Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

SS

லகத்தில் நிலம், நீர், வாயு மட்டுமில்லை, ஒலியும்தான் மாசுபட்டுக் கிடக்கிறது. சமீபத்தில் யங் இந்தியன் எனும் அரசுசாரா அமைப்போடு இணைந்து நகரக் காவலர் அமைப்பு சென்னை நகரில் காணப்படும் ஒலி மாசு குறித்து ஆய்வொன்றை நடத்தியது. அதில் உலக சுகாதார அமைப்பு இயல்பான அளவு என பரிந் துரைக்கும் ஒலி அளவைவிட சென்னையின் ஒலி மாசு அளவு அதிகமாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. பகலில் 55 டெசிபலும், இரவில் 40 டெசிபலும் இயல்பானது. ஒலி இதைவிடக் கூடும்போது, 80 டெசிபலுக்கு கீழே இருக்கும் வரையில் ஆபத்தில்லை. ஒரு நாளுக்கு நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக 80 டெசிபலுக்குக் அதிகமான ஒலியைக் கேட் கும் சூழல் அமைந்தால் செவித்திறன் பாதிக்கப் படும். சென்னையில் நடந்த அந்த ஆய்வின் போது பதிவான ஒலியளவு 84.5 டெசிபலாம். நகரம்னாலே எல்லாம் மாசுதான்!

Advertisment

T

ட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன

லகத்தில் நிலம், நீர், வாயு மட்டுமில்லை, ஒலியும்தான் மாசுபட்டுக் கிடக்கிறது. சமீபத்தில் யங் இந்தியன் எனும் அரசுசாரா அமைப்போடு இணைந்து நகரக் காவலர் அமைப்பு சென்னை நகரில் காணப்படும் ஒலி மாசு குறித்து ஆய்வொன்றை நடத்தியது. அதில் உலக சுகாதார அமைப்பு இயல்பான அளவு என பரிந் துரைக்கும் ஒலி அளவைவிட சென்னையின் ஒலி மாசு அளவு அதிகமாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. பகலில் 55 டெசிபலும், இரவில் 40 டெசிபலும் இயல்பானது. ஒலி இதைவிடக் கூடும்போது, 80 டெசிபலுக்கு கீழே இருக்கும் வரையில் ஆபத்தில்லை. ஒரு நாளுக்கு நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக 80 டெசிபலுக்குக் அதிகமான ஒலியைக் கேட் கும் சூழல் அமைந்தால் செவித்திறன் பாதிக்கப் படும். சென்னையில் நடந்த அந்த ஆய்வின் போது பதிவான ஒலியளவு 84.5 டெசிபலாம். நகரம்னாலே எல்லாம் மாசுதான்!

Advertisment

T

ட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, ஜூன் 6-ஆம் தேதி அரசுமீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் என்ற இக்கட்டு களுக்கு நடுவில்தான் போரிஸ் ஜான்சன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கிறிஸ் பிஞ்சர் என்பவரை துணைத் தலைமைக் கொறடாவாக நியமித்த விவகாரத்தில் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நிதிமந்திரி ரிஷி சுனக், சுகாதார மந்திரி சாஜித் சாவித்தும் தங்கள் எதிர்ப்பை ராஜினாமா மூலம் வெளிக்காட்டினர். அதைத் தொடர்ந்து மேலும் பலர் ராஜினாமா செய்யத் தொடங்க, போரிஸ் ஜான்சன் பதவி விலகவேண்டிய நிர்பந்தம் ஏற் பட்டுள்ளது. அடுத்த இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக்குக்கும் ஒரு வாய்ப்பிருக்கிற தெனக் கூறப்படுகிறது. இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி யின் மருமகன்! இங்கிலாந்துக்கு இந்திய வம்சாவளிப் பிரதமரா?

Advertisment

EE

த்தரப்பிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகம்மது தலிப் என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார். எதற்காம்? மேகாக் எனும் சிற்றுண்டிக் கடை நடத்திவரு கிறார் முகம்மது தலிப். அதில் உணவை பார்சல் கட்டிய பேப்ப ரில் இந்துக் கடவுள்கள் படம் இருந்ததாம். இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறி, 295ஏ (திட்டமிட்டு மத உணர்வைப் புண்படுத்துதல்) சிறையில் அடைத்திருக்கிறார்கள். முகம்மதுவின் உறவினர் ஒருவர், “"நாங்கள் வருடக்கணக்காக உணவை செய்தித் தாளில் கட்டித் தருகிறோம். அதில் யார் புகைப்படம் இருக்கிறது, என்ன செய்தி இருக்கிறது என்பதை யெல்லாம் பார்ப்பதில்லை. இதற்காகவெல்லாம் ஜெயிலுக்கு அனுப்புவார்களா?''’என்கிறார். போலீஸோ, "நவராத்திரிக்காக வெளியிடப்பட்ட சிறப்பு செய்திப் பக்கங்களில் இந்துக் கடவுள்கள் அச்சிடப்பட்ட தாளில் அசைவ உணவைப் பார்சல் செய்திருக்கிறார்'' என்கிறது. "நீ மனசுக்குள்ள இந்துக் கடவுளை கேவலமா நினைச்சேன்'னு சொல்லி கைது செய்யாதது மட்டும்தான் பாக்கி உத்தரப்பிரதேசத்தில்! நீதியை பார்சல் பண்ணிட்டாங்க!

DD

கும்பகோணத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயி இளங்கோவன், நாற்றுகளை திருவள்ளுவரின் தோற்றத்தில் நட்டு வளர்த்து மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மலையப்பநல்லூரைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி இளங்கோவன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் இவர், மற்ற விவசாயிகள் மத்தியிலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, திருவள்ளுவரின் வடிவில் நாற்றுகளை நட்டு வளர்த்ததை அறிந்து அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் இதனைப் பார்வையிட்டுப் பாராட்டினர். வயலில் நேபாள நாட்டின் ஊதா நிற நெல்வகையான சின்னார் நெல் ரகத்தைக் கொண்டு 50 அடி நீளம் 45 அடி அகலத் தில் நடவுசெய்து இதனைச் சாதித்துள்ளார். உழவு அதிகாரத்திற்கான கைமாறோ!

மெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் மினியா பொலிஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட், கடந்த 2020-ஆம் ஆண்டு டெரெக் சா என்ற அதிகாரியால் சந்தேகத்தின்பேரில் மடக்கிப்பிடிக்கப்பட்டார். அப்போது ஜார்ஜ் கழுத்தில் அதிகாரி தனது கால்மூட்டை வைத்து அழுத்தியதில் மூச்சுத்திணறி இறந்தார். ஜார்ஜுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் அமெரிக்காவே திணறிப்போனது. ஜார்ஜ் குடும்பத்தினர் போலீஸ் நிர்வாகத்துக்கு எதிராகவும், டெரெக் சாவுக்கு எதிராகவும் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜார்ஜ் கைதின்போது, டெரக் சா, அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தனி வழக்கொன்று நடத்தப்பட்டு வந்தது. அதில் ஜூலை 7-ஆம் தேதி டெரெக் குற்றவாளி என நிரூபணம் ஆனதுடன், அதிலும் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிச்ச வாழ்க்கையெல்லாம் சிறையிலதான் போல!

-நாடோடி

nkn160722
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe