Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

மிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்று வரும் நிலையில் தமிழக செஸ் வீரர் பிரனவ் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டராக உருவெடுக்க, சர்வதேச செஸ் கூட்டமைப்பு சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி 2500 இ.எல்.ஓ. புள்ளிகள் பெறுவதுடன் மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பட்டம்பெற்ற வீரர்களை வீழ்த்தவேண்டும்.

Advertisment

dd

சென்னையைச் சேர்ந்த இளம் வீரரான பிரனவ், கடந்த 2015-ல் தேசிய சாம்பியனாக உரு வெடுத்தார். இந்நிலையில் சமீபத் தில் 2500 புள்ளிகளைக் கடந்ததுடன், மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களையும் வீழ்த்தியதை யடுத்து கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். இவர் இந்தியா வின் 75-வது கிராண்ட் மாஸ்டர். அதேசமயம் தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றிய 27-வது செஸ் வீரர் ஆவார். வெல்டன் பிரனவ்!

Advertisment

dd

ஷ்ய- உக்ரைன் போருக்கே எரிபொருள் விலை யேற்றம், உணவுப் பொருள் தட்டுப்பாடு என உலகப் ப

மிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்று வரும் நிலையில் தமிழக செஸ் வீரர் பிரனவ் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டராக உருவெடுக்க, சர்வதேச செஸ் கூட்டமைப்பு சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி 2500 இ.எல்.ஓ. புள்ளிகள் பெறுவதுடன் மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பட்டம்பெற்ற வீரர்களை வீழ்த்தவேண்டும்.

Advertisment

dd

சென்னையைச் சேர்ந்த இளம் வீரரான பிரனவ், கடந்த 2015-ல் தேசிய சாம்பியனாக உரு வெடுத்தார். இந்நிலையில் சமீபத் தில் 2500 புள்ளிகளைக் கடந்ததுடன், மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களையும் வீழ்த்தியதை யடுத்து கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். இவர் இந்தியா வின் 75-வது கிராண்ட் மாஸ்டர். அதேசமயம் தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றிய 27-வது செஸ் வீரர் ஆவார். வெல்டன் பிரனவ்!

Advertisment

dd

ஷ்ய- உக்ரைன் போருக்கே எரிபொருள் விலை யேற்றம், உணவுப் பொருள் தட்டுப்பாடு என உலகப் பொருளாதாரம் நொண்டி யடித்துவருகிறது. இந்நிலையில் சீனா, தைவான் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிவருகிறது. குட்டி நாடான தைவானும் சீனா போர் தொடுத்தால் எதிர்கொள் ளத் தயார் என மார்தட்டிவரு கிறது. 2.36 கோடி மக்கள் தொகை கொண்ட குட்டிநாடான தைவான், போர் நடந்தால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் துணைக்கு வரும் என்ற தைரியத் தில் இருக்கிறது. அதற்கேற்ப, அமெரிக்க நாடாளுமன்ற தலை வர் நான்சி பெலோசி தைவா னுக்கு பயணம் மேற்கொண்டார். இதனை சீனா கண்டித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில், ரஷ்யா வுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சீனாவுக்கு, இம்முறை ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது ரஷ்யா. ரஷ்யா, சீனா என அண்டையி லுள்ள குட்டி நாடுகளை வலுவில் ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துவருவதும், இத்தகைய சச்சரவுகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டுவிடக்கூடாது என்ற கவலையும் உலக மக்களிடம் பெருகிவருகிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

dd

மாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே இருப்பார்கள். சென்னையைச் சேர்ந்த இளைஞர் சூரியப்பிரதாபன் உத்தரப்பிரதேச ஜெயிலில் இருக்கிறார். இவர் செய்த குற்றம் என்ன என்கிறீர் களா? சென்னை மெட்ரோ வாட்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்த இவரை நிரந்தர வேலையில் சேரச் சொல்லி வீட்டிலிருந்தவர்கள் நச்சரித்துவந்திருக்கின்றனர். அரசு வேலை தொடர்பான தேடலில் இருந்தவரை, மணிமாறன் என்பவர் தொடர்புகொண்டு மத்திய ரயில்வே அலுவலர்கள் தனக்குப் பழக்கமென்று கூறி, சிலருடன் வீடியோ காலில் பேசவைத்து நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். பின் சூரியப்பிரதாபனிடம் வேலைக் காக 12 லட்சம் பெற்றுக்கொண்டு, ரயில்வே பயணச்சீட்டு பரி சோதனையாளர் என்பதற்கான அடையாள அட்டை, வேலையில் சேர்வதற்கான கடிதம் போன் றவற்றை வழங்கியிருக்கிறார். அதைக் கொண்டு வேலையில் சேரச் சென்றவரைத்தான் உ.பி. போலீஸ் கைது செய்துள்ளது. ஐ.டி. பணி நியமனக் கடித மெல்லாம் போலியானவையாம். அரசனை நம்பி புருஷனை விடலாமா?

ஜார்கண்ட் மாநிலம் டாகுடோலி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு ஓரான். பட்டதாரியான இவர், கோவிட் ஊரடங்கு சமயத்தில் வேலை செய்ய ஆள்கிடைக்காததால் தனது நிலத்தை ட்ராக்டர் மூலம் உழுது பயிர் செய்தார். அதுமுதற்கொண்டு தனது 10 ஏக்கர் நிலத்தை தானே உழ ஆரம்பித்தார். இதைப் பொறுக்காத கிராமப் பஞ்சாயத்தார் சமீபத்தில் அவரை பஞ்சாயத் துக்கு அழைத்தார்கள். அங்கே, “உழுவது ஆண்களுக்கே உரிய வேலை. அதை எப்படி மேற்கொள்ளலாம்” எனக் கேட்டிருக்கின்றனர். காளையை வைத்துத்தானே பெண்கள் உழக்கூடாது. நான் ட்ராக்டரை வைத்து உழுகிறேன். அதனால் பிரச்சனையில்லை என்றிருக்கிறார். பஞ்சாயத்தோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் உழுதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம் என மிரட்டியிருக்கிறது. மஞ்சு காவல் நிலையத்தில் போய் புகார் கொடுத்துவிட்டார். இப்போது கிராம நிர்வாகம், ஊர்ப் பஞ்சாயத்தை அழைத்து சமரசம் பேசிவருகிறது. மஞ்சுவோ, "உலகம் மாறிவிட்டது. பெண்கள் செய்யாத தொழிலில்லை. இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது'’என்கிறார் உறுதியாக. ஆணுக்குப் பெண்ணிங்கு இளைப்பில்லை காண்!

dd

த்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 7 நகராட்சி களை பா.ஜ.க. இழந்துள்ளது. காங்கிரஸ் 5-லும், ஆம் ஆத்மியும் சுயேட்சையும் தலா ஒன்றிலும் வென்றுள்ளன. 2024-ல் பாராளு மன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் நம்பகமான ஒன்றாகப் பார்க்கிறது காங்கிரஸ். ஆனால் இந்த விஷயம் அதைப் பற்றியதில்லை. பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த குன்னார் ஜன்பத் பஞ்சாயத்தில் தோல்வி யுற்ற பா.ஜ.க. வேட்பாளரை, அம்மாவட்ட ஆட்சியர் சஞ்சய் மிஸ்ரா வெற்றிபெற்றதாக அறி வித்துவிட்டார். இதற்கு எதிராக நிஜமாகவே வெற்றிபெற்ற காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்த பரமானந்த் ஷர்மா நீதிமன்றத் துக்குப் போய்விட்டார். வழக்கை தீர விசாரித்த நீதிபதி விவேக் அகர்வால், “"மிஸ்ரா கலெக்டராக இருக்கவே தகுதி யற்றவர். அரசியல் கட்சியின் முகவரைப்போல் செயல் பட்டிருக்கிறார். இவரை இவரது பதவியில் இருந்து அகற்ற வேண்டும்''” என கடிந்துகொண்டிருக் கிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

-நாடோடி

nkn130822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe