Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தனது திரைப் பங்களிப்பின் காரணமாக மிகப்பெரும் ரசிகர் பட்டா ளத்தைக் கொண்டவர். அந்த ரசிகர்களில் சிலர் அவரைக் கடவுளாக வழிபடும் அளவுக்குத் தீவிரமானவர்கள். அத்தகைய எம்.ஜி.ஆர். ரசிகர்களில் சிலர், வேலூர் மாவட்டம் கரசமங்கலம் கிராமத்தில் அவருக்கு கோவில் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

Advertisment

dd

இதற்காக 80 சென்ட் நிலத்தை ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. மன்றத்தின் இணைச்செயலாளர் டி.ஆர். முரளி, “"எம்.ஜி.ஆர். மக்களின் தலைவர். நாங்கள் அவரைக் கடவுளாகவே பார்க்கிறோம். வரும் ஜனவரி 17-க்குள் கோவி லைக் கட்டிமுடிக்கத் திட்ட மிட்டுள்ளோம். ஜனவரி 17-ஆம் தேதி கோவிலின் கும்பாபிஷேகம் இருக்கும். எம்.ஜி.ஆரை. நேசிப் பவர்கள், ரசிகர்களிடமிருந்து கோவிலுக்கான 1 கோடி ரூபாய் நிதியையும் திரட்ட முடிவு செய்துள்ளோம்''’என்கிறார். பக்தர்களோட சேர்ந்து கட்சி யையும் காப்பாத்தணும்!

கேரள முத

கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, தங்கக் கடத்தல் புகழ் சொப்னா புகார் கூறிய பின்பு... எதிர்க்கட்சிகள் கேரளத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் பினராய் விஜயன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக் கைகள் எழுந்துவருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் நடத்தும் இத்தகைய போராட்டங்களுக்குப் பதி லடியாக பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட பல் வேறு இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட் டது சச்ச்சையாக மாறியிருக்கிறது. கோழிக்கோடு அருகேயுள்ள பேராம்பிரா காங் கிரஸ் அலுவல கத்தின் மீது மர்ம நபர்கள் குண்டு வீசியுள்ளனர். கேரள முதல்வர் பினராய் விஜயன், விமானத்தில் கண்ணூரி லிருந்து திருவனந்தபுரம் வந்த போது திடீரென எழுந்து விமானத்தில் கோஷமிட்ட நவீன், மஜீத் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு பதியப் பட்டிருப்பது சர்ச்சை யாகியிருக்கிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

Advertisment

dd

நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் எழுந்த விவகாரம் முடிவுக்கு வருவதாக இல்லை. நூபுரின் பேச்சுக்கு எதிராக இஸ் லாமியர்கள் நடத்திய போராட் டம் கலவரமானதாகக் கூறி நூற்றுக்கணக்கான பேரை உ.பி. அரசு கைதுசெய்துவருகிறது. திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்று கூறி பலரின் வீடுகளை இடிக்கவும் செய்துள்ளது. இந்நிலையில் வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டவர்களை போலீஸ் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பதிவிட்டு "கலவரக் காரர்களுக்கான பரிசு' என்ற தலைப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஷலாப் மணிதிரிபாதி பகிர்ந்தது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து சைப் என்பவரின் சகோதரி ஜைபா, “"எனது சகோதரனை நிற்கக்கூட முடியாத அளவுக்கு போலீஸார் தாக்கியுள்ளனர். காயங்களுக்கு சிகிச்சையளிக்கக் கூட அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை''’என குற்றம் சாட்டுகிறார். ஏவல் துறை!

இந்தியா மக்கள் தொகை யை மட்டும் அதிகமாகக் கொண்ட நாடு கிடையாது. சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டையும் அதிகமாகக் கொண்ட நாடு. அதிலும் வட இந்தியாவில் இந்த மாசுபாட் டின் சதவிகிதம் தென்னிந்தியா வைவிட அதிகம். சமீபத்திய ஆய்வொன்று, இந்த சுற்றுச் சூழல் மாசுபாட்டால் வட இந்தியர்கள் தங்களது ஆயுளில் 7.6 வருடத்தை இழக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. சிகாகோவில் அமைந்துள்ள எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் இந்த ஆய்வை மேற்கொண் டுள்ளது. உலகின் மிக மோசமான மாசுபாடு மிகுந்த நாடு பங்களாதேஷ் என்றால் இரண்டாவது இடம் இந்தியா வுக்குத்தான். ஆகா, வட இந்தியர்களுக்குத் தானே இந்தச் சிக்கல் என ரொம்பவும் சந்தோஷப்படாதீர்கள். மாசுபாடு காரணமாக ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மொத்த ஆயுசில் 5 ஆண்டுகள் குறை கிறதாம். நாகரிக வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை இது. ஆயுசுத் தள்ளுபடி!

-நாடோடி

dd

கேரளாவின் ஆலப்புழா அருகேயுள்ள அம்பலப்புழா நகரின் பிஜூகுமார் 20 நாட்டுக் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். அதில் புஷ்டி யாகக் காணப்பட்ட கோழி ஒன்றிற்கு சின்னு என்று பெய ரிட்டிருந்தார். சின்னு ஜூன் 13 காலை 8.30 மணியளவில் முட்டையிட் டது. சற்று நேரம் கழித்து தொடர்ந்து முட்டை போடத்தொடங்கியிருக்கிறது. சின்னு அடுத்தடுத்து முட்டை போடுவதையறிந்த அந்தப் பகுதி மக்கள் கோழியைப் பார்க்க ஆவலாகத் திரண்டனர். காலை 8.30 மணிக்கு முட்டை போடத்தொடங்கிய சின்னு மதியம் 2.30 மணிக்குப் பிறகே நிறுத்தியது. ஆறு மணி நேரத்திற் குள்ளாக 24 முட்டைகளைப் போட்டு அசத்திவிட்டது. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள், "கோழி 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகள் போடுவது அதிசயமான நிகழ்வுதான். அந்தக் கோழியை ஆராய்ச்சி செய்தபிறகே அதன் ரகசியம் தெரிய வரும்'' என்கிறார்கள். இதுமாதிரி ஒரு டஜன் கோழியிருந்தா குபேரனாயிடலாம்!

-ப.இராம்குமார்

nkn220622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe