Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

bb

ல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிப்பதும், விசாரணைக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்படுவதும் வழக்கமான விஷயம். சமீபத் தில் தமிழக மீனவர்களிட மிருந்து கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகளை இலங்கை ஏலத்தில் விடமுயன் றது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத் தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கைக் கடற்படையால் மார்ச் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, கைதான ஒவ்வொருவரையும் விடுவிக்க பிணைத்தொகை யாக ரூ 1 கோடி செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். அது வரை அவர்களை யாழ்ப்பாணம் சிறையிலடைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். பிணையில் விடுவிக்க, மீனவர்களிடம் 1 கோடி கேட்ட விவகாரம், தமிழக அரசியல் கட்சிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் வாங்கியே கடனடைக்க நினைக்கிறாங்களோ!

Advertisment

ந்தோஷ் படேலின் மரணம் கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜுக்கான அமைச்சர் கே.எஸ். ஈஸ்வர

ல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிப்பதும், விசாரணைக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்படுவதும் வழக்கமான விஷயம். சமீபத் தில் தமிழக மீனவர்களிட மிருந்து கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகளை இலங்கை ஏலத்தில் விடமுயன் றது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத் தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கைக் கடற்படையால் மார்ச் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, கைதான ஒவ்வொருவரையும் விடுவிக்க பிணைத்தொகை யாக ரூ 1 கோடி செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். அது வரை அவர்களை யாழ்ப்பாணம் சிறையிலடைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். பிணையில் விடுவிக்க, மீனவர்களிடம் 1 கோடி கேட்ட விவகாரம், தமிழக அரசியல் கட்சிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் வாங்கியே கடனடைக்க நினைக்கிறாங்களோ!

Advertisment

ந்தோஷ் படேலின் மரணம் கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜுக்கான அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை சிக்கலில் தள்ளியுள்ளது. சமீபத்தில் நண்பர்களுடன் உடுப்பி வந்த சந்தோஷ்படேல், லாட்ஜில் வைத்து விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் நண்பர் களுக்கு அனுப்பிய குறுந்தகவ லில் தனது மரணத்துக்கு ஈஸ்வரப்பாதான் காரணம். எனது மனைவி, குழந்தைகளை அவரிடமிருந்து காப்பாற்றுங் கள் என குறிப்பிட்டுள்ளார். தனது கிராமத்துக்காக 4 கோடி ரூபாய் செலவில் சந்தோஷ் படேல் சாலையமைத்தார் எனவும், அதற்கான பில் கிளியரன்ஸுக்கு 40% லஞ்சம் கேட்டு, பணத்தைத் தராமல் இழுத்தடித்ததால் தற்கொலை எனவும் தெரிய வந்துள்ளது. உடுப்பி காவல்நிலையம் வழக்குப் பதிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வழக்குப் பதிந்துள்ளது. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா! கொடூரமப்பா!

Advertisment

பிரேசில் அதிபர் ஜெய்ர்போல் சோனரோ மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். எலியாஸ் வாஸ் எனும் எதிர்க்கட்சி உறுப்பினர் பிரேசில் நாடாளுமன்றத்தில், "மக்கள் வரிப்பணத்தில் ராணுவத்துக்கு 35,000 வயாக்ரா மாத்திரைகள் வாங்கியது ஏன்?''’என கேள்வியெழுப்ப, அதிபர் புரியாமல் விழித்திருக்கிறார். எலியாஸ் தனக்குக் கிடைத்த ஆவணத்தைக் காட்ட, அதில் வயாக்ராவின் பெயர் குறிப் பிடாமல் சில்டனாஃபில் என வயாக்ரா மாத்திரையில் தாராளமாகக் காணப்படும் வேதிப்பொருளின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுதாரித்த அதிபர் தரப்பு, அந்த வேதிப்பொருள் வயாக்ராவில் மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தப் பிரச் சனை உள்ளவர்களுக்கான மருந்திலும் காணப்படும் என விளக்கம் அளித்திருக்கிறது. இருந்தாலும், ஆளும்கட்சி எப்படியோ சமாளித்துவிட் டது,… உண்மையில் வாங்கியது வயாக்ராதான் என பிரச்சா ரம் மேற்கொண்டுவருகிறதாம் எதிர்க்கட்சி! ராணுவம் விறைப்பா இருக்கவேண்டாமா!

வின் நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நியாயவிலைக் கடைகளில் விரைவில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது தமிழக அரசு. தவிரவும், பெரிதும் வளர்ச்சியடையாத பெரம்பலூர், கரூர், செங்கல் பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தி சார்ந்த அமைப்பு களைத் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் பாடலூரில் பால் பவுடர், டெய்ரி ஒயிட்னர், வெண்ணெய் தயாரிக்கும் வசதிகளுடன் ரூ 150 கோடியில் புதிய ஆலை அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. அச்சிறுபாக்கம், கடலூர், திருவண்ணாமலை யில் வெவ்வேறு கொள்ளளவு திறனுள்ள பால் பண்ணையும் சேலம் மாவட்டம் கருமந் துறையில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கும் திட்டமும் உள்ளதாம். அப்ப தமிழ்நாட்டுல பாலாறு ஓடப்போகுதோ!

bb

ராமநவமியை ஒட்டி குஜராத், பீகார், மத்தியபிர தேஷ், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வன்முறைகள் நடந்திருக்கின்றன. சிறுபான்மை யினரின் வீடுகள், கடைகள் மீது கல்வீசப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் வீடுகளும் கடை களும் இடித்துத் தள்ளப்பட்டி ருக்கின்றன. மத்தியப்பிரதேசத் தில் மட்டும் 10 வீடுகள் தீக்கிரையாகியிருக்கிறது. 84 பேர் காயம்பட்டிருக்கின்றனர். காயம்பட்டவர்களில் காவல் அதிகாரிகளும் அடக்கம். குஜராத்தில் இரு சமூகத்தினர் கல்வீச்சு, மோதலில் ஈடுபடும் அளவுக்கு நிலவரம் சீர்கெட்டி ருக்கிறது. பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்டம் முகமதுபூரில் மசூதியொன்றில் காவிக்கொடி ஏற்றப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ராமநவமி மோதல்களில் இதுவரை 2 பேர் இறந்திருக் கின்றனர். சிறுபான்மையினரை நசுக்குவதுதான் ராமராஜ்யமோ?

ff

விண்வெளி நிலையங்களில் தாவரங்களை, காய்கறியை உருவாக்குவதில் ஏற்கெனவே அறிவியல் வெற்றிபெற்றுவிட்டது. இப்போது அதன் அடுத்த இலக்கு விண்வெளியில் இறைச்சியை உருவாக்குவது. அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போவைன் செல்களைப் பெருகச் செய்வதன் மூலம் இறைச்சியை உருவாக்குவது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால், விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு செல்லும் வீரர்கள் தங்களுக்கான உணவை விண்வெளி நிலையங்களிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும். தவிரவும், மக்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான திட்டங்கள் கவனம் பெறும் நிலையில், இந்தச் சுற்றுலாவில் விரைவில் நான்-வெஜ்ஜும் பரிமாறப்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள் புன்னகையுடன். எப்ப சார் பிரியாணி போடுவீங்க?

-நாடோடி

nkn200422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe