புதுச்சேரி சட்டசபை யில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்டதுடன், கோரிக்கை ஏற்கப்படாததால் வெளி நடப்பும் செய்திருக்கின்றனர். தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை கவர்னர் நிராகரித்த நிலையில், மீண்டும் சட்டசபையைக் கூட்டி மசோதாவைப் புறக்கணித்த ஆளுநரைக் கண்டித்ததுடன் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினர். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாணவர்களும் நீட் தேர்வால் பாதிக்கப் படுவதால் புதுச்சேரி சட்டசபையிலும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரான சிவாவாதம் செய்தார். மாநில அந்தஸ்து, நீட் விலக்கு மசோதா கோஷத்து டன் சபாநாயகர் செல்வத் தின் இருக்கையை நோக்கி முன்னேறினர். காவலர்கள் தடுத்த நிலையில், தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். எதிர்ப்பை பதிவுசெய்யத் தானே எதிர்க்கட்சி!
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது மகாராஷ்டிரத்தை அதிர வைத்துள்ளது. இது குறித்து விசாரித்துவந்த அமலாக்கத்துறை, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நவாப் மாலிக்கிடம் 8 மணி நேர விசாரணை மேற்கொண்டது. அதில் சில கேள்வி களுக்கு நவாப் மாலிக் பதிலளிக்க மறுத்தநிலையில்... அவர் கைது செய்யப் பட்டுள்ளார். “"பழைய விவகாரங்கள் தோண்டப்படு கிறன்றன. 2024-க்குப் பிறகு நீங்களும் விசாரணைக்கு உட்படுவீர்கள்'’என்றார் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத். நவாப் மாலிக்கை பதவி நீக்க மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் வலியுறுத்த, "தந்திர மான முறையில் நவாப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பதவி விலக வலியுறுத்தமாட்டோம்'’என சஞ்சய் ரௌத் பதிலளித்துள்ளார். மத்திய -மாநில அதிகார யுத்தம்!
அமெரிக்காவில் பிரபலங் கள் சுயசரிதை எழுதினால் நூலாக வெளியிடுவதற்கு பெரிய போட்டியிருக்கும். நாயகிகள், மாடல் அழகிகள் இவர்களின் சுயசரிதை என்றில்லை, கர்ப்பகால புகைப்படம், பிறந்த குழந்தையுடனான முதல் புகைப்படம், கவர்ச்சிப் படம் என வகை வாரியாய் பிரித்து பிரபலத்துக்கு ஏற்ப ஊடக, பதிப்புத் துறையினர் அள்ளித் தருவார்கள். ஒருகாலத்தில் அமெரிக்காவை தனது பாப் பாடல்களால் கிறங்கடித்த பிரபல பாடகி பிரிட்னி பியர்ஸ், தனது வாழ்க்கை அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட உள்ளார். கிட்டத்தட்ட 15 மில்லி யன் டாலர் தருவதாகச் சொல்லி, இதற்கான அனுமதியை "சைமன் அண்ட் ஸ்கஸ்டர்' பதிப்ப கம் தட்டிச் சென்றுள்ளது. இந்திய மதிப்புக்கு மாற்றினால் கிட்டத்தட்ட 112 கோடி. அமெரிக்காவுல செட்டிலா கிட்டுதான் சுயசரிதை எழுதணும்!
உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை, சென்னை யைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா 39 நகர்வுகளில் வீழ்த்தியிருப்பது புதிய சாதனையாகப் பார்க்கப்படு கிறது. சகோதரி வைஷாலியுடன் பொழுதுபோக்காக ஆடத் தொடங்கிய அவர், 2015-ல் 10 வயதுக்குட்பட்ட இளம் வயதினருக்கான செஸ் சாம்பியனாக உருவெடுத்தார். இணையம் வழியாக நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலகின் வியப்புப் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரக்ஞானந்தாவை மென் மேலும் வெற்றிகள் குவிக்கச் சொல்லி வாழ்த்தி உற்சாகப் படுத்தியுள்ளார். இன்னும் ஏழு சுற்றுகள் கொண்ட இப் போட்டியில் வென் றால் பிரக்ஞானந்தாவுக்கு மகத்தான எதிர்காலம் அமையும். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!
"இந்த வருடத்துக்கான பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சிக்கு வரி உண்டு -சட்ட ரீதியான அனுமதி கிடையாது' என புதுமையான அணுகு முறையை மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந் தார். இப்போது இன்னும் ஒருபடி மேலேபோய், முதலீட்டாளர்கள் அறிந்துகொள்ளும் வகை யில் "சிகரெட் உடல் நலத்துக்கு கேடு'ன்னு… பாக்கெட்ல போடற மாதிரி கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களில் "ஒழுங்காற்று அமைப்புகளால் அங்கீகரிக்கப் படாத முதலீடு' என்ற வாசகத்தை கட்டாயம் இடம் பெறச் செய்ய வேண்டுமென இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட கிரிப்டோ கரன்சிக்கு 30 சதவிகித விரி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர் காலத்தில் லாபம் அதிகரிக்கும் என்ற வகையில் விளம்பரம் இருக்கக் கூடாது எனவும் இவ் வமைப்பு தெரிவித்துள்ளது. வரி அரசுக்கு...… வலி முதலீட் டாளர்களுக்கு!
கொரோனா நோய்த் தொற்றும் ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகமும் சேர்ந்து இலங்கையை மிக மோசமான நிதிநெருக்கடி யில் கொண்டுசென்று நிறுத்தி யுள்ளது. சமையல் எரிவாயு, பால் பவுடர், பெட்ரோல் என பலவற்றுக்கும் நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு புதிதாக மின்சாரத் தட்டுப்பாடும் சேர்ந்துள்ளது. பிரதான நகர்களில் மணிக்கணக்கில் மின்வெட்டு நிலவுகிறது. பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள் ளன. திறந்திருக்கும் பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோலுக்கு நீண்ட வரிசை. உள்ளடங்கிய பகுதிகளில் அரைநாள், முக்கால் நாளுக்கு மின்தடை நிலவுகிறது. ஈழத் தமிழர்களை அயலவர் களாகக் கருதி இன ஒழிப்பு அரசியலிலும் போரிலும் ஈடுபடாமல் இருந்திருந் தால், இலங்கையின் தலையில் இத்தனை கடன் இருந்திருக் காது என்ற குரல் இப்போது எழுகிறது. இதுதான் கெட்ட பின்பு வரும் ஞானம்!
-நாடோடி