Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

கோடிக்கணக்கில் கடன் வாங்கும் கார்ப்பரேட் களை கோட்டை விடும் வங்கிகள், ஆயிரங்களில் கடன் வாங்கும் சாதாரண நபர்களை சொத்து பறிமுதல், வாகனப் பறிமுதல் என வாட்டி எடுத்து விடும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாம்ஜிபாய், எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகை யை திரும்பச் செலுத்திய நிலையில், ஏதோ கணக்குவழக்கு விவகாரத்தில் 31 பைசா நிலுவை யாகிவிட்டது. தனது நிலத்தை விற்க என்.ஓ.சி. எனும் தடையில் லாச் சான்றிதழ் வாங்க சாம்ஜி பாய் அணுகியபோது, 31 பைசா நிலுவையைக் காரணமாகச் சொல்லி தரமறுக்க, அவர் நீதிமன்றத்துக்குப் போய்விட் டார். வழக்கை விசாரித்த நீதிபதி 31 பைசா பாக்கியெல்லாம் ஒரு பாக்கியா…? அதற்காக விவசாயி களை இழுத்தடிப்பீர்களா? என கிடுக்கிப்பிடி போட… அதன் பிறகு சான்றிதழ் கொடுத்திருக் கிறது எஸ்.பி.ஐ. வங்கி. ஜனங்கள்ட்ட புலி கார்ப்பரேட் கிட்ட எலி!

Advertisment

dd

த்தரப்பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்து வது சட்டவிரோதம் எனச் சொல

கோடிக்கணக்கில் கடன் வாங்கும் கார்ப்பரேட் களை கோட்டை விடும் வங்கிகள், ஆயிரங்களில் கடன் வாங்கும் சாதாரண நபர்களை சொத்து பறிமுதல், வாகனப் பறிமுதல் என வாட்டி எடுத்து விடும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாம்ஜிபாய், எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகை யை திரும்பச் செலுத்திய நிலையில், ஏதோ கணக்குவழக்கு விவகாரத்தில் 31 பைசா நிலுவை யாகிவிட்டது. தனது நிலத்தை விற்க என்.ஓ.சி. எனும் தடையில் லாச் சான்றிதழ் வாங்க சாம்ஜி பாய் அணுகியபோது, 31 பைசா நிலுவையைக் காரணமாகச் சொல்லி தரமறுக்க, அவர் நீதிமன்றத்துக்குப் போய்விட் டார். வழக்கை விசாரித்த நீதிபதி 31 பைசா பாக்கியெல்லாம் ஒரு பாக்கியா…? அதற்காக விவசாயி களை இழுத்தடிப்பீர்களா? என கிடுக்கிப்பிடி போட… அதன் பிறகு சான்றிதழ் கொடுத்திருக் கிறது எஸ்.பி.ஐ. வங்கி. ஜனங்கள்ட்ட புலி கார்ப்பரேட் கிட்ட எலி!

Advertisment

dd

த்தரப்பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்து வது சட்டவிரோதம் எனச் சொல்லி குறிப்பாக மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி செய்துவரும் நிலை யில், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே "மே 3-ஆம் தேதிக்குள் மகாராஷ் டிராவிலுள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பில்லை” என எச்ச ரிக்கை விடுத்தார்.' இதை யடுத்து மாநில போலீசார் உஷார் செய்யப்பட்டனர். மே 4 முதல் கோவில்களில் அனு மன் சாலிசாவை ஒலிபெருக்கி மூலம் சத்தமாக ஒலிபரப்பு வோம் என ராஜ்தாக்கரே எச்சரிக்க, அவர் மீது அம் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒலி பெருக்கி அரசியலா யிருக்கே!

மெட்ராஸ்கேர் சென்டர் என்ற மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப் பட்டார் ஆட்டோமொபைல் மெக்கானிக்கான ராஜு. சில மாத சிகிச்சைக்குப் பின் குணமாகி விட்டதாக டிஸ்சார்ஜ் செய்யப் பட்ட ராஜு, சில நாட்களிலேயே திரும்ப குடிக்க ஆரம்பித்தார். ராஜுவின் மனைவி கலா, தன் கணவர் முழுமையாகக் குணமாக வில்லையென்றும் குடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடப்ப தாகவும் மெட்ராஸ் கேர் சென்டருக்கு தகவல் தெரிவித்தார். சென்டரிலிருந்து வந்தவர்கள் அவரை கம்பாலும் கையாலும் அடித்து இழுத்து மையத்துக் குக் கொண்டுசெல்ல, ராஜு வழியில் நினைவிழந்தார். ராயப்பேட்டை மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றபோது, ராஜு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்ல, மறு வாழ்வு மையத்தைச் சேர்ந்த 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மையத்தை நடத்தும் கார்த்திகேயனும் அவரது மனைவியும் தலைமறை வாகியிருக்கின்றனர். மறுவாழ்வு மையம்னு உயிரைப் பறிச்சுட்டாங் களே!

Advertisment

dd

பிற்போக்குவாதிகள் எப்போதும் பிற்போக்குவாதிகள்தான் என்பதை தலிபான்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித் திருக்கிறார்கள். ஆப்கானிஸ் தானில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்துபவர்களே, பழகுபவர்களுக்கு உரிமமும் வழங்கமுடியும். இத்தகைய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி களுக்கு உயர் அதிகாரியான ஜன் அகா அச்சக்சாய், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவேண்டாம் என வாய்வழி உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம். அதே சமயம் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதைத் தடுக்கவேண் டாம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறதாம். அதாவது மக்கள் மத்தியில் எதிர்ப் பெழாமல், பெண்களை மெல்ல மெல்ல வாகனங்களை இயக்குவதிலிருந்து தடுத்து வைக்கும் உத்திதான் இது. பெண்களைப் படிப்பதிலிருந்து தடுத்த தலிபான்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக் கின்றனர். மூடர் கூட்டங்கள் உலகமெங்கும் இருக்கின் றன!

த்தரகாண்டில், அப்பாவின் கடைசி ஆசைப் படி இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு வசதி யாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைமதிப்புள்ள நிலத்தை மசூதிக்கு எழுதித் தந்து ஆச்சரியப் பட வைத்திருக்கிறார்கள் இந்து சகோதரிகள். லாலா பிரஜானந்தன் தனது 80 வயதில் (2003) இறந்துபோனார். சமீபத்தில் உற வினர்கள் சந்திப்பு ஒன்றின்போது, அனிதாவுக்கும் சகோதரி சரோஜுக் கும் தங்கள் தந்தை தனது நிலத்தில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் பண்டிகையின்போது தொழுகைக் குப் பயன்படுத்திக்கொள்ள எழுதி வைக்க விரும்பினார் எனத் தெரிந் திருக்கிறது. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும்விதமாக காசிப்பூரிலுள்ள நிலத்தை பள்ளி வாசலுக்கு தானமாக அளித்திருக்கிறார்கள். மதவேற்றுமை பாராட்டும் கட்சிகளுக்கு நடுவே, சகோதரத்துவத்தைப் பேணும் அசல் மனிதர்களும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்! மதம் கடந்த மனுஷிகள்!

dd

மிழின் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஔவையார். சங்கக் கவிதைகள், இடைக்காலக் கவிதைகள், பக்திக் காலக் கவிதைகளிலும் இவரது கவிதை காணக் கிடைப்பதால் மூன்று வெவ்வேறு ஔவையார் கள் இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. சங்கக் கவிதைகள், ஆத்திச்சூடி, மூதுரை, விநாயகர் அகவல் என ஔவையார்களின் பங்களிப்பும் தமிழுக்கு அதிகம். அவரைக் கௌரவிக்கும்விதமாக நாகப் பட்டினம் துளசியாப்பட்டணம் கிராமத்தில் ஔவைக்கு மணி மண்டபம் அமைக்கவும் அங்கு அவரது கவிதைகளை கல்வெட் டாக பதிக்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் அரசு விழா நடத்த வும் உத்தர விட்டுள்ளது. ஔவைக்கு மரியாதை!

-நாடோடி

nkn110522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe