வைல்டு லைஃப் இன்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா' அமைப்பு ஒரு புதிய ஆய்வில் இறங்கியுள்ளது. சத்தியமங்கலத்துக்கு வரும், அரிய கிரிஃபோன் கழுகுகளில் 25-ஐ தேர்வுசெய்து அவற்றின் உடலில் டேக்கைக் கட்டி, அவை செல்லும் இடங்களைப் பற்றிய ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஹிமாலயக் கழுகுகள் பருவநிலைக்கேற்ப தமிழ்நாடு முதல் சீனா வரை இடம்பெயரக்கூடியவை. "இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகள், பயணிக்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த ஆய்வில் கிடைக்கும்' என்கிறார் முன்னணி சூழலியல் அறிஞரான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி. ஐந்து வருடங்களுக்கு இந்த கழுகுகளிடம் கிடைக்கும் தகவல்கள் சேகரித்து ஆராயப்படும் எனத் தெரிகிறது. கழுகுக்கே கழுகுப் பார்வை ஆராய்ச்சியா!
டெல்லி மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் தஜிந்தர் பக்காவை பஞ்சாப் போலீசார் கைதுசெய்தது சர்ச்சையாகியிருக்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்துவந்தார் தஜிந்தர்.
வைல்டு லைஃப் இன்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா' அமைப்பு ஒரு புதிய ஆய்வில் இறங்கியுள்ளது. சத்தியமங்கலத்துக்கு வரும், அரிய கிரிஃபோன் கழுகுகளில் 25-ஐ தேர்வுசெய்து அவற்றின் உடலில் டேக்கைக் கட்டி, அவை செல்லும் இடங்களைப் பற்றிய ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஹிமாலயக் கழுகுகள் பருவநிலைக்கேற்ப தமிழ்நாடு முதல் சீனா வரை இடம்பெயரக்கூடியவை. "இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகள், பயணிக்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த ஆய்வில் கிடைக்கும்' என்கிறார் முன்னணி சூழலியல் அறிஞரான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி. ஐந்து வருடங்களுக்கு இந்த கழுகுகளிடம் கிடைக்கும் தகவல்கள் சேகரித்து ஆராயப்படும் எனத் தெரிகிறது. கழுகுக்கே கழுகுப் பார்வை ஆராய்ச்சியா!
டெல்லி மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் தஜிந்தர் பக்காவை பஞ்சாப் போலீசார் கைதுசெய்தது சர்ச்சையாகியிருக்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்துவந்தார் தஜிந்தர். பஞ்சாப் ஆம் ஆத்மி பிரமுகர் ஒருவர் புகார் கொடுக்க, வழக்கொன்று பதிவானது. இதற்காக 5 முறை சம்மன் அனுப்பியும் தஜிந்தர் ஆஜராகவில்லை. இதையடுத்து டெல்லியிலுள்ள அவரது வீட்டுக்கே சென்று அவரைக் கைதுசெய்து பஞ்சாப் கொண்டுசென்றது பஞ்சாப் போலீஸ். பஞ்சாப் போலீஸை வழியில் ஹரியானா போலீஸ் மறிக்க, டெல்லி போலீஸார் மீட்டுச்சென்றனர். பஞ்சாப் போலீஸோ, டெல்லி போலீஸில் எஃப்.ஐ.ஆர் பதிவானதே இரவு 12.41-க்குதான். ஆனால் 12.30-க்கே ஹரியானா போலீஸ் மடக்கி விட்டது என சூசகமாக ஹரியானா போலீஸ்மீது குற்றம் சாட்டுகிறது. அரசியல் விளையாட்டுல போலீஸை பகடைக் காயாக்கலாமா?
எடை அதிகரிப்பு உலகமெங்கும் பெரிய பிரச்சனையாக வளர்ந்துவருகிறது. முன்பெல்லாம் வளர்ந்த நாடுகளின் பிரச்சனையாக இருந்த உடற்பருமன், வளரும் நாடுகளையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. கடந்த 40 வருடங்களில் உடற்பருமன் மும்மடங் காக அதிகரித்திருக்கிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவின் ஐந்தாவது தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி தேசிய உடற் பருமன் விகிதம் பெண்களிடையே 21 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாகவும் ஆண் களிடையே 19-லிருந்து 23 சதமாகவும் அதிகரித்தி ருக்கிறது. உடற்பருமன் அதிகரிப்பு, இதய ரத்தக்குழாய் நோய்கள், நீரிழிவு, தசை, எலும்பு நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது. கூடவே, கர்ப்பம்தரிப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியம் உங்கள் சாய்ஸ்!
கோவை ஆலாந்துறைக்கு அருகே வடிவேலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தா. 85 வயதான இவர் இட்லி சுட்டு பிழைப்பு நடத்திவருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 30 வருடங்களாக இவர் 1 ரூபாய்க்கு இட்லி விற்றுவருவதுதான். விலைவாசி உயர்ந்தபோதும் தன்னை நம்பிவரும் வாடிக்கையாளர்கள் ஏமாந்துபோகக்கூடாது என்பதற்காக அவர் விலையை ஏற்றவில்லை. வறுமையிலும் செம்மையான கமலாத்தாவின் தாராளத்தைப் பார்த்து, மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, விறகடுப்புக்குப் பதில் கேஸ் அடுப்பு ஏற்பாடு செய்துதந்தார். மக்கள் நலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கமலாத்தாளுக்கு, இந்த உதவி போதாதென நினைத்த அவர், இந்த அன்னையர் தினத்தில் (மே-8), கமலாத்தாவுக்கு வீடு கட்டிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். மனம்போல் வாழ்வுனு இதைத்தான் சொன்னாங்களோ!
பாபர் மசூதி விவகார வெற்றியால் ஊக்கம் பெற்றுள்ள இந்துத்துவர்கள் பார்க்கிற மசூதி களிலெல்லாம் இந்துச் சிலைகள் இருப்ப தாகவும், மசூதிகளின்கீழ் இந்துக் கோவில்கள் புதையுண்டிருப்பதாகவும் குரலெழுப்பிவருகின் றனர். இந்த லேட்டஸ்ட் ஸ்டண்டில் தாஜ்மகாலும் சிக்கியுள்ளது. சிவன் கோயில் கட்டப்பட்ட இடத்தில் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன் பூட்டிய அறைகளில் அந்தக் கோவிலின் சிலைகள் இருப்பதாகவும் பா.ஜ.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ்சிங் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தவிரவும், காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் அம்மன் கோவில் இருந்ததாகவும், அதை உறுதிசெய்ய கள ஆய்வுக்கு அனுமதிக்கவேண்டுமெனவும் சர்ச்சையில் இறங்கியுள்ளனர் இந்துத்துவர்கள். அடுத்து சர்ச் சுகளுக்குக்கீழ கிருஷ்ணன்கோவில் இருக்குமோ!
எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இத்தகைய படகுகளை மீனவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 200 படகுகளை ஏலம்விடப் போவதாக தகவல்கள் வந்தன. அதற்கு இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித் தன. அதன்பிறகும் 130 படகு கள் ஏலம்விடப்பட்டு விறகாகவும் இரும்பாகவும் பிரிக்கப்பட்டு ஏலதாரர்கள் கொண்டுசென்றுள்ளதாகச் செய்திவந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் நிலைதடுமாறிவரும் இலங்கை அரசுக்கு இந்திய அரசும் தமிழக அரசும்தான் பெரும் உதவியாக இருந்துவருகின்றன. இருந்தபோதும், இலங்கை அரசு தமிழக மீனவர் களின் கோரிக்கையை அலட்சியம் செய்து இத்தகைய நடவடிக்கை யில் இறங்கியிருப்பது மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பால்வார்த்தாலும் பாம்பு பாம்புதானே!
-நாடோடி