Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

பாசமலர் படம் பார்த்திருப்பீர்கள்! பாசமலர்களை நேரில் பார்த்திருக் கிறீர்களா! கேரள மாநிலத்தில் இருக்கிறது அந்த பாசமலர் ஜோடி. இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பிரியா. இவரது தம்பி கிருஷ்ணபிரசாத். திருமண மானாலும், தன் தம்பியிடம் அளவில்லாத பாசம் காட்டிவந்தார். வருடந்தோறும் சர்வதேச சகோதரர்கள் தினத்தில் தம்பியை அழைத்துப் பேசுவது அக்காவின் வழக்கம்.

Advertisment

news

இந்த ஆண்டு மே 24-ல் வேலைப்பளு காரணமாக தம்பியிடம் பேசமுடியவில்லை. கிருஷ்ணபிரசாத் செல்போனில் அழைத்த போதும் பிரியாவால் அழைப்பை ஏற்க முடியவில்லை. கோபமான தம்பியை சமாதானப்படுத்த பிரசாத்துக்கு நீண்டதொரு கடிதம் எழுதியிருக்கிறார். எழுதவே 12 மணி நேரமான இந்தக் கடிதம் 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமுடையதாகவும் இருந்திருக்கிறது. கடிதத்தால் சமாதானமடைந்த தம்பி, அக்காவின் கடிதத்தை யுனிவர்சல் ரிக்கார்ட் போரம் அமைப்பு

பாசமலர் படம் பார்த்திருப்பீர்கள்! பாசமலர்களை நேரில் பார்த்திருக் கிறீர்களா! கேரள மாநிலத்தில் இருக்கிறது அந்த பாசமலர் ஜோடி. இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பிரியா. இவரது தம்பி கிருஷ்ணபிரசாத். திருமண மானாலும், தன் தம்பியிடம் அளவில்லாத பாசம் காட்டிவந்தார். வருடந்தோறும் சர்வதேச சகோதரர்கள் தினத்தில் தம்பியை அழைத்துப் பேசுவது அக்காவின் வழக்கம்.

Advertisment

news

இந்த ஆண்டு மே 24-ல் வேலைப்பளு காரணமாக தம்பியிடம் பேசமுடியவில்லை. கிருஷ்ணபிரசாத் செல்போனில் அழைத்த போதும் பிரியாவால் அழைப்பை ஏற்க முடியவில்லை. கோபமான தம்பியை சமாதானப்படுத்த பிரசாத்துக்கு நீண்டதொரு கடிதம் எழுதியிருக்கிறார். எழுதவே 12 மணி நேரமான இந்தக் கடிதம் 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமுடையதாகவும் இருந்திருக்கிறது. கடிதத்தால் சமாதானமடைந்த தம்பி, அக்காவின் கடிதத்தை யுனிவர்சல் ரிக்கார்ட் போரம் அமைப்புக்கு அனுப்ப உலகின் மிக நீளமான கடிதமென பட்டமளித்துள்ளது. கின்னஸ் ரிக்கார்ட் பரிசீலனைக்கும் அனுப்பப் பட்டுள்ளதாம் இந்தக் கடிதம்! உடன்பிறப்புன்னா சும்மாவா!

ந்திய ஜவுளித் துறை ஒரு இக்கட்டை எதிர்கொண்டுவருகிறது. ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடந்த உலக ஜவுளிக் கண்காட்சியில் இந்தியா 300 அரங்குகளைப் போட்டிருந்தது. அதில் இந்தியாவுக்கு 3500 கோடிக்கு ஆர்டர் கிடைத்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த அதே விலைக்குத் தரவேண்டு மென்பது நிபந்தனை. அதில்தான் ஒரு சிக்கல். கடந்த டிசம்பரில் இருந்த நூல் விலை தற்போது ரகங்களைப் பொறுத்து 20 முதல் 40 சதம் அதிகரித்துவிட்டது. தவிரவும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத் தொகையை மத்திய அரசு 9%-லிருந்து 0.5% ஆகக் குறைத்துவிட்டது. இதனால் இந்த ஆர்டரை எடுப்பதா… வேண் டாமா என ஜவுளி உற்பத்தியாளர்கள் தவிக்கிறார்கள். மத்திய ஜவுளித்துறை அமைச்சகமோ, உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு "பார்க்கலாம்' என்று மட்டும் சொல்லியிருக்கிறது. இந்தியா பின்வாங்கினால், அதே ஆர்டரைச் செய்துதர சீனாவும், பங்களாதேஷும் காத்திருக்கிறது. என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

Advertisment

sssர்நாடகாவில் வங்கி மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த மேலாளரின் பெயர் ஹரிசங்கர். இவரது வங்கியில் அனிதா என்பவர் சில கோடிகளை டெபாசிட் செய்திருந்தார். அவசரச் செலவொன்றுக்காக இந்தத் தொகையை அடமானம் வைத்து 75 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். சமீபத்தில் அனிதா தன் கடன் தொகை யைச் சரிபார்த்தபோது அது 5.7 கோடி ரூபாய் கடன் எனக் காட்டியது. அதிர்ந்துபோன அனிதா வங்கியின் உயரதிகாரிகளுக்கு புகார் செய்தார். விசாரணையில், மே 13 முதல் அனிதாவின் டெபாசிட் தொகையைப் பயன்படுத்தி அவரது பெயரில் 5.7 கோடி கடனாக வாங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த மோசடியைச் செய்தது ஹரிசங்கர் என தெரியவந்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தவிரவும், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க அந்தப் பணத்தை ஹரிசங்கர் செலவிட்டதும் அம்பலமாகியிருக்கிறது. ஊரான் காசுல மஞ்சக் குளிச்சிருக்கார்.

காலைத் தேநீரைக் கூட ஆன்லைனில் ஆர்டர் பண்ணிச் சாப்பிடுகிற காலமாகி விட்டது. ராமநாதபுரம் வெளிப்பட்டி னத்தைச் சேர்ந்த செல்வி, ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து சேலை ஒன்றுக்கு ஆர்டர் செய்தார். கூரியர் மூலம் அவரை வந்தடைந்த சேலை கிழிந் திருந்ததால், அந்த இணையதளத்தி லுள்ள தொடர்பு எண்ணில் புகார் செய்து பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டார். அவர்களும் தருகிறோம், உங்கள் வங்கிக் கணக்கு விவரம், பாஸ்வேர்டைக் கொடுங்கள், அப்போதுதான் போடமுடியும் என்றிருக்கிறார் கள். அதை நம்பி அனைத் தையும் தெரிவித்திருக்கிறார். சற்று நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து இரண்டாயிரம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வரவும்தான், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்திருந் திருக்கிறார் செல்வி. ஜாக்கிரதை ஜாக்கிரதை ஆன்லைன் பர்ச்சேஸ் ஜாக்கிரதை!

dd

கேரளாவைச் சேர்ந்தவர் அபிலாஷ் செபாஸ்டியன். அவருக்கு நியூசிலாந்தில் வேலை கிடைத்தது. இதனால் கேரளாவில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தனது மகள் அலினாவுடன் நியூசிலாந்துக்கு விமானம் ஏறிவிட்டார். நியூசிலாந்தில் படித்த அலீனா, அங்கு உளவியல், குற்றவியல் குறித்து ஒடாகோ பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து, ராயல் நியூசிலாந்து போலீஸ் பயிற்சிக் கல்லூரியிலும் சேர்ந்தார். இந்நிலையில் சமீபத்தில் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதி வெற்றியும் பெற்றார். தற்போது இந்த கேரளத்துச் சிட்டு ஆக்லாந்து நகரின் கான்ஸ்டபிளாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்த கேரள மக்கள் சமூக வலைத்தளங்களில் அலீனாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லி உற்சாகப்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு பதவி, பட்டம்னாலே மவுசு அதிகம்தான்!

-நாடோடி

nkn090722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe