Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

த்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் போர்படா கிராமத்தில், கணவனைத் தாண்டி இன்னொரு ஆணுடன் பழக்கம் வைத்திருந்ததற்காக மனைவியானவள் ஊர்மக்களால் கௌரவக்குறைவாக நடத்தப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்கு செருப்பு மாலை அணிவித்து, கணவனைத் தோளில் சுமந்துசெல்லும் தண்டனை அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அவளது கூந்தலைப்பிடித்து இழுத்து இம்சை செய்ததுடன் வீடியோ எடுத்தும் வெளியிட்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்தவராகக் கூறப்படும் ஹரிசிங் பிலாலாவும் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கூட்டத்தினரால் அடித்து அவமானப்படுத்தப்பட்டார். ஹரிசிங்கின் புகாரையடுத்து 12 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், "பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்குவதாகக் கூறி மத்திய அரசு பெருமையடித்துக்கொள்கிறது. உண்மையில் பழங்குடிகள் தீக்குளிக்கின்றனர், அவமதிப்புக்கும் ஆள

த்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் போர்படா கிராமத்தில், கணவனைத் தாண்டி இன்னொரு ஆணுடன் பழக்கம் வைத்திருந்ததற்காக மனைவியானவள் ஊர்மக்களால் கௌரவக்குறைவாக நடத்தப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்கு செருப்பு மாலை அணிவித்து, கணவனைத் தோளில் சுமந்துசெல்லும் தண்டனை அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அவளது கூந்தலைப்பிடித்து இழுத்து இம்சை செய்ததுடன் வீடியோ எடுத்தும் வெளியிட்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்தவராகக் கூறப்படும் ஹரிசிங் பிலாலாவும் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கூட்டத்தினரால் அடித்து அவமானப்படுத்தப்பட்டார். ஹரிசிங்கின் புகாரையடுத்து 12 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், "பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்குவதாகக் கூறி மத்திய அரசு பெருமையடித்துக்கொள்கிறது. உண்மையில் பழங்குடிகள் தீக்குளிக்கின்றனர், அவமதிப்புக்கும் ஆளாக்கப்படுகின்றனர்''’ என விமர்சித்துள்ளார். இடம்பார்த்து அடிச்சிருக்கார் கமல்நாத்!

Advertisment

nn

ஜி.எஸ்.டி. அமலாகி ஐந்து ஆண்டுகளாகியிருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டுமென கோரிக்கை வைத்திருக்கின்றன. அதேசமயம் ஜி.எஸ்.டி. நடைமுறையின் சிக்கல்களால் குஜராத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் வணிக நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஜி.எஸ்.டி வரி செலுத்தும் 11.1 லட்சம் நிறுவனங்களில் இது நான்கில் ஒரு பங்காகும். இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த குஜராத் வர்த்தக மற்றும் தொழிற்துறை துணைத்தலைவர் பதிக் பட்வாரி, "ஜி.எஸ்.டி.யில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. வரி நிலுவைகளை எதிர்பார்த்து சிறு தொழிலதிபர்கள் காத்திருக்கும் இக்கட்டான நிலை ஏற்படுகிறது''’என்கிறார். மூடப்பட்டவற்றில் ஜவுளி, விடுதி, சிறுவணிகக் கடைகள், உணவகங்கள் சார்ந்த தொழில்களே அதிகமாம். கார்ப்பரேட்டு சிஸ்டத்துக்கு ஆதரவான வரின்னு சொல்லுங்க!

ர்நாடகாவில் 2021-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்தது அம்பலமாகி, இதுவரை 79 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரே, விடைத்தாள் சமர்ப்பிக்கப்பட்ட பின் விடையை நிரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அம்ரித் பால் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ், "இந்த வழக்கில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'’ என கண்டிப்பான உத்தரவு பிறப்பிருந்த நிலையில்தான் அம்ரித் கைதுசெய்யப்பட்டுள்ளார். தவிரவும் இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி சந்தேஷ் தனக்கு அச்சுறுத்தல் வந்ததாகவும் கூறியுள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காக்கிச் சீருடையவே கறையாக்குறாங்களே!

ந்தியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில், கடல்நீரில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் காணப்படுவதாக என்.சி.சி.ஆர். ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1200 கிலோமீட்டர் நீளமுடைய இந்தக் கடல்பகுதியில், 3 கிலோமீட்டர் முதல் 10 கிலோமீட்டர் தூரம்வரை கடல்நீரில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ஒரு சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பில் 53,000 நுண்பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இவை 1 மி.மீட்டருக்கும் குறைவான அளவுடையவை என்பதால் மீன்கள் உள்ளிட்ட கடல் உயிர்களின் உடல்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கடற்பகுதியில் கலக்கும் நதிகளின் வழியாக நுண்பிளாஸ்டிக் துகள்கள் கடலை அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீன்களின் உடலை அடையும் நுண்பிளாஸ்டிக், மனித உடலில் கலக்க நாளாகாது எனவும் எச்சரிக்கின்றனர். மீன்பிரியர்கள் ஜாக்கிரதை!

mm

Advertisment

பொதுவாக மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த உலகம் சவாலானதுதான். பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கோ கூடுதல் சவாலானது. இந்த சவாலை அவர்கள் எதிர்கொள்ள வசதியாக, சென்னையின் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் பார்வைத் திறன் சவாலுடையவர்களுக்கு, ரயில் நிலையத்தின் நுழைவாயிலிலேயே ப்ரெய்லி நேவிகேஷன் மேப்பை ஜூலை 4-ஆம் தேதி அமைத்திருக்கிறார்கள். இந்த மேப்பின் உதவியால் இவர்கள் பயணச்சீட்டு கவுண்டர், நீர் வழங்குமிடங்கள், டாய்லெட்டுகள், நடைமேடைகள், நகரும் படிக்கட்டுகள், மின்னுயர்த்திகள், நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களை அறிந்துகொள்ளலாம். இந்த மேப்புடன் அமைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால், செல்போனிலுள்ள ஒலி தகவல் அமைப்பை இயங்கச்செய்து, அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்லும். இந்த வசதி ரெனால்ட் நிசான் மற்றும் ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கியால் வழங்கப்பட்டுள்ளதாம். விரைவில் இந்த வசதி தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட உள்ளதாம். நல்ல சேதிதான்!

-நாடோடி

nkn130722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe