Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

ராஜஸ்தானைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனை செங்கல்பட்டு போலீஸ் கைது செய்துள்ளது. எதற்காக? செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர். ராகுல்நாத்துக்கு சமீபத்தில் சில புகார்கள் வர ஆரம்பித்தது. புகாரின் சாராம்சம், அவர் புகைப்படத்துடனான முகநூல் கணக்கொன்று பலருக்கும் நட்பு விண்ணப்பம் அனுப்புவதுடன், நட்பில் இணைபவர்களிடம் 5000, 10,000 பணம் கேட்பதாக சைபர் க்ரைமில் புகார் கொடுத்துவிட்டு காத்திருந்தார் ராகுல் நாத். ராஜஸ்தானிலுள்ள பரத்பூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன்தான் இந்த வேலையைச் செய்ததென தெரியவந்திருக்கிறது. இணையதளத்தில் மனம்போன போக்கில் தேடி ராகுல்நாத்தின் புகைப்படத்தைக் கண்டெடுத்த சிறுவன், அது கலெக்டர் என தெரியாமலே தனது ஏமாற்று வேலைக்குப் பயன்படுத்தியிருக்கிறான். ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்லபோய் பதுங்குனானாம்!

Advertisment

dd

ன்றைக்கு உடலில் ஒரு சிறிய டாட்டூவையாவது குத்திக்கொள்ளாத இளைய தலைமுறையைப் பார்க்கமுடியாது. அந்தளவுக்கு

ராஜஸ்தானைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனை செங்கல்பட்டு போலீஸ் கைது செய்துள்ளது. எதற்காக? செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர். ராகுல்நாத்துக்கு சமீபத்தில் சில புகார்கள் வர ஆரம்பித்தது. புகாரின் சாராம்சம், அவர் புகைப்படத்துடனான முகநூல் கணக்கொன்று பலருக்கும் நட்பு விண்ணப்பம் அனுப்புவதுடன், நட்பில் இணைபவர்களிடம் 5000, 10,000 பணம் கேட்பதாக சைபர் க்ரைமில் புகார் கொடுத்துவிட்டு காத்திருந்தார் ராகுல் நாத். ராஜஸ்தானிலுள்ள பரத்பூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன்தான் இந்த வேலையைச் செய்ததென தெரியவந்திருக்கிறது. இணையதளத்தில் மனம்போன போக்கில் தேடி ராகுல்நாத்தின் புகைப்படத்தைக் கண்டெடுத்த சிறுவன், அது கலெக்டர் என தெரியாமலே தனது ஏமாற்று வேலைக்குப் பயன்படுத்தியிருக்கிறான். ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்லபோய் பதுங்குனானாம்!

Advertisment

dd

ன்றைக்கு உடலில் ஒரு சிறிய டாட்டூவையாவது குத்திக்கொள்ளாத இளைய தலைமுறையைப் பார்க்கமுடியாது. அந்தளவுக்கு டாட்டூ பித்து இளசுகளைப் பிடித்து ஆட்டுகிறது. திருவனந்தபுரத்தில் இத்தகைய டாட்டூவுக்கு பெயர்பெற்ற நிறுவனம் ஒன்றில், டாட்டூ போடவந்த பெண்கள் 6 பேரை அதன் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இந்த ஆறு பெண்களும் அந்தரங்க இடத்தில் டாட்டூ குத்த வந்திருக்கின்றனர். இவர்களை உரிமையாளர் சுஜீஷ் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டது 6 பேர் மட்டும் தானா...… அதிகமா என்ற விசா ரணையைத் தொடங்கியுள்ளனர் போலீசார். டாட்டூ குத்த வந்தவங் களை மீ டூனு புகாரளிக்க வெச்சுட்டானே!

Advertisment

vv

க்ரைன் மீதான ரஷ்ய போரில் பொதுமக்கள் வெளியேற வசதியாக திடீரென ரஷ்ய தரப்பிலிருந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மரியுபோல், வோல்னா பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள். தங்கள் உடைமைகளுடன் நகரை விட்டு வெளியேறினர். ஆனால் நகரைவிட்டு வெளியேறும் முக்கியப் பாதைகளை ரஷ்யா முடக்கியதுடன், விமானம் மூலமாகவும் தரைவழியாகவும் தாக்குதலைத் தொடர்ந்தது. மரியுபோலில் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்கியதில் வீடுகள் சேதமடைந்தன. அதேபோல சுமி பகுதியில் பல்கலைக்கழக பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இங்குதான் வெளியேற முடியாத தமிழக மாணவர்கள் பதுங்கியிருக்கின்றனர். இர்பின் நகரிலிருந்து வெளியேற முயன்ற குடும்பத்தினர் தாக்குதலுக்கு இலக்காகி இறந்து கிடக்கும் காட்சியைத்தான் புகைப்படத்தில் பார்க்கிறீர்கள். போர்நிறுத்த அறிவிப்பா பொய் அறிவிப்பா?

vv

முரசொலி நாளிதழில், எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, "தலைவர் தளபதி: புதிய விடியலின் பூபாளம்'‘என்ற புதிய நூலை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூலம் சென்னை அன்பகத்தில் வைத்து வெளியிட்டிருக்கிறார் தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர் கு.வாஞ்சிநாதன். தி.மு.க. தலைமை அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்கும் வாஞ்சிநாதன், சென்னை ராணிமேரி கல்லூரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்றவர். தாத்தா, தந்தை வழியில் தொண்டர்கள்மீது பாசம் வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், தொண்டரின் நூலை வெளியிட்டு அவரது விருப்பத்தை நிறைவேற்றியதை கண்கலங்க கண்டு மகிழ்ந்தது வாஞ்சிநாதனின் குடும்பம்! புத்தக வெளியீடுன்னாலே கொண்டாட் டம்தானே!

கொஞ்சம் சிக்கலான துறைதான் காவல்துறையும் ராணுவமும். வேலைப் பளுவும் மன அழுத்தமும் நிறைய உள்ள துறைகள். இதனாலேயே நிறைய பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது சக காவலர், வீரர்கள் மேல் கொலை முயற்சியில் இறங்கிவிடுகின்றனர். பஞ்சாப்பின் காசா பகுதியில் அதுதான் நடந் திருக்கிறது. இந்திய- பாகிஸ்தான் எல்லையிலுள்ள இந்த முகாமில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் சடேப்பா. பணிநேரம் குறித்து உயரதிகாரிகளுடனான மோதலால் மன அழுத்தத்தில் இருந்தார். இதனால் சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார். இதில் 4 வீரர்கள் பலியாகினர். சடேப்பா, தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா… வேறு வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாரா என்பதில் குழப்பம் நிலவுகிறது. அநியாயமா 5 உயிர் போச்சே!

க்ரைன் மீதான போரை பிற நாடுகள் மட்டுமல்லாமல், ரஷ்ய மக்களும் எதிர்த்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி 21 ரஷ்ய நகரங்களில் ஆர்ப்பாட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்த 600 பேரை இதுவரை ரஷ்யா கைது செய்துள்ளது. சைபீரிய நகரமான நோவாசிபிர்ஸ்கில் ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டியதைக் காரணமாகச் சொல்லி 200-க்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரங்களில் சதுக்கத்துக்கு போராட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவரான நேவல்னி. ரஷ்யத் தரப்பில் வெறும் 800 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தாலும், உண்மையில் கைதானவர்களின் எண்ணிக்கை 10,000-க்கு நெருக்கமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சொந்த மக்களுக்கும் முரட்டு வைத்தியம் தானா!

-நாடோடி

nkn120322
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe