மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

வுகார்பேட்டை தங்கசாலையைச் சேர்ந்த பேக் ஏற்றுமதி நிறுவனர் சுரேஷ். இவரது தந்தையிடம் சில நாட்களுக்குமுன் அவசர பணத்தேவை என்று தங்கக்காசைக் கொடுத்து பணம் பெற்றுச்சென்றார் ஒரு நபர். பின்னர், அவர் சுரேஷைச் சந்தித்து தான் அப்பாவுக்குத் தெரிந்தவரெனவும், நெருக்கடி யான பணத்தேவை இருப்பதாகக் கூறி 2.5 கிலோ தங்கக்காசு இருப்பதாகவும் அதற்கு 90 லட்சம் பணம் தேவையென்றும் கூறியுள்ளார். முதலில் கொடுத்த காசு அசல் தங்கக்காசு என்பதால், அதை நம்பி 30 லட்சம் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார் சுரேஷ். பின் அந்தத் தங்கக்காசுகளை வீட்டுக்குக் கொண்டுவந்து சோதித்தபோது அவை முலாம் பூசப்பட்ட பித்த ளைக்காசுகள் என தெரியவந்துள்ளது. இப்போது ஏமாற்றிய நபரை போலீஸ் தேடி வருகிறது. ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

dd

துருக்கி இஸ்தான்புல்லில் நடந்த பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் உலக சாம் பியன்ஷிப்பை வ

வுகார்பேட்டை தங்கசாலையைச் சேர்ந்த பேக் ஏற்றுமதி நிறுவனர் சுரேஷ். இவரது தந்தையிடம் சில நாட்களுக்குமுன் அவசர பணத்தேவை என்று தங்கக்காசைக் கொடுத்து பணம் பெற்றுச்சென்றார் ஒரு நபர். பின்னர், அவர் சுரேஷைச் சந்தித்து தான் அப்பாவுக்குத் தெரிந்தவரெனவும், நெருக்கடி யான பணத்தேவை இருப்பதாகக் கூறி 2.5 கிலோ தங்கக்காசு இருப்பதாகவும் அதற்கு 90 லட்சம் பணம் தேவையென்றும் கூறியுள்ளார். முதலில் கொடுத்த காசு அசல் தங்கக்காசு என்பதால், அதை நம்பி 30 லட்சம் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார் சுரேஷ். பின் அந்தத் தங்கக்காசுகளை வீட்டுக்குக் கொண்டுவந்து சோதித்தபோது அவை முலாம் பூசப்பட்ட பித்த ளைக்காசுகள் என தெரியவந்துள்ளது. இப்போது ஏமாற்றிய நபரை போலீஸ் தேடி வருகிறது. ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

dd

துருக்கி இஸ்தான்புல்லில் நடந்த பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் உலக சாம் பியன்ஷிப்பை வென்றிருக்கிறார் இந்தி யாவைச் சேர்ந்த நிகத் ஜரீன். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஐந்தாவது இந்தியப் பெண் இவர். 2019-ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, ஆறுமுறை குத்துச் சண்டை உலக சாம்பியனான மேரி கோம் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, நியாயமான முறையில் அவர் தேர்ந் தெடுக்கப்படவில்லை என எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்தான் இந்த நிகத். பதிலுக்கு நிகத் ஜரீனை யார் எனக் கேட்ட மேரிகோம், தன் தகுதியை கேள்வியெழுப்பிய ஜரீனை சுலபமாக வீழ்த்தியும் காட்டினார். தற்போது, குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தன் தகுதியை நிரூபித்திருக்கும் நிகத் ஜரீனுடன் தோள்சேர்த்து நின்று அவரை அங்கீகரித் திருக்கிறார் மேரிகோம். மண்ணின் மகளான நிகத் தங்கம் வென்றதில் தெலுங்கானா குஷியி லிருக்கிறது. அவருக்கு தெலுங்கானா முதல்வர் ரூ.2 கோடி அளித்து கவுரவித்துள்ளார். ‘ 'குத்து' மதிப்பை சாதாரணமா நினைச்சீங்களா!

டெல்லி லோதி காலனியில் அமைந்துள்ளது தியாகராஜ் விளையாட்டு மைதானம். இந்த மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி யெடுப்பது வழக்கம். வீரர்கள், வழக்கமாக இரவு 9 மணி வரை பயிற்சி யெடுத்துவந்த நிலையில், திடீரென இரவு 7 மணிக்குள் அனைவரும் பயிற் சியை முடித்துக் கொள்ளும்படி உத்த ரவிடப்பட்டது. எதற் கெனத் தெரியாத போதும், வீரர்கள் அதிருப்தியுடன் இந்த உத்தரவைப் பின்பற்றினர். இந்நிலையில் இந்த உத்தரவுக்கான காரணம் தற்போது வெளிப்பட்டுள்ளது. டெல்லி வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் சஞ்சீவ் கிர்வார், அவரது ஐ.ஏ.எஸ். மனைவி ரிங்கு, அவர்களது நாய் வாக்கிங் செல்வதற்கு வசதியாகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்த உண்மை அம்பலமானதையடுத்து டெல்லி முதல்வர் அனைத்து விளையாட்டு மைதானங்களையும் இரவு 10 மணிவரை திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளார். இருவருக்கும் பணி இடமாற்றமும் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிங்க இருந்தா பதக்கம் கிடைக்குமா இந்தியாவுக்கு?

2022-ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு கிடைத்துள்ளது. இலக்கியத்துக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று புக்கர். சர்வதேச புக்கர் விருதானது ஆண்டுதோறும் பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்படும் சிறந்த நாவலுக்கு வழங்கப்படுகிறது. அந்தவகையில் கீதாஞ்சலியின், இந்திய- பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட "டாம்ப் ஆப் சாண்ட்' நாவலுக்கு "புக்கர்' விருது கிடைத்துள் ளது. கணவரை இழந்த 80 வயதுப் பெண்ணை மைய மாகக் கொண்ட இந்த நாவலை ராக் வெல் என்பவர் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். பரிசுத்தொகையான 50,000 பவுண்ட் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா வரிசையில் புக்கர் எழுத்தாளராக பெருமை பெற்றுள்ளார் கீதாஞ்சலிஸ்ரீ. நோபல் மட்டும் நம்மாளுங்ககிட்ட ஆட்டம்காட்டுது!

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் உணவுப் பாதுகாப்புத் துறையும் இணைந்து ஆவடியில் மே 10 முதல் 12 வரை உணவுத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளன. திருவள் ளூர் மாவட்டம் உருவாகி வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் உள்ளூர் உணவகங்கள் முதல் உலக உணவகங் கள் வரை 150 உணவு அரங்குகள் அமைய உள்ளன. உலகின் மிகப்பெரிய பலூடா ஐஸ்க் ரீம், ஒரு லட்சம் பேருக்கு உணவு, பயன்படுத்திய எண்ணெயை பயோடீசலுக்கு வழங்குதல் என பல்வேறு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. உணவு தயாரிக்கும் போட்டிகளும் வென்றவர்களுக்கு பரிசுகளும், பட்டங்களும் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள் ளார். உண்ணாவிரதம்னாதான் கூட்டம்சேராது. இதுக்கு கூட்டம் பிச்சுக்கும் பாருங்க! ருசி கண்ட பூனைகளெல்லாம் ஆயத்தமாகுங்க

-நாடோடி

nkn080622
இதையும் படியுங்கள்
Subscribe