சென்னையிலுள்ள 500 பேருந்துகளில் பேனிக் பட்டன் வசதி ஏற்பாடு செய்யப் படவிருக்கிறது. அதென்ன பேனிக் பட்டன் என்கிறீர்களா?… பெண்களிடம் யாராவது பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ, நடத்துநரிடம் தேவையில்லாத வம்பில் ஈடுபட்டாலோ, இந்தப் பட்டனை அழுத்தினால் போதும். இந்த வசதியுள்ள பேருந்துகளில் வீடியோ கேமரா வசதியிருக்கும். பட்டனை அழுத்தியதும் பிரச்சினை செய்பவரின் முகம் படம் பிடிக்கப்படுவதோடு, எம்.டி.சி. தலைமை அலு வலகத்துக்கு தக வலும் போய் விடும். அவர்கள் பேருந்துக்கு அருகி லுள்ள காவல்நிலையத் துக்கு தகவல் தந்துவிடு வார்கள். போலீஸ் வந்து பிரச்சினைக்குரியவரை கவனித்துக்கொள்ளும். பிரச்சினை செய்தவர், தப்பினாலும் அவரது புகைப்படம் இருப்பதால் தேடிப்பிடிக்க முடியும். நிர்பயா நிதித் திட்டத்தின்கீழ் முதலில் 500 பேருந்துகளி லும், விரைவில் 2500 பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட விருக்கிறது. சைனா ஐட்டத்தை வாங்கி வெச்சுடாதீங்க!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/news1_22.jpg)
90-களில் திருமணத்துக்கு புகைப்பட ஏற்பாடு செய்தாலே பெரிய விஷயம்,…வீடியோ பதிவு இருந்தால் ஆடம்பரம். ஆனால் திருமணத்துக்கு சினிமா படப்பிடிப்பைப் போல் ஆறு, மலை, ஏரி, கடற்கரை போய் படப்பிடிப்பு நடத்தி ஆல்பம் தயாரிப்பதுதான் இன்றைய ட்ரெண்ட். இத்தகைய படப்பிடிப்புகளுக்கு லட்சக் கணக்கில் செலவாகும் என்பது தனிக்கதை. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அப்படி யொரு ஜோடி, திருமணமான மறுநாள் ஆற்றின் அருகே போட்டோ ஷூட் நடத்தியது. எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆற்றில் விழ, இருவரும் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் மணமகன் ரெஜின்லால் உயிரிழக்க, மணமகள் கனிகா ஆபத்தான நிலையில் இருக்கிறார். இப்போது போட்டோ ஷூட் செய்த நபரை கேரள போலீஸ் விசாரித்துக்கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டை இழவு வீடாக்கிட்டாங்களே!
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் வாழவே முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு படகில் அளவுக்கதிகமான பயணிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணம் மேற்கொண்டனர். பயணிகளின் பாரம் தாங்காத அந்த படகு, நடுக்கடலில் உடைந்துபோக, படகிலிருந்த வர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர். அந்த வழியாக வந்த அல்ஜீரியா 1 என்ற வர்த்தகக் கப்பல், உடைந்த படகில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 பேரை மட்டும் மீட்டிருக்கிறது. மீட்கப்பட்ட வர்களிடம் கிடைத்த தக வலிலிருந்து இந்த விபத்தில் 90 பேர் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அகதிகள் அவலத்துக்கு முடிவேயில்லையா!
ஐம்பெரும் காப்பி யங்களில் ஒன்றான மணி மேகலை 20 மொழிகளில் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பணியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. மலாய், சீனம், ஜப்பானிஷ், மங்கோலியன், வியட்னாமிஷ், தாய், பர்மிஷ், கொரிய, சிங்கள மொழிகள் முக்கியமாக இவற்றுள் அடங்கும். இந்த மொழி பேசப்படும் நாடுகளில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பௌத்தக் காவியமான மணிமேகலை அவர்களைச் சென்றடைய வேண்டுமென்ற இலக்குடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலக்கிய ஏற்றுமதின்னு சொல்லுங்க!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/news_29.jpg)
சிவசேனா ராஜ்யசபா எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி, மத்திய கல்வி யமைச்சரின் பார்வைக்கு பி.எஸ்சி. இரண்டாமாண்டு பாடத் திட்டத்தில் இடம்பெறும் பாடத்தை டேக் செய்துள்ளார். வரதட்சணையின் நன்மைகள் என்பதுதான் அந்தப் பாடப்பகுதி. டி.கே. இந்திராணி என்பவர் எழுதியுள்ள அந்தப் பாடம், வரதட்சணையால் வீட்டுக்கு வாகனங்கள், ப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கிடைக்கிறது. வரதட்சணை குறையும் என்பதால்தான் பல பெற்றோர் பெண்ணை படிக்க அனுப்புகிறார்கள் என நீள்கிறது. "இதுபோன்ற இழிவான, வெட்கக்கேடான விஷயங்கள் எப்படி பாடத்தில் இடம் பெறலாம்? உடனடியாக இத்தகைய விஷயங் கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப் படவேண்டும்’என்று கல்வித்துறைக்கு கடிதமெழுதியுள்ளார் பிரியங்கா. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் அழகான பெண், ஓரளவுக்கு அழகான, வரதட்சணை தருகிற பெண், நல்ல நடத்தையும் ஸ்டைலான தோற்றமும் உடைய பெண்ணை அடைவதற்கான சாத்தியம் என கணித கேள்வித்தாளில் கேட்டது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாடநூல் குழுவுக்கு மெமோ கொடுங்க!
அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் டேனியல் பிராபி. இவரது மனைவி நான்சி கிராம்ப்டன் பிராபி ஒரு எழுத்தாளர். 2011-ல் இவர் எழுதிய, "உங்களது கணவரைக் கொல்வது எப்படி?'’என்கிற கட்டுரை பரவலான கவனத்தைப் பெற்றது. இப்போது இவர் மீது கணவரைக் கொன்றதாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸின் சந்தேகம் அவர்மேல் திரும்பியிருப்பது, வெறுமனே கட்டுரை எழுதியதற்காக மட்டு மல்ல,…கணவர் மேல் 1.5 மில்லியன் டாலர்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்ததாலும்தான். இன்சூரன்ஸ் பணத்துக்காக டேனியலைக் கொலை செய்துவிட்டார் என்பது போலீஸின் சந்தேகம். அப்படியொரு கட்டுரையை எழுதியதற்காக நிச்சயம் இப்போது நான்சி வருத்தப்பட்டிருப்பார். கொலையும் செய்வாள் பத்தினி!
-நாடோடி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/news-t_1.jpg)