ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை! அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆவேசம்!

ss

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பேரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதியை முறியடிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின்.

பிரதான எதிர்க்கட்சி யான அ.தி.மு.க. தொடங்கி, கடந்த வருடம் புதிதாகத் தொடங்கிய நடிகர் விஜய்யின் த.வெ.க. உள்பட 63 கட்சி களுக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகளைத் தவிர 58 கட்சிகள் கலந்துகொண்டன.

ss

அனைத்துகட்சிக் கூட்டத்துக்கு தலைமை யேற்று தொடக்க உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொகுதி மறுசீரமைப்பு என்கிற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமை யாக பாதிக்கும். தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளு மன்றத் தொகுதிகளை குறைக்கின்ற அபாயம் நெருங்குகிறது. இந்த தொகுதிகளின் எண்ணிக்கை யை மறு சீரமைப்பு செய்ய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்போகிறார்கள். ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற இந்திய நாட்டின் இலக்கை, பல 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சாதித்திருப்பதால், மக்கள் தொகை குறைவாக இருப்பதை வைத்து கணக்கிடும் போது, தமிழ்நாடு 8 தொகுதிகளை இழந்து 31 தொகுதிகளை மட்டுமே பெறும். அதாவது, தமிழ் நாட்டில் தற்போதுள்ள 39 எம்.பி.க்களில் 31 எம்.பி.கள் தான் இருப்பார்கள்.

அதேசமயம், மக்களவையின் தற்போதைய எண்ணிக்கையான 543-யை உயர்த்தி 848 ஆக அதிகரிக்கச் செய்தால், தமிழ்நாட்டிற்கான தற்போ தைய விகிதாச்சாரத்தின்படி (7.18%) நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்கவேண்டும். ஆனால், மக்கள் தொகையை கணக்கிட்டு ஒதுக்கீடு செய்தால் நமக்கு 10 தொகுதிகள்தான் கூடுதல

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பேரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதியை முறியடிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின்.

பிரதான எதிர்க்கட்சி யான அ.தி.மு.க. தொடங்கி, கடந்த வருடம் புதிதாகத் தொடங்கிய நடிகர் விஜய்யின் த.வெ.க. உள்பட 63 கட்சி களுக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகளைத் தவிர 58 கட்சிகள் கலந்துகொண்டன.

ss

அனைத்துகட்சிக் கூட்டத்துக்கு தலைமை யேற்று தொடக்க உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொகுதி மறுசீரமைப்பு என்கிற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமை யாக பாதிக்கும். தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளு மன்றத் தொகுதிகளை குறைக்கின்ற அபாயம் நெருங்குகிறது. இந்த தொகுதிகளின் எண்ணிக்கை யை மறு சீரமைப்பு செய்ய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்போகிறார்கள். ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற இந்திய நாட்டின் இலக்கை, பல 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சாதித்திருப்பதால், மக்கள் தொகை குறைவாக இருப்பதை வைத்து கணக்கிடும் போது, தமிழ்நாடு 8 தொகுதிகளை இழந்து 31 தொகுதிகளை மட்டுமே பெறும். அதாவது, தமிழ் நாட்டில் தற்போதுள்ள 39 எம்.பி.க்களில் 31 எம்.பி.கள் தான் இருப்பார்கள்.

அதேசமயம், மக்களவையின் தற்போதைய எண்ணிக்கையான 543-யை உயர்த்தி 848 ஆக அதிகரிக்கச் செய்தால், தமிழ்நாட்டிற்கான தற்போ தைய விகிதாச்சாரத்தின்படி (7.18%) நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்கவேண்டும். ஆனால், மக்கள் தொகையை கணக்கிட்டு ஒதுக்கீடு செய்தால் நமக்கு 10 தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். 12 தொகுதிகளை நாம் இழப்போம். இது, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி.

இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக் கையை சார்ந்த கவலை இல்லை; நம் தமிழ்நாட் டின் உரிமை சார்ந்த கவலை. தமிழ்நாடு எதிர் கொள்ளும் இந்த பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு சதியை நாம் முறியடித்தாக வேண்டும். மக்கள் தொகை கட்டுப் பாடு கொள்கையைக் கடைபிடித்த தென் மாநி லங்களுக்கு தரப்படும் தண்டனைதான் தொகுதி மறு சீரமைப்பு. இது, தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடித் தாக்குதல். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு எனும் அநீதியை நாம் அழுத்தமாக, ஒரே சிந்தனையுடன் எதிர்க்க வேண்டும். இதற்காக உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்று வோம்''’என்று தனது உரையை முடித்தார்.

aa

இதனைத் தொடர்ந்து, "மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சிக் கூட்டம் கடுமையாக எதிர்க் கிறது. கடந்த 2000ல் அன்றைய பிரதமர் உறுதி யளித்தவாறு, தற்போதும் இந்த வரையறையை 2026-லிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படும் என்கிற உறுதியை நாடாளுமன்றத்தில் பிரதமர் அளிக்க வேண்டும். மாநிலங்களுக் கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண் ணிக்கை இருக்கிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளை உயர்த்துவதற்கான சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக சமூக -பொருளா தார நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி யதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டின் இந்த கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டங் களையும் முன்னெடுக்க தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நட வடிக்கைக் குழு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங் கள் முதல்வர் ஸ்டாலினால் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசினர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: இந்த கூட்டத்திற்கு சில கட்சிகள் வரவில்லை. வராத அந்த கட்சிகள், தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்பதை உணரவேண்டும். தமிழ்நாட்டில் தொகுதிகள் குறைக்கப்படாது என்று பா.ஜ.க.வினர் சொல்கின் றனர். அவர்கள் எப்போதும் பாதியை மறைப்பார்கள்; மீதியை மறுப்பார்கள்.

அ.தி.மு.க. ஜெயக்குமார்: முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை அ.தி.மு.க. முழுமனதாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய நாடாளுமன்ற எண்ணிக்கையின் பிரதிநிதித்துவமான 7.18 சதவீதத்தை எந்த வகையிலும் குறைக்க நாம் அனுமதிக்கக்கூடாது. இதனை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். ஒற்றுமையாக நாம் இருந்து தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்துவோம்.

பா.ம.க. அன்புமணி: பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் அவசர மும், அவசியமுமாகும். மக்கள்தொகை அடிப்படை யில் தொகுதிகள் எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பதற்கு பல கணக்குகள் உள்ளன. இந்தியாவில் தென் மாநிலங்கள் தான் மக்கள்தொகையை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தின. தென் மாநிலங்கள்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன. அதற்கு தண்டனை அளிக்கும் வகையில் தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20% தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

aa

ம.தி.மு.க. வைகோ: தமிழ்நாட்டின் உரிமை களைப் பறித்து தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வும் அதன் ஏஜெண்டுகளும் தமிழ்நாட்டின் பகைவர்கள். தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதன் சதியை உடைக்க, முதல்வர் தலைமையில் ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒன்றாய் இணைந்து எழுச்சி யுடன் போராடும். நமது உரிமைப் போராட்டம் வெல்லும். நமது உரிமைப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிகளும் மிகப் பொறுப்புடன் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை வி.சி.க. வரவேற்கிறது. அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் வி.சி.க. முழு ஆதரவளிக்கும். தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கத் திட்டமிடுகிறார்கள். அப்படிப்பட்ட நடவடிக்கை இருக்கக்கூடாது.

காங்கிரஸ் செல்வப்பெருந்தகை : தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அமித்ஷா சொல்கிறார். ஆனால், வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயராது என அவரால் சொல்ல முடியவில்லை. இதிலிருந்தே… தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சூழ்ச்சிகள் நடக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த சூழ்ச்சிகள் வெற்றிபெற்றால் அது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. அதனை முறியடிக்க, தென்னிந்தியாவின் முதல் குரலாக முதல்வரின் குரல் எழுந்துள்ளது.

சி.பி.எம். சண்முகம்: தொகுதி மறுசீரமைப்பு அகில இந்திய பிரச்சனை. தொகுதிகளின் எண்ணிக் கையை உயர்த்துகின்றபோது எந்த மாநிலத்திலும் அதன் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதிக்கக் கூடாது. சமச்சீராக உயர்த்தப்பட வேண்டும். கூட்டுக்குழு அமைத்து பிரச்சனையை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல முயற்சிப்பது ஆரோக்கியமான யோசனை.

சி.பி.ஐ. முத்தரசன்: ஒன் றிய அரசின் திட்டம் மர்மமாக உள்ளது. அதனை முதல்வர் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் வெளிப்படுத்தியிருக் கிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய தமிழகத்திற்கு தண்டனை கொடுக்கும் ஒன்றிய அரசை நாமெல்லாம் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன்: கொள்கை முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக நாமெல்லாம் ஒன்றுபட்டுள் ளோம். அதற்கு பாராட்டுகள். வருமுன் காப்போம் என்பதுபோல இந்த தேசத்தை சூளும் ஆபத்தை உணர்ந்து நாம் கூடியிருக்கிறோம். மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, எம்.பி.க்களின் தற்போதுள்ள எண்ணிக்கையை மாற்றவேண்டிய அவசியம் இல்லை.

த.வெ.க. புஸ்ஸி ஆனந்த்: தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். மறுசீரமைப்பு தேவையற்றது. தற்போதுள்ள எண்ணிக்கையே தொடரவேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்றுப் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார் கூட்டம் முடிந்ததும், அனைத்துக் கட்சி கூட்டமும், தீர்மானங்களும் கண்துடைப்பு என நேர்மாறாகப் பேசினார். அதேசமயம் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திய நாதன், ஜெயக்குமாரின் பேச்சை உடனுக்குடன் ஊடகங்களில் ஒளிபரப்பியதால் ஜெயக்குமாரின் முரணான பேச்சு மக்களிடம் அம்பலமாகியுள்ளது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி தென் மாநிலங்களிலுள்ள எம்.பி.க்களை கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைக்க, அந்தந்த மாநில கட்சிகளின் தலைவர் களிடம் நேரில் சென்று பேசுவதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது தி.மு.க. தலைமை. கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டதும் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களையும் ஜனாதிபதியிடம் வழங்கி, தொகுதி மறு சீரமைப்பில் எந்த கோணத் திலும் தென் மாநிலங்கள் பாதிக்கக்கூடாது என்று வலியுறுத்த திட்டமிட் டுள்ளது தி.மு.க. அரசு.

nkn080325
இதையும் படியுங்கள்
Subscribe