இந்தியா ஒரு மிகப்பெரிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து உபயோகம், நகர்மயமாதல், தேனீக்கள் கூடுகட்ட உகந்த இடங்களின் அழிவு, நோய் போன்றவற்றால் இந்தியத் தேனீக்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. தேனீக்கள் அழிந்தால் என்னவாகும்? தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் சூரியகாந்தி பயிரிட்டவர்கள், பூக்களிடையே மகரந்தச் சேர்க்கையை விவசாயிகளும், விவசாய அதிகாரிகளும் செயற்கையாக நிகழ்த்துகிறார்கள்.
காரணம், தேனீக்களின் எண்ணிக்கை குறைந்ததனால் தான். அதேபோல தேனீக்களை வளர்த்து தேனெடுப்பவர்களும் சமீபமாக தேன் பெட்டிகளை வைத்து தேனெடுக்கும் தொழில் நசிந்துவருகிறது என்கிறார்கள். சூரியகாந்திக்கு மனித முயற்சியில் மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்திவிடலாம். தேனீயால் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் நூற்றுக்கணக்கான இயற்கைத் தாவரங்கள் மகரந்தச்சேர்க்கையின்றி அழியுமே! அதற்கு என்ன செய்வது என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலை. தேனீ அழிஞ்சா இவ்வளவு பிரச்சனை இருக்குதா!
இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாட

இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் இந்திய மொழிகளை கற்றுத்தர, அந்தந்த மொழிகளுக்கான பேராசிரியர்களை இந்தியா நியமிப்பது வழக்கம். இந்தப் பணிகளை ஐ.சி.சி.ஆர். (இந்திய கலாச்சார உறவுக்கான சபை) மேற்கொள்ளும். 1970 முதல் இவ்வமைப்பு வெளிநாட்டுக் கல்வி நிறுவனங் களில், வருகைதரு இருக்கைகளை அமைத்து அதற்கு பேராசிரியர்களை நியமித்துவருகிறது. இப்படி நூற்றுக்கணக்கான இருக்கைகள் வெளிநாட்டில் அமைக்கப்பட்டிருந்தது. இது குறைந்து தற்போது 51 இருக்கைகளாகச் சுருங்கி யுள்ளது. இதில் தமிழுக்காக 2 இருக்கைகள் மட்டுமே போலந்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் 2014 முதலே பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது ஐ.சி.சி.ஆர். சார்பில் வெளியிட்ட இருக்கைகளின் பட்டியலில் தமிழ் இடம்பெற்றிருந்தது. ஆனால் அதன் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் இடத்தில் தமிழ் இடம்பெறவில்லை. வருகைதரு பேரா சிரியருக்கான பணிக்காலமும் 3 ஆண்டுகளி லிருந்து 9 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தி, சமஸ்கிருதத்துக்கு இதுபோல் எதுவும் நடக்கவில்லை. தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை ஐ.சி.சி.ஆர். வழங்கவேண்டுமென்ற கோரிக்கை தமிழ் உணர்வாளர் களிடமிருந்து எழுந்துள்ளது. நியாயமான கோரிக்கைதான்!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரை பா.ஜ.க. சரமாரியாக கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுடில்லி விஜய் சவுக்கிலிருந்து ஜனாதிபதி மாளிகைநோக்கி பேரணிசெல்ல காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அப்போது லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, "ராஷ்டிரபத்தினியை சந்திக்கப் போகிறேன்'' என்று பேசியது சர்ச்சையானது. இதையடுத்து பாராளுமன்றக் கூட்டத்தொடரில் ஆதிர்ரஞ்சனுக்கு எதிர்ப்பு எழ, ஹிந்தி சரிவரத் தெரியாததால், அவர் வாய்தவறிக் கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். எனினும், ஸ்மிர்தி ரானி, சோனியாவை கார்னர் செய்து, “நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்” எனக் கூற, பதிலுக்கு சோனியா, “என்னிடம் பேசவேண்டாம்” என்று கூறினார். பா.ஜ.க. எம்.பி.க்களும் சோனியாவை சூழ்ந்து கெரோ செய்ய, அவர் அங்கி ருந்து வெளியேறினார். இதையடுத்து பா.ஜ.க. எம்.பி.க்களின் செயலுக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதியை ராஷ்டிரபத்தினி என அழைத்ததற்கு ஆதிர்ரஞ்சனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேடிப்போய் ஆப்புல உட்காருவாங்களோ!
ஆந்திராவின் விவசாயத்துறை அமைச்சர் கோவர்த்தன் ரெட்டி. அவரது அலைபேசிக்கு வந்த அழைப்பில், "அசோக் என்பவர் எங்களிடம் 9 லட்சம் கடன்வாங்கியிருக்கிறார். அவர் தவணைத் தொகை செலுத்தவில்லை. அவர் எங்களுக்கு உங்களது எண்ணைத்தான் கொடுத்திருக்கிறார். அதனால் தவணையை நீங்கள்தான் செலுத்த வேண்டும்'' என அமைச்சரின் உதவியாளரிடம் கூறியிருக்கின்றனர். அமைச்சரின் உதவியாளர் அந்த எண்ணை ப்ளாக் செய்தபோதும், வெவ்வேறு எண்களிலிருந்து நூற்றுக்கணக்கான முறை அழைத்து தொந்தரவு செய்யவே, காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டார். இதையடுத்து நெல்லூர் சைபர் க்ரைம் போலீசார், அழைப்பை ட்ரேஸ் செய்து சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த நபர்கள்தான் என கண்டுபிடித்துவிட்டனர். கடன் செயலி ஒன்றைச் சேர்ந்த இந்த கும்பலை காவல்துறை கைதுசெய்து விசாரித்து வந்திருக் கிறது. குளவிக்கூட்டுல கைவிடுவானேன், கதறுவானேன்!
மழைதானே என நாம் நினைக்கலாம். ஆனால் மழை என்னவெல்லாம் செய்யும் என்பதை சமீபத்திய ஆண்டுகளாக உலகம் பார்த்துவருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானைக் குறிவைத்து மழை பதம்பார்த்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் பலி எண்ணிக்கை 124-ஐ எட்டியுள்ளது. அது அரசு வழங்கும் புள்ளிவிவரம். இதுவரை 7 அணைகள் உடைந்துள்ளதாம். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் பல இடங்களில் திறந்தவெளியிலேயே வசிக்கவேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த பலுசிஸ்தான் மாகாணமே எரிச்சலோடு, எப்போது நின்றுதொலைக்கும் இந்த மழை! என்ற மனநிலையில் உள்ளது. காணக்கூடாத இயற்கையின் விஸ்வரூபம்!
-நாடோடி