Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

டந்த ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தற்கொலைகள் அடிப்படையில் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பகம், ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளது. அதில் இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது. 2021-ல் இந்தியாவில் 1,64,033 தற் கொலைகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 22,207 தற்கொலைகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக 18,925 தற்கொலைகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அடுத்த மூன்று இடங்களை மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடக மாநிலங்கள் பிடித்துள்ளன. மிக அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் வெறும் 3.6 சதவிகித தற்கொலைகள் நடந்துள்ளன. ஆனால் சாலைவிபத்து மரணங்களிலும், பாலியல் வன்புணர்வுக் குற்றங் களிலும் உத்தரப்பிரதேசம் எப்போதும் டாப்தான்! இந்தப் பட்டியல்ல பின்தங்குற வழியைப் பாருங்க!

Advertisment

ருங்கிணைந்த சோவியத் யூனியனின்

ருங்கிணைந்த சோவியத் யூனியனின் கடைசித் தலைவராக இருந்த மிகைல் கோர்பசேவ், தனது 91 வயதில் ஆகஸ்ட் 31, dd2022-ல் மரணமடைந்தார். கோர்பசேவுக்கு இரண்டு முகம் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள். ஆட்சி நிர்வாகத்தில் கட்சியின் தலையீட்டைக் குறைத்து, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். துரதிர்ஷ்டவசமாக இவையெல்லாமே தோல்வியில் முடிய, சோவியத் யூனியன் சிதைந்தது. இவரது சீர்திருத்த நடவடிக்கைகளால்தான், நாடும், கட்சியும் சிதைந்தது என தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டார். எனினும், இவரது முயற்சியின் காரணமாகவே அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் முடிவுக்கு வந்ததாக பாராட்டப்பட்டு, 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். விமர் சனங்களைத் தாண்டி, உலகம் முழுவதும் கோர்பசேவ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் தலைவர்கள். ரெட் சல்யூட்!

வெற்றிக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை எத்தனையோ பேர் எத்தனையோ விதத்தில் நிரூபித்துள்ளார்கள். அதை மீண்டும் ஒருமுறை மத்தியப்பிரதேசத்தின் யஷ் சோன்கியா மெய்ப்பித்துள்ளார். மத்தியப்பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர் யஷ். பிறந்தபோதே குளுகோமா நோய்த் தாக்கம் உடைய யஷ், தனது 8 வயதில் முழுமையாகப் பார்வையை இழந்தார். சிறப்புப் பள்ளியில் பயின்ற அவர், ஐந்தாம் வகுப்புக்குமேல் அனைவரும் படிக்கும் பள்ளியில் பயில ஆரம்பித்தார். பி.டெக் படிப்பு வரை படித்திருக்கும் இவர், பெங்களூரிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொறியாளர் வேலைக்காக விண்ணப்பித்தார்.

dd

Advertisment

இணைய வழித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று வேலையைப் பெற்றுள்ளார். ஆண்டு ஊதியம் 47 லட்சமாம். சரி, அவர் எப்படி மென்பொறியாளர் ஆனார் என்கிறீர்களா? இணையத் திரையில் வரும் டெக்ஸ்டைப் படித்துக்காட்ட என்றே, சிறப்பு மென் பொருள் இருக்கிறது, அவற் றின் துணையுடன் தனது படிப்பையும் தேடலையும் வளர்த்துக்கொண்டாராம். என்றாலும் பெரும் போராட்டத்துக்குப் பின்பே யஷ்ஷுக்கு இந்த வேலை சாத்தியமாகியுள்ளது. சபாஷ் சோன்கியா!

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, விவ சாயிகளுக்கான பிரதமரின் உதவித் தொகை அவசர அவசரமாக கணக்கில் போடப்பட்டது. எல்லாம் முடிந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், தகுதியற்ற நிறைய பேர் விவசாயிகள் என உதவித் தொகை பெற்றதாக தெரியவந்தது. அதாவது உதவி பெற்றவர்களில் 2 கோடி பேர் தகுதியற்றவர்களாம். இதையடுத்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அந்தத் தொகையை திரும்பக் கட்டச் சொன்னது. ஆனால் உதவித் தொகை பெற்றவர்களோ ஆழ்ந்த சைலண்ட் மோடுக்குப் போய்விட்டனர். ஆனால், காங்கிரஸ் விழித்துக்கொண்டு நாடு முழுக்க சரிவர பல இடங்களில் மழை பெய்யவில்லை. இன்னும் பல இடங் களில் மழை கொட்டோ கொட்டென கொட்டி துவம்சம் செய்துவிட்டது. இந்த நிலையில் பிரதமர் உதவித் தொகை யைத் திரும்ப கேட்பதா என கண்டனம் தெரிவித்து வருகிறது. கொடுக்கலாம் திரும்பக் கேட்கலாமா?

d

ரலாறு காணாத மழை பாகிஸ்தான் மக்களை ரவுண்ட் சுழற்றியடித்து படுத்துகிறது. இதுவரை மழைக்கு 1100 பேர் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. உண்மை எண்ணிக்கை இன்னும் அதிகம். பாகிஸ்தான் மொத்த மக்களில் 3-ல் ஒரு பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மழைவெள் ளத்தால் 6 லட்சம் கர்ப்பிணிகள் சிகிச்சையின்றி தவிக்கிறார்களாம். ராணுவமும், காவல் துறையும் மீட்பு பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் மழைவெள்ளத்தால் இடம் மாற்றப்பட் டுள்ளனர். நிலைமை மட்டுமீறிப் போனதால், அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, பிற நாடுகளின் உதவியையும் கோரியுள்ளது பாகிஸ்தான். நாடெங்கும் சில மாதங்களாகவே மழை நீடித்துவருவதால் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம், தக்காளிகூட கிலோ 400, 500 ரூபாய் விற்பனையாகி வருகிறது. தட்டுப்பாட்டைத் தவிர்க்க, இந்தியாவிலிருந்து வெங்காயம், தக்காளி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ரொம்பப் படுத்துது மழை!

-நாடோடி

nkn070922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe