கடந்த 11 வாரங்களாக காஸா பகுதியில் எந்த சர்வதேச உதவியும் வந்தடைய முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இன்னும் 48 மணி நேரத்துக்கு இதே நிலை நீடித்தால் காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் என எச்சரித்துள்ளார் ஐ.நா. மனிதாபிமான பிரிவுத் தலைவர் டாம் பிளெட்சர்.
2023-ல் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலுக்குள் அதிரடித் தாக்குதல் நடத்தி இஸ் ரேலியர்கள் நூற்றுக்கணக்கான பேரை பணயக் கைதிகளாக இட்டுச்சென்றனர். முதலில் ஹமா ஸின் வெற்றிகரமான நகர்வாக இது பார்க்கப்பட் டாலும், பின் பாலஸ்தீனியர் கள் வசிக்கும் பகுதிகளை ஏவு கணைகளாலும் குண்டுகளா லும் சல்லடைகளாக இஸ்ரேல் துளைக்க வழிவகுத்தது. லட்சக் கணக்கான மக்கள் போர் முனையைவிட்டு வெளியேறி உயிருக்குப் பயந்து வாழவேண் டிய நிலை உருவானது.
பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கிறோம், சுரங்கங்களை உடைக்கிறோம் என பாலஸ்தீனப் பகுதியில் ஒரேயொரு மருத்துவமனை கூட எஞ்சாமல் அனைத்தை யும் நொறுக்கித்தள்ளியது இஸ்ரேல். அமெரிக்க அதிபர் தேர்தலையடுத்து வந்த ட்ரம்ப், தீவிர நடவடிக்கை இருக்கு மென ஹமாஸ் போராளிகளை எச்சரித்த நிலையில் பணயக் கைதிகளை ஒப்ப
கடந்த 11 வாரங்களாக காஸா பகுதியில் எந்த சர்வதேச உதவியும் வந்தடைய முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இன்னும் 48 மணி நேரத்துக்கு இதே நிலை நீடித்தால் காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் என எச்சரித்துள்ளார் ஐ.நா. மனிதாபிமான பிரிவுத் தலைவர் டாம் பிளெட்சர்.
2023-ல் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலுக்குள் அதிரடித் தாக்குதல் நடத்தி இஸ் ரேலியர்கள் நூற்றுக்கணக்கான பேரை பணயக் கைதிகளாக இட்டுச்சென்றனர். முதலில் ஹமா ஸின் வெற்றிகரமான நகர்வாக இது பார்க்கப்பட் டாலும், பின் பாலஸ்தீனியர் கள் வசிக்கும் பகுதிகளை ஏவு கணைகளாலும் குண்டுகளா லும் சல்லடைகளாக இஸ்ரேல் துளைக்க வழிவகுத்தது. லட்சக் கணக்கான மக்கள் போர் முனையைவிட்டு வெளியேறி உயிருக்குப் பயந்து வாழவேண் டிய நிலை உருவானது.
பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கிறோம், சுரங்கங்களை உடைக்கிறோம் என பாலஸ்தீனப் பகுதியில் ஒரேயொரு மருத்துவமனை கூட எஞ்சாமல் அனைத்தை யும் நொறுக்கித்தள்ளியது இஸ்ரேல். அமெரிக்க அதிபர் தேர்தலையடுத்து வந்த ட்ரம்ப், தீவிர நடவடிக்கை இருக்கு மென ஹமாஸ் போராளிகளை எச்சரித்த நிலையில் பணயக் கைதிகளை ஒப்படைத்து போர்நிறுத்தத்துக்கு முன்வந்த னர் ஹமாஸ் அமைப்பினர். இதையடுத்து நிலவரம் மாறும். சமாதானம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
காஸா உள்ளிட்ட பாலஸ் தீனப் பகுதிகளுக்குத் திரும்பிய பாலஸ்தீனர்கள், போர் இடி பாடுகளுக்கு நடுவே தங்கள் இயல்புவாழ்க்கை திரும்பு மென்ற கனவிலிருந்தனர். பாலஸ்தீனர்களுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து உதவிகள் குவியத்தொடங் கியது. இஸ்ரேல் தன் இன்னொரு கோரமுகத் தைக் காட்டியது.
காஸா பகுதிகளுக்குத் திரும்பியவர் களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு காஸா ஹியுமனிட்டேரியன் அமைப்பு பொறுப்பில் அமர்த்தப்பட்டது. இது இஸ்ரேல்- அமெரிக்க ஆதரவு அமைப் பாகும். இந்த அமைப்பும் இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீனர்களுக்கு வந்த உதவிகளை அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தடைபோடும் வேலைகளைச் செய்துவருகின்றனர். மருந்து, உணவு, உடை இவையெதுவும் தேவையான அளவில் கிடைக்கவில்லை. அதாவது வந்த உதவிகளில் 93% மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அல்லது திருப்பியனுப்பப்படுகிறது.
இதற்கு இஸ்ரேல் என்ன காரணங்கள் சொல்கிறது?
வருகிற உதவிகளில் பெரும்பகுதி ஹமாஸ் போராளிகளுக் குச் செல்கிறது. அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொண்டு தாக்குதலில் இறங்குவார்கள். உண்மையில், இந்த உணவில் மிகப் பெரும்பகுதி பாலஸ்தீனிய மக்களுக்கே வழங்கப்படுகிறது.
தோராயமாகக் கணக்கிட்டாலும் சண்டை தொடங்கியது முதல் 53,475 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். போரில் ஏற்பட்ட காயங்கள், உரிய மருந்து கிடைக்காமல் உயிரிழந்தவர் கள் மட்டும் 2,200 பேர். போர் நிறுத்தத்துக்குப் பின்பான இஸ்ரேலின் தாக்குதலில் மட்டும் 1,563 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
"காஸா மக்களுக்கு உதவ வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைகளால் நாங்கள் கவலைகொண்டுள்ளோம், பாரபட்சமற்ற தன்மை, மனிதாபிமானம், சுதந்திரம் ஆகிய அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளுக்கு இசைவான முறையில் உதவிகள் கிடைப்பதை இது அனுமதிக்காது என்று நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்'' என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஒஈதஈ) அறிக்கை தெரிவித்துள்ளது.
பதினோரு மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகள் கையெழுத்திட்டு காஸா ஹியுமனிட்டேரியன் அமைப் பின் நடைமுறைகளை விமர்சித்துள்ளன. கிட்டத்தட்ட சிறுவர்களும் குழந்தைகளுமாக 70,000 பேர் உடல்நலிந்து போஷாக்கின்றி காணப்படுவதாக எச்சரிக்கைகள் எழுந் துள்ளன. காஸாவின் வடபகுதியிலுள்ள பாலஸ்தீனர்களை உணவுக்காகவும் உதவிக்காகவும் வழியின்றி தெற்குநோக்கி இடம்பெயரவைப்பதே இஸ்ரேலின் திட்டமென கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
திட்டமிட்டு ஒரு பஞ்சம் உருவாக்கப்பட்டு, அதில் பாலஸ்தீனர்களை ஒடுக்கும் அணுகுமுறையைக் கையாள்வதாகவும், இதுவே பெரிய போர்க்குற்றம் எனவும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கெதிராக பிரிட்டன், பிரான்ஸ், கனடா நாடுகள் உள்ளிட்ட 70-க்கும் அதிகமான நாடுகள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளன. முதல் நாடாக பிரிட்டன், இஸ்ரேலுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை முழுவதையும் நிறுத்திவைத்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடி அடுத்து என்ன செய்வதென ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 20 பேர் அடங்கிய தூதுக் குழுவினர் பாலஸ்தீனர்களின் நிலையைப் பார்வையிட வந்தபோது, அவர்களுக்கு நெருக்கமாகவே இஸ்ரேல் படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து நாடுகள் கண்டித்துள்ளன.
வெளிநாடுகள் கொடுக்கும் அழுத்தத்தால் தங்களது போர் வியூகங்கள் மாறாது என அந்நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலின் வலது கையாகப் பார்க்கப்படும் அமெரிக்காவும் இஸ்ரேலின் அணுகுமுறையால் சலிப்படைந்துவிட்டதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உலக நாடுகளின் கோபத்தைத் தணிவிப்பதற்காக சொல்லப்பட்ட அறிக்கையே அன்றி, அது அமெரிக்காவின் உண்மையான கோபமல்ல என சர்வதேச அரசியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரில் பாதிக்கப்பட்ட காஸாவுக்கு, சுத்தமான குடிநீர்கூட இஸ்ரேலிலிருந்துதான் போகிறது. மொத்தம் மூன்று குடிநீர் விநியோகக் குழாயில் ஒன்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் குழந்தைகள் உட்பட 10 லட்சம் பாலஸ்தீனர்களை தண்ணீருக்குக்கூட தவிக்கவிடுவதே இஸ்ரேலின் நோக்கம் என்ற கோபக் குரல்கள் எழுந்துள்ளன. இஸ்ரேல் எதிர்க்கட்சிகளும் நெதன்யாகுவை, ஹாபிக்காக பேபிக்களைக் கொல்லக்கூடாதென விமர்சித் துள்ளன.
சர்வாதிகாரத்தின் கொடுங்கரத் தால் பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் யூதர்கள். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனர்களை அந்த இடத்துக்கு மாற்றி, ஹிட்லரைப் பின்னுக்குத் தள்ள ஆசைப்படு கிறார்போல!