Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

டந்த மே 6-ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் வழக்கமான சோதனை நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது உகாண்டாவைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண்ணின் நடத்தையில் சந்தேகமடைந்த சோதனை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

Advertisment

ff

போதைப் பொருளை கேப்சூல் மாத்திரை வடிவில் அடைத்து அவர் விழுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர கண்காணிப்பின்கீழ் அந்த போதைப் பொருள் அவரது உடலிலிருந்து அகற்றப்பட்டது. அந்த போதைப் பொருள் மெர்தா மெட்டாமைன் என்பதும், அவர் கடத்தி வந்த 890 கிராம் போதைப் பொருள் விலை இரண்டரைக் கோடிக்கும் அதிகமென்பதும் தெரியவந்தது. கில்லேடியா இருந்துருக்காங்களே!

Advertisment

dd

மேற்கத்திய நாடுகளில் கலைப்பொருள்களை ஏலம் எடுப்பதற்கு சரியான போட்டியிருக்கும். மகா கலைஞர்களின் பொருட்களை ஏலம் எடுப்பது அந்த

டந்த மே 6-ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் வழக்கமான சோதனை நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது உகாண்டாவைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண்ணின் நடத்தையில் சந்தேகமடைந்த சோதனை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

Advertisment

ff

போதைப் பொருளை கேப்சூல் மாத்திரை வடிவில் அடைத்து அவர் விழுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர கண்காணிப்பின்கீழ் அந்த போதைப் பொருள் அவரது உடலிலிருந்து அகற்றப்பட்டது. அந்த போதைப் பொருள் மெர்தா மெட்டாமைன் என்பதும், அவர் கடத்தி வந்த 890 கிராம் போதைப் பொருள் விலை இரண்டரைக் கோடிக்கும் அதிகமென்பதும் தெரியவந்தது. கில்லேடியா இருந்துருக்காங்களே!

Advertisment

dd

மேற்கத்திய நாடுகளில் கலைப்பொருள்களை ஏலம் எடுப்பதற்கு சரியான போட்டியிருக்கும். மகா கலைஞர்களின் பொருட்களை ஏலம் எடுப்பது அந்தஸ்துக்குரிய ஒன்று. தவிரவும், ஒரு 50 வருடம் கழித்து அதை விற்கும்போது அதற்கு இன்னுமதிக விலை கிடைக்கும். அப்படியொரு ஏலத்தைப் பற்றிய செய்திதான் இது. மேற்கத்திய வட்டாரங்களில் பெயர்பெற்ற கலைஞர் ஆண்டி வார்ஹோல். இவர் 1964-ல் வரைந்த மர்லின் மன்றோ ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் முடிவுக்கு வந்தபோது அந்த ஓவியத்தின் விலை 170 மில்லியன் டாலர். வரி உள்ளிட்ட இதர செலவுகள் சேர்த்து 195 மில்லியன் டாலராகிவிட்டது. கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் ஏலம் எடுத்த மில்லியனர் பெயர் தெரிந்தால், நம் ஓவியங்களையும் அவர் பார்வைக்கு அனுப்பிப் பார்க்கலாம்! மர்லின் இன்னிக்கும் மில்லியன் டாலர் பேபிதான்...

டந்த 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் இந்தக் கோடையில் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதுமே வெப்ப அலைகள் நிலவுகின்றன. குறிப்பாக வடமாநிலங்கள் இந்த வெப்ப அலைகளால் தகிக்கின் றன. மனிதர்கள் உஷாராக வெளியில் வராமல் தப்பித் தாலும், மிருகங்களும் பறவை களும் உணவுக்காகவும் நீருக்காக வும் வெளியில் வந்தாகவேண்டி யுள்ளது. குஜராத்தில் அப்படி வரும் பறவைகள் வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், சுருண்டுவிழுந்து இறப்பது அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் இப்படி வெயிலில் மயங்கிவிழுந்த ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்களாம். குறிப்பாக புறாக்களும், கிளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனவாம். பறவைகள் சாகும்போதே மானுடன் சுதாரிச்சுக்கணும்!

துவும் ஒரு கடத்தல் விவகாரம்தான்! மே 9-ஆம் தேதி இரவு துபாயிலிருந்து சென்னை வந்துசேர்ந்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம். அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரியாத்தில் பிளம்பராகப் பணியாற்றிய மெகபூப் பாஷா, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தவேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டு கிரீன் சேனல் வழியாக வெளியேறினார். எனினும் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் திரும்ப அழைத்து அவரது சூட்கேஸ்களில் இருந்த டூல்ஸ்களில் இருந்த ஸ்பேனர் களைப் பரிசோதித்தனர். அதில் அந்த 6 ஸ்பேனர்களும் தங்கத்தால் ஆனவை என்பதைக் கண்டுபிடித்தனர். ஒரு கிலோவுக்கும் அதிகமான எடையுடைய அதன் சர்வதேச மதிப்பு ரூ 48 லட்சம். இதையடுத்து மெகபூப் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தங்க ஸ்பானர் இரும்புக் காப்பை மாட்டிடுச்சே!

ee

ழுத்து, நாடகம், இசைத் துறையில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு வழங்கப்படும் விருது புலிட்ஸர். இவ்வருடம் டேனிஷ் சித்திக், அத்னான் அபிதி, சன்னா இர்ஷாத், அமித் தவே ஆகிய 4 இந்திய புகைப்படக் கலைஞர்கள் புலிட்சர் விருதை வென்றுள்ளார்கள். விருதை வென்றுள்ள நால்வரும் ராய்ட் டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா காலகட்டத்தின்போது இந்தியாவின் நிலைமையை சிறப்பாகப் பதிவுசெய்தமைக் காக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. இவர்களில் ஆப்கானிஸ்தான் படைக்கும் தலிபானுக்குமான போரைப் பதிவுசெய்யச் சென்ற டேனிஷ், தலிபான்களால் கொல்லப்பட்டதால் அந்த விருதை அவர் சார்பாக குடும்பத்தினர் பெறுவர். டேனிஷ், ரோஹிங்யா அகதிகளின் நிலையை பதிவுசெய்ததற்காக 2018-லும் புலிட்ஸர் விருதுபெற்றவர். புகைப்படப் புலிகளுக்கு புலிட்ஸர்!

மே 11-ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலுள்ள பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரிலுள்ள அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்கச் சென்ற அல்ஜஸீரா பெண் செய்தி யாளர் ஷிரின் அபு இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் பலி யானார். மற்றொரு செய்தியாள ரும் காயமடைந்தார். நன்கு அறியப்பட்ட பாலஸ்தீனிய செய்தியாளரான ஷிரின், செய்தியாளருக்கான நீலநிற மேற்கோட்டு அணிந்து சென்றிருந்தும், வேண்டு மென்றே இஸ்ரேல் ராணுவம் ஷிரினைச் சுட்டுக்கொன்றிருக்கிறது. இந்தக் கொலைக்கு பாலஸ்தீன ஆக்ரமிப்பு சக்திகளே பொறுப்பு. சர்வதேச சமூகம் இந்தக் கொலையைக் கண்டிக்கவேண்டுமென அல்ஜஸீரா வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச பயங்கரவாதம்!

-நாடோடி

nkn180522
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe