மிழக தீயணைப்புத் துறை, தொழில்நுட்பத்தை தங்களது சேவையில் பயன்படுத்தும் முகமாக ட்ரோன்களை தீயணைப்புப் பணிகளில் பயன்படுத்த முடிவுசெய்துள்ளது. வெறுமனே வீடியோ எடுக்கவும், உணவுப் பொருள் சப்ளைக்குமாக மட்டும் பயன்பட்டுவந்த ட்ரோன்களை தீயணைப்புப் பணிகளிலும் பயன்படுத்த முடியுமென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தீவிபத்து ஏற்படும்போது, எங்கே ஆட்கள் சிக்கியுள்ளனர், தீயின் தாக்கம் எந்த இடத்தில் அதிகமாக உள்ளது, தீ பரவும் திசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ட்ரோன்களால் கண்டறிய இயலும். வெப்பத்தால் சீக்கிரம் பாதிக்கப்படாத தெர்மல் கேமராக்கள் இந்த வகை ட்ரோன்களில் பயன்படுத்தப்படும். தீவிபத்தான இடங்களில் ஊடுருவி காணொலிக் காட்சிகளை அனுப்பி தீயணைப்பு வீரர்களுக்கு இவை பெரும் உதவியாக இருக்கமுடியும் என்கிறார்கள் அதிகாரிகள். ட்ரோன் ஆன் த்ரோன்!

ff

டந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வில் ரூ.210 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழலில் குல்பர்கா பகுதி பா.ஜ.க. மகளிரணித் தலைவி திவ்யா ஹகரகிக்குத் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழல் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தது. திவ்யா நடத்திவரும் ஞானஜோதி மெட்ரிக் பள்ளியில் எஸ்.ஐ. தேர்வு நடைபெற்றபோதுதான் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து திவ்யா தலைமறைவாக, அவரது கணவர் ராஜேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். ஏற்கெனவே உள்ளாட்சித் துறை ஊழல் தொடர்பாக ஈஸ்வரப்பா கைதாகியுள்ள நிலையில், இப்போது காவல்துறை ஊழலில் பா.ஜ.க. மகளிரணித் தலைவர் சிக்கியுள்ளது கர்நாடக மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தேனெடுக்கிறவன் கை நக்காமலா இருப்பான்…

காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொல்லியே ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. சொல்லிய முக்கிய குற்றச்சாட்டு களில் ஒன்று இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் நேரு பறிகொடுத்தார் என்பது. இப்போது அதே சீனா கடந்த மூன்றாண்டுகளாகவே லடாக்கில் வலுவந்தமாக ஆக்கிரமிப்பு, அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சர்ச்சைக்குரிய இடங்களில் குடியிருப்பு களைக் கட்டியது, பாங்காக் ஏரியின் குறுக்கே பாலம் கட்டியது என தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய அரசுத் தரப்பிலிருந்து சம்பிரதாய கண்டன அறிக்கைகளைத் தாண்டி எந்த சத்தமும் கிடையாது. அந்த வரிசையில் லடாக்கின் வெந்நீருற்றுப் பகுதியில் 3 செல்போன் கோபுரங்களைக் கட்டிமுடித்திருக்கிறது சீனா. இதையும் சீனா கட்டிமுடித்தபிறகே இந்தியா கண்டறிந்திருக்கிறது. செல்போன் கோபுரம் வருதுன்னா, ராணுவமோ… மக்களோ அந்தப் பக்கம் குடியேறப் போறாங்க! இந்த முறை மோடி என்ன செய்யப் போகிறார்? சீனத் தலைவலித் தைலத்தை தடை பண்ணிடுவாரோ!

Advertisment

ff

டந்த வருடம் அக்டோபர் மாதம் சிறைக்குச் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் இன்னும் சிறையிலேயே இருக்கின்றனர். ஆச்சரியம் என்னவென்றால் இவர்களுக்கு நீதிமன்றம் ஏப்ரல் தொடக்கத்திலேயே பெயில் வழங்கிவிட்டது. பிறகேன் இவர்கள் சிறையிலேயே இருக்கவேண் டும்? இவர்கள் செய்த குற்றம் என்ன? டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதைக் கொண்டாடியதுதான். இவர்கள் காஷ்மீர் மாணவர்கள் என்பது கூடுதல் குற்றம். பிறகென்ன தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர் ஒருவர், “"நாங்கள் காஷ்மீரிகள் என்பதால் பெயிலில் கையெழுத்திட உள்ளூர் ஆட்கள் முன்வரவில்லை. பெயிலுக்கான தொகையாக ஆளுக்கு 2 லட்சத்தைத் திரட்டவும் நாட்களாகிவிட்டது. அதன்பிறகும் நாங்கள் சமர்ப்பித்த சான்றுகளை உறுதிப்படுத்த காவல்துறை காலதாமதம் செய்கிறது'’என்கிறார். இதற்கு நடுவில் உ.பி. மாநிலம் பரேய்லியில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற பாகிஸ்தான் பாடலைக் கேட்டு, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக இரு சிறுவர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நல்லா இருக்குங்க சார் உங்க நீதி!

துவரை இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,22,000 என்கிறது இந்தியா. உலக சுகாதார நிறுவனமோ 40 லட்சம் என்கிறது. அரசு கணக்குக்கும், உலக சுகாதார அமைப்பின் கணக்குக்கும் 8 மடங்கு வித்தியாசம். சுருக்கமாக WHO- இந்தியா எட்டில் ஒரு மரணத்தை மட்டுமே பதிவுசெய்துள்ளது என்கிறது. WHO-ன் கணக்குக்கு இந்தியத் தரப்பிலிருந்து ஆவேசமாக, அவர்களின் கணக்கிடும் முறை தவறானது என்கிறார்கள். தவிர, "தி லான்செட்' எனும் மருத்துவ ஆய்விதழும் இந்தக் கணக்கீட்டை உறுதிசெய்கிறது. பேராசிரியர் ஜான் வேக்பீல்ட் என்கிற ஆய்வாளர், “"இந்தியா எங்களுக்கு அளித்த தரவுகளின் அடிப்படையில்தான் கொரோனா மரணங்களைக் கணக்கிட்டோம். நாங்கள் இந்தியா தவறவிட்ட மரணங்களையும் சேர்த்துக் கணக்கிட்டிருக்கிறோம்'’என்கிறார். தவிர, இந்தக் கணக்கீட்டுக் கோளாறை இந்தியா மட்டும் செய்யவில்லை. ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் செய்திருக்கின்றன. சொத்துக் கணக்கும் டெத்து கணக்கும் கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கும்!

-நாடோடி