Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

nes

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். சிறுவயதிலேயே அனிகா பேட்மிண்டனில் ஆர்வம்காட்டுவதை அறிந்த தந்தை பேட்மிண்டன் பயிற்சியாளரான சரவணன் என்பவரைப் பார்த்து, தன் மகள் அனிகா பேசவோ, கேட்கவோ முடியாதவள். ஆனால் அவளுக்கு பேட்மிண்டனில் ஆர்வம் அதிகம் என்பதைச் சொல்லி, அவளுக்கு பேட்மிண்டனில் பயிற்சியளிக்கக் கேட்டிருக்கிறார். அப்போது அனிகாவுக்கு ஆறு வயது. 12 வருட பயிற்சிக்குப் பின் பிரேசிலில் நடந்த செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் தனிநபர், கலப்பு இரட்டையர், இந்திய அணி என மூன்று பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். தங்க மகள்!

Advertisment

news

டைசியாக பா.ஜ.க. அரசு உயர்த்திய 50 ரூபாயுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1025 ரூபாயாக இருக்கிறது. இவ்வருடத்திலேயே மார்ச் மாதம் ஒருமுறை 50 ரூபாய் உயர்த்தியிருந்தார்கள

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். சிறுவயதிலேயே அனிகா பேட்மிண்டனில் ஆர்வம்காட்டுவதை அறிந்த தந்தை பேட்மிண்டன் பயிற்சியாளரான சரவணன் என்பவரைப் பார்த்து, தன் மகள் அனிகா பேசவோ, கேட்கவோ முடியாதவள். ஆனால் அவளுக்கு பேட்மிண்டனில் ஆர்வம் அதிகம் என்பதைச் சொல்லி, அவளுக்கு பேட்மிண்டனில் பயிற்சியளிக்கக் கேட்டிருக்கிறார். அப்போது அனிகாவுக்கு ஆறு வயது. 12 வருட பயிற்சிக்குப் பின் பிரேசிலில் நடந்த செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் தனிநபர், கலப்பு இரட்டையர், இந்திய அணி என மூன்று பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். தங்க மகள்!

Advertisment

news

டைசியாக பா.ஜ.க. அரசு உயர்த்திய 50 ரூபாயுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1025 ரூபாயாக இருக்கிறது. இவ்வருடத்திலேயே மார்ச் மாதம் ஒருமுறை 50 ரூபாய் உயர்த்தியிருந்தார்கள். சமையல் எரிவாயு விலை கட்டுப்படியாகாத அளவுக்கு உயர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக, மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த பெண்கள் மே 9-ஆம் தேதி பஞ்சகங்கா நதியில் காலி சிலிண்டரை வீசியெறிந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களில் ஒருவர், “சமையல் எரிவாயு விலை தாங்கமுடியாத அளவுக்குப் போய்விட்டது. நகரத்தில் சமையல் செய்வதற்கான விறகுகளும் எளிதாகக் கிடைப்பதில்லை. சமையல் எரிபொருள் செலவைச் சமாளிக்க, அத்தியாவசிய வேறு செலவுகளைத் தவிர்க்கவேண்டியுள்ளது” என குமுறினார். அடுப்புக்குப் பதில் வயிறுதான் எரியுது!

ண்டனில் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராகப் பணிசெய்தவர் டோனி ஃபின். அந்த நிறுவன உயரதிகாரி தனது வழுக்கையைக் கேலி செய்ததாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தன்னை அவர் பணி நீக்கம் செய்ததாகவும் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்த வழக்கைக் கையிலெடுத்து விசாரித்த அந்த அமைப்பு, டோனியின் முறையீட்டில் உண்மை இருப்பதாக உறுதிசெய்தது. பணியிடத்தில் பெண்களை உறுப்பு கேலி செய்வது எப்படி பாலியல் குற்றமோ, அதுபோல ஆண்களின் வழுக்கையைக் காரணம் காட்டி கேலி செய்வதும் பாலியல் குற்றம் எனச் சொல்லி, டோனி ஃபின்னுக்கு இழப் பீடு வழங்கவேண்டுமென தீர்ப்பளித் துள்ளது. வாய் நீளமானவர் கள், பக்கத்தில் இருப்பவரை பார்த்துக் கேலி பண்ணுங்க சார்! இளநீர்க் கடையில சுத்துமுத்தும் பார்த்து "வழுக்கை' கேளுங்க!

ழக்கமாக சி.பி.ஐ. அதிகாரி கள்தான் குற்றம் செய்தவர்களைக் கைதுசெய்வார்கள். டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகளே நால்வர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியாக, கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். சண்டிகரைச் சேர்ந்த ஒரு வணிகரிடம் மே 10-ஆம் தேதி ஆறு பேர் அடங்கிய குழு சென்றிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு அவர் பணம் கொடுத்ததாகவும், அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறி, அவரை ஒரு காரில் ஏற்றிச்சென்று வலுக்கட்டாயமாக ரூ25 லட்சம் பறித்தனர். இதையடுத்து அந்த வணிகர் சி.பி.ஐ. இயக்குநர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் வரை சென்று புகாரளிக்க, விசாரித்ததில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பது உண்மை என்று கண்டறிந்திருக்கிறார். இதையடுத்து அந்த நால்வரையும் பதவியிலிருந்து விடுவித்ததோடு, அவர்களைக் கைதுசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். ச்சீ..பி.ஐ.!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் நடந்த காதல் களேபரம் இது. கணேஷ்பூரைச் சேர்ந்த வாலிபர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். கிராமம் என்பதால் காதலியைச் சந்திக்க சிரமம் இருந்துவந்தது. அவரோ எலெக்ட்ரீசியன். பார்த்தார், வாரத்தில் ஒருமுறை இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ஊருக்கே மின்வெட்டு ஏற்படுத்தி விடுவார். பின் இருவரும் சந்தித்துப் பேசிமுடித்ததும் மின் இணைப்பைக் கொடுத்துவிடுவார். திடீரென ஊரில் இரவில் கரண்ட் போவதைப் பார்த்து மக்கள் மின்நிலையத்துக்கு போன் செய்திருக்கின்றனர். அவர்களோ நாங்கள் மின்சாரத்தை நிறுத்தவில்லை எனச் சொல்ல, ஊரே வலைவிரித்துக் காத்திருக்க, மின்சாரத்தை நிறுத்தவந்த வாலிபர் வசமாகச் சிக்கினார். பிறகென்ன ஊர்ப் பஞ்சாயத்தில் குட்டு அம்பலமாக, வாலிபரை எச்சரித்துவிட்டு ஜோடிக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். மின்வெட்டுல இப்படி ஒரு நல்லதும் இருக்குதா!

க்ரைன் உலகின் கொடுங்கனவாகியுள்ளது. வல்லாதிக்க அரசுகள் நினைத்தால் எதையும் நடத்தலாம் என்பதற்கு மற்றொரு உயிருள்ள உதாரணமாக மாறியுள்ளது உக்ரைன். மாதக்கணக்கில் நடந்துவரும் உக்ரைன்- ரஷ்ய போரால் உக்ரைன் நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மிக முக்கியமாக, ஆயிரக்கணக்கில் உக்ரைன் மக்கள் பலியாகிவருவதுடன், ஆயிரக் கணக்கானோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு, தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாடு குற்றம்சுமத்துகிறது. தவிரவும் இதுவரை உக்ரைனிலிருந்து 60 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி அயல்நாடு களில் தஞ்சம்புகுந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள் ளது. அவர்களில் பெண்களும் குழந்தை களுமே 90 சதவிகிதத்தினர். வல்லரசுகள் சாதிச்சது இதைத்தான்!

-நாடோடி

nkn210522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe