Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

"மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம்' எனும் அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப் பட்டுள்ளது. ஓராண்டு நிறை வடைந்தததையொட்டி செய்தி யாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இந்த ஓராண்டில் இவ் வமைப்பின் மூலம் 9,17,572 புகார்களுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. வந்துள்ள புகார்களில் 99.45% தீர்வுகாணப்பட்டுள்ளன.

Advertisment

dd

தற்போது தொடர்பு எண் வழங்கப்பட்டு அறுபது புகார்களை ஏற்கும் வசதி உள்ளது. விரைவில் செல்போன் செயலி மூலம் புகார்களை ஏற்கும் வசதி செய்யப்பட உள்ளது. அதனால் எண்ணிக்கை கணக்கின்றி வரும் அனைத்துப் புகார்களை யும் ஏற்கவும், அதற்குத் தீர்வுகாணவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது''’ என்றார். "பவர்புல்"லான திட்டம்னா சந்தோஷம்தானே!

நாக்பூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காபர்கேதா நகரம். இங்கேயுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்தார் உள்ளூர் நபர். அவருக்கு

"மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம்' எனும் அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப் பட்டுள்ளது. ஓராண்டு நிறை வடைந்தததையொட்டி செய்தி யாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இந்த ஓராண்டில் இவ் வமைப்பின் மூலம் 9,17,572 புகார்களுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. வந்துள்ள புகார்களில் 99.45% தீர்வுகாணப்பட்டுள்ளன.

Advertisment

dd

தற்போது தொடர்பு எண் வழங்கப்பட்டு அறுபது புகார்களை ஏற்கும் வசதி உள்ளது. விரைவில் செல்போன் செயலி மூலம் புகார்களை ஏற்கும் வசதி செய்யப்பட உள்ளது. அதனால் எண்ணிக்கை கணக்கின்றி வரும் அனைத்துப் புகார்களை யும் ஏற்கவும், அதற்குத் தீர்வுகாணவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது''’ என்றார். "பவர்புல்"லான திட்டம்னா சந்தோஷம்தானே!

நாக்பூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காபர்கேதா நகரம். இங்கேயுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்தார் உள்ளூர் நபர். அவருக்கு 500ரூபாய் தேவை. கார்டைப் பயன்படுத்தி 500 என்று பதிவிட்டு, பாஸ்வேர்டையும் நிரப்பியபிறகு எந்திரம் உறுமலுடன் கரன்சிகளை வெளித்தள்ளியது. அவர் கேட்டது ஐநூறு. வந்திருந்ததோ 2500. ஆனந்த அதிர்ச்சியில் மீண்டுமொரு ஐநூறு ரூபாய் எடுத்திருக்கிறார். இம்முறையும் 2500 வந்திருக்கிறது. பணமெடுத்தவர் அப்படியே போகாமல், விஷயத்தை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள, அந்த ஏ.டி.எம். எந்திரத்தை மக்கள் திரள் சூழ்ந்துகொண்டது. விஷயம்தெரிந்து போலீஸ் வந்து மக்களை விரட்டிவிட்டு அந்த ஏ.டி.எம். எந்திரம் இருந்த இடத்தைப் பூட்டியிருக்கின்றனர். எந்திரத்தில் பணம் வைக்கவேண்டிய நபர் நூறு ரூபாய் வைக்கவேண்டிய இடத்தில் 500 ரூபாய் கரன்சிகளை அடுக்கியதால் வந்த வினை. இப்போது அந்த தனியார் வங்கி, அன்று பணம் எடுத்தவர்களின் கணக்கிலிருந்து கூடுதலாக அவர்கள் அடைந்த தொகை கணக்கிடப்பட்டு கழிக்கப்படும் என அறிவிப்பு செய்துவிட்டது. பணம் எடுத்தவங்களுக்கெல்லாம் மூஞ்சி தொங்கிப்போயிருக்குமே!

Advertisment

ஹாட்கோல் வாக் தெரியுமா? இதை முயற்சிசெய்து ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் ஏரியருகே 25 பேர் காயமடைந்திருக்கிறார்கள். நம் ஊரில் கோவில்களில் பூமிதிப்பது என்று சொல்வோமல்லவா? அதுதான் இந்த ஹாட்கோல் வாக். அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், சூடான கரியில் நடப்பது. இதை எதற்கு ஸ்விட்சர்லாந்தில் முயன்றுபார்த்தார்கள்? கோல்ட்பேக் எனும் நிறுவனம் ஒன்றுதான் இதை ஏற்பாடு செய்திருக்கிறது. "உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியை கட்டவிழுங்கள்' என மூளைச்சலவை செய்து 150 நபர்களைத் தேர்வுசெய்து பூமிதிக்க வைத்திருக்கிறது. இதில் 25 பேர் காயமடைய, அவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாவுல பக்தியில பண்ணுறதை, அயல்நாட்டுல மோட்டிவேஷனல் பயிற்சினு சொல்லி காசுபார்த்திருக்காங்க. தீக்காயம் அடைஞ்சவங்க அந்த நிறுவனத்து மேல புகார் கொடுத்திருக்காங்களாம். கேப்பையில நெய் வடியுதுன்னா நம்பிடறதா!

ee

பெங்களூருவின் உடுப்பி, மங்களூரு மாவட்டங்களில் கல்வி நிலையங்களில் "ஹிஜாப்' அணிவதற்கு தடைவிதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதற்கு மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து ஹிஜாப் அணிந்துவந்தபோது மாணவர்கள் காவியுடை அணிந்துவந்தனர். இவ்விவகாரம் பெரிதானபோது இந்துத்துவர்களின் தூண்டுதலால் மாணவர்கள் செயிண்ட் அலோசிஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி இல்ஹாமைச் சூழ்ந்துகொண்டு குரலெழுப்பியபோது, தைரியமாக அவர்களைக் கடந்துசென்றபடி "அல்லாஹூ அக்பர்' என முழங்கி தேசிய கவனத்துக்கு உள்ளானார். பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்று கர்நாடக மாநிலத்திலேயே இரண்டாவது வந்து "தான் தைரியசாலி மட்டுமல்ல புத்திசாலி' என்பதையும் நிரூபித்துள்ளார் இல்ஹாம். தமிழகத்திலும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, டி.எச்.ரோடு மாநகராட்சிப் பள்ளியில் படித்த ப்ளஸ்டூ மாணவி ஆயிஷா சித்திக், கொரோனா காலகட்டத்தில் பெற் றோரால் செல்போன் வாங்கித் தரமுடியாத நிலையில், ஆசிரியர்களின் குறிப்புகளை மட்டும் வைத்துப் படித்து 580 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!

2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்முன், பா.ஜ.க.வினரின் பிரதான கோஷமாக இருந்தது "கருப்புப் பணத்தை ஒழிப்போம். ஸ்விஸ் வங்கி போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம்' என்பதுதான். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்பு பணம் அதிகரித்தபடியேதான் வருகிறது. 2019-ல் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் 6,625 கோடியாக இருந்தது. 2000-ஆம் ஆண்டின் கடைசியில் 20,700 கோடியானது. தற்சமயம் இது 30,500 கோடியாக உயர்ந்துள்ளது. தர்மசங்கடத்துக்குள்ளான ஒன்றிய அரசோ, "அது கருப்புப் பணமில்லை… டெபாசிட் செய்யப்பட்ட பணம்தான்' என சமாளிக்கிறது. 2014-க்கு முன்பு ஸ்விஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது மட்டும் கருப்புப் பணம் என்று மோடி அண்ட் கோவுக்கு யார்வந்து சொன் னார்கள்? உங்களுக்கு வந்தா ரத்தம்... அடுத்தவனுக்குனா தக்காளிச் சட்னியா?

-நாடோடி

nkn250622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe