த்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவார் சமீபத்தில், "வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்ட மாணவர்கள் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ சேர்ந்து படிக்க தேசிய மருத்துவ ஆணையம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை'’எனக் கூறினார். உக்ரைன் போர்ச்சூழலால் மருத்துவப் படிப்பை முடிக்காமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா திரும்பியிருக்கும் நிலையில் இந்தப் பதில் அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dd

இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “"தமிழகத்தில் மட்டும் 2000 பேர் உக்ரைனிலிருந்து திரும்பி படிப்பைத் தொடர சாத்தியமற்ற நிலையில் உள்ளனர். போர் முடிந்தாலும் உக்ரைனில் நிச்சயமற்ற நிலையே நிலவும். இதனைக் கருத்தில்கொண்டு, பாதியிலேயே படிப்பைவிட்ட மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவிலோ, தகுந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலோ படிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்'’எனக் கேட்டுக்கொண்டுள்ளார். விதியும் தேவை! விதிவிலக்கும் தேவை!

Advertisment

ங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதான போட்டியாளர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக்கும், இங்கிலாந்தின் லிஸ் ட்ரஸ்ஸும் முன்னேறியுள்ளனர். கிட்டத்தட்ட செப்டம்பர் மாதம்தான் இவர்கள் இருவரில் யார் பிரதமர் என்பது முடிவாகும். இந்நிலையில், லிஸ் ட்ரஸ், “"ரிஷிக்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் அழுத்தத்தைத் தவிர்க்கும் அரசியல் லாவகம் கிடையாது. ரிஷி பிரதமரானால் சீனா இங்கிலாந்துமேல் செல்வாக்கு செலுத்தும்''’என்று கூறியுள்ளார். அதற்கேற்ப, சீனாவின் க்ளோபல் டைம்ஸ் பத்திரிகையும் இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷியே பொருத்தமானவர் எனச் சொல்லியுள்ளது. ஆனாலும் ரிஷி சற்றும் அசராமல், "இங்கிலாந்தில் கம்யூனிச செல்வாக்கை அகற்றுவேன். முக்கியமான பிரிட்டிஷ் சொத்துக்களை சீனர்கள் வாங்குவதைத் தடுப்பேன்''’என இங்கிலாந்தின்மேல் சீனாவின் செல்வாக்கு பெரு காமல் எப்படியெல்லாம் தடுப்பேன் எனப் பிரச்சாரம் செய்துவருகிறார். காசா? பணமா? வாக்குறுதிதானே!

த்தரப்பிரதேச நீர்வளத்துறை இணையமைச்சர் தினேஷ் கத்திக் தனது பதவியை ராஜினாமா செய் துள்ளார். ஏன்? தலித் சமூகத்தைச் சேர்ந்த தினேஷுக்கு நீர்வளத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்று சில மாதங்களே ஆனநிலையில், "என் நிர்வாகத்தின் கீழுள்ள நமாமி கங்கா திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்காக பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுள்ளனர். இதுகுறித்து நான் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை. நான் தலித் என்பதால் உயரதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறேன். என் பேச்சை அவர்கள் பொருட் படுத்துவதில்லை,’என்று தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித் துள்ளார். ஏற்கெனவே யோகி, துறை அமைச்சர்களை ஆலோ சிக்காமல் அவர்களது அதிகாரத் தைப் பறித்துவிட்டு, உயரதிகாரி கள் மூலம் பணியிடமாற்றங்களை அவரே மேற்கொள்வதாக புகார் உள்ளது. தினேஷை சமாதானப் படுத்தும் முயற்சிகளில் உ.பி. அரசு மும்முரமாகியுள்ளது. முதல்வர்னாலே ஏகபோக அதிகாரமுள்ளவர்தானே!

Advertisment

dd

திருவனந்தபுரம் பொறி யியல் கல்லூரியருகே உள்ளது ஸ்ரீகராயம் பஸ் நிறுத்தம். இந்த நிறுத்தத்தில் பயணிகள் அமர நீளமான இருக்கை போடப் பட்டிருந்தது. திடீரென ஒரே நாளில் இந்த நீளமான இருக்கை அகற்றப்பட்டு, ஒரு நபர் அமரக் கூடிய மூன்று தனி இருக்கைகள் போடப்பட்டது சர்ச்சையாகி யிருக்கிறது. கல்லூரிக்கு அருகே இந்த நிறுத்தம் இருப்பதால், ஆணும் பெண்ணும் இந்த இருக் கைகளில் அருகருகே அமர்வர். அதை விரும்பாத கலாச்சாரக் காவலர்கள் இந்த வேலையைச் செய்திருக்கவேண்டுமென விமர்சனம் எழுந்துள்ளது. ஒற்றை இருக்கை போட்டாலும் நாங்கள் சேர்ந்து அமர்வோம் எனக் கல்லூரியில் படிக்கும் ஆண் -பெண்கள் ஒரே இருக்கையில் ஒருவர் மடிமேல் மற்றவர் அமர்ந்து புகைப்படமெடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கி யுள்ளனர். இந்தப் பதிவைப் பார்த்த திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், "கேரளாவில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர எந்தத் தடையும் இல்லை. பழைய நிறுத்தம் அருகிலேயே இருபாலரும் சேர்ந்து அமர புதிய பேருந்து நிறுத்தத்தை மாநகராட்சி கட்டித்தரும்'” என அறிவித்துள்ளார். லேப்டாப்புக்கு புது அர்த்தம் கொடுத்துட்டாங் களே!

ந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், கோர்லமதிவீதி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சமீபத்தில் பிழைப்புக்காக கர்நாடகா சென்றனர். அவர்களில் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு ஊர் திரும்பினர். வழியில் 17 வயதான ஒருவன் இறந்துவிட ஊருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சொந்த ஊரிலுள்ள பஞ்சாயத்தி லோ, இறந்தவருக்குத் தொற்று நோய் இருக்கும் பட்சத்தில் கிராமத்திலுள்ளவர்களுக்கும் பரவிவிடும் எனச் சொல்ல, அவரை அங்கேயே எரித்துவிட்ட னர். ஊர்திரும்பும் வழியில் மேலும் 3 பேர் இறக்க, அவர்களையும் ஊருக்கு கொண்டுவரக்கூடா தென பஞ்சாயத்தார் சொல்லி விட்டனர். இதனால் அவர்களின் உடல்களை வெள்ளத்தில் வீசி விட்டு மற்றவர்கள் ஊர்திரும்பி விட்டனர். கரையொதுங்கிய உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில் நடந்தது தெரியவர, பஞ்சாயத்தில் தீர்ப்பளித்தவர் களை கைதுசெய்து விசாரித்துவரு கின்றனர். நாட்டாமையையே கம்பி எண்ண வைச்சிட்டாங் களே!

-நாடோடி