம் இடம் பெறவேண்டுமென கலெக்டரை வலி யுறுத்தியதோடு, மத்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள் என சத்தம்போட்டார். இந்த விவகா ரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், பேனர் களை நிர்வகிப்பதுதான் மாவட்ட ஆட்சியரின் வேலையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பதிலுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியினர், மோடி படம் தானே வேண்டும் என்று காலி சிலிண்டர்களில், அதன் விலையுடன் மோடியின் படத்தை ஒட்டி விளம்பரம் செய்து பரபரப்பாக்கியிருக்கின்றனர். பிள்ளையார் பி

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாடு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தெலங் கானா மாநிலத்தில் செப். 2-ஆம் தேதி ரேஷன் கடையொன்றை ஆய்வுசெய்த நிர்மலா, அங்கிருந்த பேனரில் ஏன் பிரமதர் மோடி படம் இல்லையென கலெக்டரிடம் ஆட்சேபனை தெரிவித்தார். ரேஷனில் வழங்கும் அரிசிக்கான மானியத்தில் பெரும்பகுதி மத்திய அரசு அளிப்பது. ஆனால் பேனரில் மோடி படம் இல்லை.

Advertisment

dd

இன்று மாலைக்குள் பேனரில் மோடி படம் இடம் பெறவேண்டுமென கலெக்டரை வலி யுறுத்தியதோடு, மத்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள் என சத்தம்போட்டார். இந்த விவகா ரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், பேனர் களை நிர்வகிப்பதுதான் மாவட்ட ஆட்சியரின் வேலையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பதிலுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியினர், மோடி படம் தானே வேண்டும் என்று காலி சிலிண்டர்களில், அதன் விலையுடன் மோடியின் படத்தை ஒட்டி விளம்பரம் செய்து பரபரப்பாக்கியிருக்கின்றனர். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது!

Advertisment

dd

நீங்கள் சமகாலத் திய உலகில் இருக்கிறீர்களா, இல்லையா என்பதை அளவிட சில வழிகள் இருக்கின்றன. மசாகா கிட்ஸ் ஆப்பிரிக்கானா இசைக் குழுவைத் தெரியுமா? தெரியுமென்றால் சமகாலத்தவர். இல்லையென்றால் பின்தங்கியவர். உலகில் வேறெந்த நாட்டைவிடவும் உகாண்டாவில் தான் ஆதரவற்ற குழந்தைகள் அதிகம். 24 லட்சம் அநாதைக் குழந்தைகள். அனைத்தும் போர், எய்ட்ஸ் தொற்று, குடிமைச் சண்டைகள் ஆகியவற்றின் பின் விளைவு. இப்படி ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளித்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை ஒருங்கிணைத்து பயிற்சியளிக்கும் தன்னார்வ அமைப்பால் உருவான இசைக்குழுதான் மசாகா கிட்ஸ் ஆப்பிரிக்கானா. பாரம்பரிய ஆப்பிரிக்க நடனம், துள்ள லான நாட்டுப்புற இசை என அசத்தும் இவர்களை முகநூலில் 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். 2 முதல் 10 வயதுடைய அநாதைக் குழந்தைகளே இக் குழுவின் கலைஞர்கள். பல்வேறு விருதுகளை இக்குழு வாங்கிக் குவித்திருக்கிறது. வெறும் நடனமல்ல, வாழ்க்கையில் வெல்வதற்கான போராட்டம்!

ம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் பிரச்சனைக்குள்ளான 60 சம்பவங்களையாவது சுட்டிக் காட்ட முடியும் என தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் கள், மனித உரிமைப் போராளிகள், கல்வியாளர்கள் உரிய ஆவணங்கள் இருந்தபோதும் தங்கள் பணி தொடர்பாக வெளிநாட்டுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்து நீக்கம் முதல் குறைந்தபட்சம் 27 பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப் படுவது, வீட்டோடு தடுக்கப்பட்டோ முடக்கப்பட்டிருக் கிறார்கள். ஃபகத் ஷா, ஆஷிப் சுல்தான், சஜ்ஜாத் குல் மூவரும் ஏதாவது ஒரு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவது, அதில் நீதிமன்ற பிணை கிடைக்கும்போது உபா சட்டத்தில் கைதுசெய்வது என நகரவிடாமல் முடக்கப்பட்டிருக்கிறார்கள். வலைத்தளங்களின் மீது மட்டும் இந்த மூன்றாண்டு காலங்களில் 1,346 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. ஓ! இதுதான் அமைதியை உருவாக்கும் வழியா!

காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன். இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த பாலமணிகண்டன், பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் கலந்துகொண்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர் வாந்தியெடுக்கவே, பெற்றோர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெற்றோரிடம், பள்ளியில் காவலாளி கொடுத்த குளிர்பானத்தைக் குடித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் பள்ளியின் காவலாளியை விசாரிக்க, மணிகண்டனுடன் பயிலும் சக மாணவியின் தாயான சகாயராணி விக்டோ ரியாதான் குளிர்பானத்தை மணிகண்டனுக்குக் கொடுக் கச் சொல்லி தந்ததாகத் தெரிவித்துள்ளார். விசா ரணையில், தன் மகளைவிட படிப்பில் சிறந்து விளங்கிய மணிகண்டன் மீதான பொறாமையில் குளிர்பானத்தில் விஷம்கலந்து கொடுத்தது தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் பாலமணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, சகாயராணி கைது செய்யப்பட்டுள்ளார். இது தாய்மையல்ல, நோய்மை!

gg

ந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் பலரின் பெயரை பல தெருக்களுக்கு நாம் சூட்டியிருக்கிறோம். அதுபோல நம் ஆட்களின் பெயரை வெளிநாட்டினர் தங்கள் வீதிகளுக்குச் சூட்டியிருக்கிறார்களா? தமிழகத்தைச் சேர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தன் புகழ் வெளிச்சத்தால் இதைச் சாதித்திருக்கிறார். கனடாவின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரு என பெயர். இந்தத் தெருவில் உள்ள பெயர்ப் பலகைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டதுடன் மர்காம் நகர மேயருக்கும் ரஹ்மான் நன்றி தெரிவித்திருக்கிறார். உண்மையைச் சொல்லப்போனால் 2013-லேயே கனடாவில் ஒரு தெருவுக்கு ரஹ்மான் பெயரைச் சூட்டிவிட்டார்கள். இது இரண்டாவது தெரு. நம்ம ஊர் பிரபலம் பெயர், வெளிநாட்டுத் தெருக்களுக்கு சூட்டப்படுவதில் நமக்கும் பெருமைதானே! நீங்க அசத்துங்க!

-நாடோடி

nkn100922
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe