Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

கீழடி அகழாய்வில், கொந்தகை தளப் பகுதியில் 21 முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட் டது ஆச்சரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கீழடி பகுதியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முந்தைய அகழாய்வுகளில் நீள்வடிவ தாயக்கட்டைகள், பானைகள், வளையல்கள் போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன.

Advertisment

ff

இங்கு நடைபெறும் அகழாய்வுகள் தமிழரின் பாரம்பரியப் பெருமைகளையும் தொன்மைகளையும் வெளிப்படுத்தி வருகிறது. புதிதாகத் தோண்டப்பட்ட குழிகளில் ஒன்றில் 12 முதுமக்கள் தாழியும், மற்றொன்றில் 9 முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு தாழி முழுமையாக எந்த சேதாரமுமில்லாமல், அதன் மூடியுடன் அமைந்துள்ளது. அவற்றைப் பாது காப்பாக அகழ்ந்தெடுக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வரலாறே புதையலா கிடைக்குது!

Advertisment

ரித்துவாரில் கடந்த வருடம் டிசம்பரில் நடந்த இந்துமத மகாநாட்டில், இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக இனப் படுகொலைக்கு அழைப

கீழடி அகழாய்வில், கொந்தகை தளப் பகுதியில் 21 முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட் டது ஆச்சரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கீழடி பகுதியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முந்தைய அகழாய்வுகளில் நீள்வடிவ தாயக்கட்டைகள், பானைகள், வளையல்கள் போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன.

Advertisment

ff

இங்கு நடைபெறும் அகழாய்வுகள் தமிழரின் பாரம்பரியப் பெருமைகளையும் தொன்மைகளையும் வெளிப்படுத்தி வருகிறது. புதிதாகத் தோண்டப்பட்ட குழிகளில் ஒன்றில் 12 முதுமக்கள் தாழியும், மற்றொன்றில் 9 முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு தாழி முழுமையாக எந்த சேதாரமுமில்லாமல், அதன் மூடியுடன் அமைந்துள்ளது. அவற்றைப் பாது காப்பாக அகழ்ந்தெடுக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வரலாறே புதையலா கிடைக்குது!

Advertisment

ரித்துவாரில் கடந்த வருடம் டிசம்பரில் நடந்த இந்துமத மகாநாட்டில், இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக இனப் படுகொலைக்கு அழைப்புவிடுத்துப் பேசி, அது சமூக வலைத்தளங் களில் வைரலாகி, தேசிய அளவில் விவாதப் பொருளானது. டில்லியிலும் இதுபோன்ற மாநாட்டில் இந்துத்துவர்கள் வன்முறையாகப் பேச, அதற்கு டில்லி போலீசே அவர்கள் இனப் படுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை. தங்களை தற்காத்துக் கொள்வது பற்றிதான் பேசினர் என நீதிமன்றத்தில் சமாளிபிகேஷன் பதிலளித்தது. இந்தநிலையில் ரூர்கியில் நடக்கவிருந்த இந்து மகாபஞ்சாயத்து குறித்து உச்சநீதிமன்றம் வரை புகார் போக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அதை நடத்தவிருந்த ஸ்வாமி ஆனந்த் ஸ்வரூப்பை போலீஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்கிறது. மேலும் அதில் கலந்து கொள்ளவிருந்த 10 பேரைக் கைதுசெய் திருக்கிறது. மகா பஞ்சாயத்தா... மத பஞ்சாயத்தா?

த்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 70 வயது நபருக்குப் பதிலாக 45 வயது நபர் சிறையிலடைக்கப்பட்ட விவகாரம் அம்பல மாகியிருக்கிறது. சுங்க வரி வசூலிக்கும் அமித் கம்பாரியா, தனது பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் வரி வசூலிப்பது அம்பலமாக, அவர் மேல் கம்பாடியா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. அமித், அவரது தந்தை அனிருத், மேலும் சிலர் மீது குற்றச்சாட்டு. அமித், தனது தந்தை அனிருத்துக்குப் பதிலாக பாண்டே என்பவரை பொய்சொல்லி அழைத்துவந்து, சில காகிதங்களில் கையெழுத் துப் போடவைத்திருக்கிறார். (என்ன ஆசைகாட்டினாரோ!) பிறகுதான் ஐந்து வருட சிறைத்தண்டனை என தெரியவந்திருக்கிறது. 84 நாட்கள் சிறையில் புலம்பிய பிறகு உண்மையான குற்றவாளி பாண்டே இல்லை எனத் தெரிந்து விடுவித்திருக்கின்றனர். 70 வயசுக்கும் 45 வயசுக்கும் காவல்துறைக்கு வித்தியாசம் தெரியாமலா போனது? வெல்லம்தின்னது ஒருத்தன்! விரல்சூப்புனது ஒருத்தன்!

திருப்பத்தூர் மாவட்டம் மதனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தினகரன் என்னும் இளைஞர் விபத்தொன்றில் உயிரிழந்தார். மகனை இழந்த துயரத்திலும் தினகரனின் பெற்றோர், தனது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் வழங்கி, வேறு பலரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்ய நினைத்தனர். இதையடுத்து தினகரனின் இதயத்தை, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் உள்ள நபருக்கு தானமளிக்க தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் முடிவுசெய்தது. மே 1 மாலை அதனை விரைவாக சென்னை கொண்டு வர, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேல்முருகன் பணிக்கப்பட்டார். வேலூர் முதல் சென்னை வரையிலான போக்குவரத்துக் காவல்துறையால் சீர்செய்யப்பட, முயற்சி வெற்றிபெற்றது. தினகரனின் கண்கள், சிறுநீரகங்களும் வேறு சிலருக்கு தானமாகத் தரப்பட்டுள்ளன. இறந்தும் வாழ்கிறார் தினகரன்!

dd

முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டு இந்தியாவில் வெப்பநிலை கடுமையாக உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்திலேயே கடும் வெப் பம் நிலவுவதுடன் அதிகபட்சமாக 450 செல்சியஸ் வரை தொட்டுள் ளது. டில்லி, ராஜஸ் தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசாவில் வெப்ப அலை எச்சரிக்கை களும் விடப்பட்டுள் ளன. முதியவர்கள் வீட்டை விட்டு அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என ஆலோசனை தரப்பட்டுள்ளது. தெற்கு ஆசியா முழுக்கவே இந்த வெப்பநிலை நிலவுவதுடன், அதிகபட்சமாக 490 செல்சியஸ் வரை வெப்பநிலை போகலாம் என கணிக்கப் பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் பின்விளைவாகக் கருதப்படும் தீவிர வெப்பம், கடும் மழை, கொடும் பனியை வரும் காலங்களில் மனிதர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அறிவிய லாளர்கள் எச்சரிக்கிறார்கள். விதைத்ததையே அறுக்கமுடியும்!

dd

பா.ஜ.க.. ஆட்சிசெய்யும் கர்நாடகத்தில் அம்மாநில அரசு ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தது. ஹிஜாப்புக்கு அனுமதி மறுக்கப் பட்டதை எதிர்த்து பள்ளிகளையும் தேர்வுகளையும் மாணவிகள் புறக்கணித்தனர். இதுதொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வரவுள்ளது. இதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் பல்க் மாகாணப் பள்ளி யொன்றில் மாணவிகள் ஹிஜாப் அணியவில்லை என தலீபான்கள் அந்தப் பள்ளியை மூடியிருக் கின்றனர். தவிரவும், ஹிஜாப்பை சீரியஸாகப் பின்பற் றாத பள்ளிகளும் மூடப்படும் என எச்சரிக்கைவிடுத் துள்ளனர். பெண் களின் விருப் பத்தை யாரும் கேட்பதில்லை. அவரவர் அர சியல் அவர் களுக்கு.

-நாடோடி

nkn070522
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe