Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி, இந்தியாவில் 2020-ல் மட்டும் 109 பெண்களுக்கு எதிராக 105 அமில வீச்சு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனரா எனில், இல்லை. பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வெளியே நிவாரணம், அதிகாரம், சாதிய மேலாதிக் கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் சமரசம் காணப்பட்டுவிடும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் களோ தங்கள் வாழ்நாள் முழுவதும், முகத்தைக் கூட காணமுடியாமல், ரணமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது.

Advertisment

dd

சோனி வேர்ல்டு பெஸ்ட் போட்டோகிராபி போட்டிக் காக ஜோர்டி பிஜாரே, இந்தியாவில் அமில வீச்சுக்கு உள்ளானவர்கள் என்ற தலைப்பில், எடுத்த புகைப்படங்களில் ஒன்று இது. புகைப்படத்தில் அமில வ

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி, இந்தியாவில் 2020-ல் மட்டும் 109 பெண்களுக்கு எதிராக 105 அமில வீச்சு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனரா எனில், இல்லை. பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வெளியே நிவாரணம், அதிகாரம், சாதிய மேலாதிக் கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் சமரசம் காணப்பட்டுவிடும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் களோ தங்கள் வாழ்நாள் முழுவதும், முகத்தைக் கூட காணமுடியாமல், ரணமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது.

Advertisment

dd

சோனி வேர்ல்டு பெஸ்ட் போட்டோகிராபி போட்டிக் காக ஜோர்டி பிஜாரே, இந்தியாவில் அமில வீச்சுக்கு உள்ளானவர்கள் என்ற தலைப்பில், எடுத்த புகைப்படங்களில் ஒன்று இது. புகைப்படத்தில் அமில வீச்சுக்கு உள்ளான பெண்ணும், அமில வீச்சுக்கு முன்பான அவர் தோற்றமும். அமில வீச்சாளர்கள் மனித அரக்கர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலையை ஒட்டியுள்ள கிராம மக்கள், அதிகாரிகளைத் தேடி வந்து எறும்பைக் குறித்து புகார் சொல்லியுள்ளனர். எறும்பைப் பற்றி புகாரா என ஆச்சரியமா? மஞ்சள் எறும்புகள் எனப்படும் இந்த எறும்புகள் மற்ற எறும்புகளைப் போல கடித்து வைப்ப தில்லை. இவை எதிரிகளின் மேல் போர்மிக் அமிலத்தை ஸ்ப்ரே செய்கின்றன. இவை தீராத எரிச் சலை ஏற்படுத்துகின் றன. அதேபோல வரி சையாக ஒரு ஒழுங்கில் நகர்வதில்லை. இதனால் எதிரிகள் குழம்பிப் போய்விடு கின்றனர். தவிரவும், எதிரிகளை கண்ணுக்கு அருகிலே கடித்து திக்குமுக்காட வைக்கின்றன. இதனால் இப்பகுதியில் ஆடு, மாடு கள் இந்த எறும்புகளால் கடிபட்டு பலர் இடம்பெயர்ந்து போயுள்ளன ராம். தவிரவும் அந்தப் பகுதியிலுள்ள பிற எறும்பு இனங்களையே பிடித் துச் சாப்பிடும் குணமுள்ளவை இந்த எறும்புகள். இதனையடுத்து உள் ளூர் வன அலுவலர் பிரபு, மக்கள் சொல்லும் புகாரின் தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாராம். எறும்பு ஊர பீதி பெருகும்!

Advertisment

dd

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவும் அவரது குடும்பத்தினரும் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அந்தக் குடும்பத்தில் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷா உள்ளிட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த பதினோரு பேரையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுவித்திருக்கிறது குஜராத் அரசு. இது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. இப்படி சிறப்பு தினங்களில் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படும் கைதிகள், பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் களாக இருக்கக்கூடாது என்பது விதிமுறைகளில் ஒன்று. தவிர வும், இவர்களை விடுவிக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்யும் குழுவில், இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் இடம்பெற்றுள்ளனர். இதைக் கண்டித்துள்ள ராகுல், “"5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து, 3 வயதுக் குழந்தையைக் கொன்றவர் களுக்கு விடுதலை. பிரதமரே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கு மான வித்தியாசத்தை இந்த நாடே பார்த்துக்கொண்டிருக் கிறது''”என்றுள்ளார். குஜராத் மாடல் ஜொலிஜொலிக்குது!

ந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அரசியல் வாதி அரசியல்வாதிதான். சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ஒரு ரெய்டு நடந்தது. இந்தச் சோதனை யில் எஃப்.பி.ஐ. அவரது வீட்டில் முக்கியமான அரசு ஆவ ணங்களைக் கைப்பற்றியதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் இதற்கு பதிலடி தந்துள்ள ட்ரம்ப், "எஃப்.பி.ஐ. என் வீட்டில் மூன்று பாஸ்போர்ட்டு களைத் திருடிவிட்டது. இதில் ஒன்று காலாவதி யானது. இது அரசியல் எதிரி மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு முன்பு அமெ ரிக்காவில் இப்படியான ஒன்று நடந்ததே இல்லை. என் பாஸ் போர்ட்டுகளைத் திருப்பித் தரா விட்டால், மக்களின் கோபத்தை அரசு சந்திக்கவேண்டியிருக்கும்'' என ஒரு போடு போட்டிருக்கிறார். எஃப்.பி.ஐ.யையே பாஸ் போர்ட் திருடங்களா ஆக் கிட்டாரே!

-நாடோடி

nkn240822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe