Advertisment

மாநிலம்- தேசம் -சர்வதேசம்!

f

ளையராஜாவின் விருதுப் பட்டியலில் இன்னொரு விருது சேர்ந் திருக்கிறது. லண்டனிலிருந்து இந்தியா வரும் ஒரு காதல் ஜோடி பற்றிய கதை "எ பியூட்டிபில் பிரேக்அப்'. கன்னட இயக்குநரான அஜித் வாசன் இயக்கிய இப்படத்துக்கு இசை இளையராஜா.

Advertisment

ee

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விருது விழா வரை எட்டிய இப்படத்தின் பின்னணி இசை விருதுக் குழுவினரை ஈர்த்துள் ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருது வாங்கிய இப்படம், இளையராஜா வின் 1422-வது படமாம். படத் தயாரிப் பாளரான சர் மார்கோ ராபின்சன், இந்தத் தகவலை ட்விட்டரில் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டதுடன், உண்மையிலே சிறந்த இசை என பாராட்டவும் செய் திருக்கிறார். இளையராஜாவோட திறமைக்கு இன்னும் நரை விழலை!

Advertisment

ff

மீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா- நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை பகுதியளவுக்கு விலக்கியிருப்பதாக அறிவித்தா

ளையராஜாவின் விருதுப் பட்டியலில் இன்னொரு விருது சேர்ந் திருக்கிறது. லண்டனிலிருந்து இந்தியா வரும் ஒரு காதல் ஜோடி பற்றிய கதை "எ பியூட்டிபில் பிரேக்அப்'. கன்னட இயக்குநரான அஜித் வாசன் இயக்கிய இப்படத்துக்கு இசை இளையராஜா.

Advertisment

ee

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விருது விழா வரை எட்டிய இப்படத்தின் பின்னணி இசை விருதுக் குழுவினரை ஈர்த்துள் ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருது வாங்கிய இப்படம், இளையராஜா வின் 1422-வது படமாம். படத் தயாரிப் பாளரான சர் மார்கோ ராபின்சன், இந்தத் தகவலை ட்விட்டரில் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டதுடன், உண்மையிலே சிறந்த இசை என பாராட்டவும் செய் திருக்கிறார். இளையராஜாவோட திறமைக்கு இன்னும் நரை விழலை!

Advertisment

ff

மீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா- நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை பகுதியளவுக்கு விலக்கியிருப்பதாக அறிவித்தார். இதற்கு இரோம் ஷர்மிளா அதிருப்தி தெரிவித்துள்ளார். "தேர்ந் தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டும் ஆயுதப் படைச் சட்டம் திரும்பப்பெறப் பட்டிருப்பது அதிருப்தியளிக்கிறது. ஆயுதப் படை வீரர்கள் இதுவரை 1,528 போலி என்கவுண்டர்களை மேற் கொண்டு மக்களைக் கொன்றிருக் கின்றனர். இது மக்களை ஏமாற்று வதற்கான முயற்சியாகும். சட்டத்தை முழுமையாக நீக்குவது மட்டுமே பலனளிக்கும்'' என்றிருக்கிறார். தற் சமயம் ஷர்மிளா, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்துவருகிறார். விலக்குவாங்க ளானு தெரியாது. விளக்கவேணா செய்வாங்க!

gg

லிபான் அரசு ஓபியம் எனும் கசகசா செடி பயிரிட தடைவிதித்துள்ளது. விவசாயிகள் ஓபியம் பயிரிடு வதைக் கண்டால், பயிர் எரிக்கப் படுவதோடு, பயிரிட்டவர் சிறையிலும் அடைக்கப்படுவார் என எச்சரித்துள் ளது. கடந்த முறை தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோதும் பாப்பிமீது தடைவிதிக்கப்பட்டது. ஆப்கன் விவசாயிகள் ஏன் ஓபியம் பயிரிடுகின்றனர்? கோதுமை பயிரிட்டால், அதை சந்தைக் குக் கொண்டுசெல்ல நல்ல சாலை கிடையாது. பெரும் பகுதி கோதுமை வீணாகி அழிவதுதான் நடக்கும். மாறாக போதைப்பொருளான பாப்பிக்கு நல்ல மார்க்கெட். சரி, இடையில் அமெரிக்காவின் துணையோடு முறையான அரசு அமைந்தபோது தலிபான்கள் என்ன செய்தனர். இந்த பாப்பி வியாபாரத்தில் பங்கு பெற்றுத் தான், ஆயுதக் கொள்முதல் செய்தனர். முன்பு இனித்தது... இப்போது கசந்து விட்டது! நல்லா இருக்குங்க சார் உங்க நியாயம்?

bb

கிப்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் சமீபத்தில் நடந்தது. இதில் டேபிள் டென்னிஸ் ஒற்றையருக்கான பிரிவில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று, ஈராக்கின் ரசுவல் அல் வேலியுடன் மோதினார். 11-16, 13-11, 13-11 என்ற கணக்கில் போட்டியில் முன்னிலை பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இவர் டோக்கியோவின் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் தின் மேஷானா மாவட்டம் வத் நகர் பகுதியைச் சேர்ந்த பவினா, பல்வேறு சர்வதேச, தேசிய விருதுகளையும் வென்றவர். உள்ளத்தனையது உயர்வு!

ஞ்சாப், அரியானா மாநிலங்கள் இரண்டானாலும் இரண்டுக்கும் தலைநகரம் சண்டிகர்தான். இரண்டு மாநிலங்களிலுமே சீக்கியர்கள் கணிசமாகக் காணப்படுகின்றனர். ஆனால் பஞ்சாப்பில் இப்போது ஆம் ஆத்மியும், அரியானாவில் பா.ஜ.க.வும் ஆட்சிசெய்கின்றன. இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கும் சண்டிகர் யூனியன் பிர தேசமாக உள்ளது. பஞ்சாப்பின் அரசு ஊழியர்கள் மாநில அரசு சேவை விதிகளின்கீழ் செயல்படுகின்றனர். ஆனால் சண்டிகர் யூனியன் பிரதேசம் என காரணம் காட்டப்பட்டு, அங்கு மத்திய சேவை விதிகள் பயன் பாட்டுக்கு வரும் என அறிவித்திருக் கிறார் அமித்ஷா. இது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என கண்டிக்கும் பகவந்த் மான், சண்டிகரை முழுமையாக பஞ்சாப்புக்கு மாற்றவேண்டும் என பஞ்சாப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். டில்லிலதான் இடைஞ்சல்னா பஞ்சாப்லயுமா?

ருத்துவமனைகளுக்கு வருகை தரும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை அவர்களது இடத்திலிருந்தே ஏற்றிச்சென்று திரும்ப அவர்களது வீட்டில் விடுவதற்கு 102 என்ற எண்ணுக்கு அழைக்கவேண்டும். இந்தச் சேவையை தமிழக சுகாதார அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து 2017 முதலே செய்து வருகின்றன. தற்போது இந்தச் சேவை 108 என்ற எண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சேவை மூலம் மருத்துவ மனைகளுக்கு வருகை தரும் 30 சதவிகித தாய்மார்கள் பயன் பெற்று வந்தனர். அது தற்சமயம் 54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதனாலேயே இந்த சேவை எண் மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். உள்ளடங்கிய, போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் இருந்து வருவோருக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம். முன்போலவே 102 எண்ணிலும் அழைக்கலாமாம். தாய்மார்களே நோட் பண்ணிக்கங்க.

-நாடோடி

nkn090422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe