Advertisment

ஸ்டார் ஹோட்டல் பார் ரத்து! சர்ச்சையும் வில்லங்கமும்!

dd

சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பார் உரிமம் (லைசன்ஸ்) ரத்து செய்துள்ள விவகாரம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணிகளை விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள்!

Advertisment

தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், தமிழகத்தில் உள்ள வெளி நாட்டினரையும் கவர்வதற்காகவும், வருவாயைப் பெருக்கவும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார் (மதுக்கூடம்) வைத்துக் கொள்ளவும், அதில் மதுபானங்களை பரிமாறவும் எஃப்.எல்.-3 உரிமம் வழங்கப்படுகிறது.

bar

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மூலம் வழங்கப்படும் இந்த உரிமத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்குரிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வசூலிக் கப்படுகின்றன. தற்போது, 5 நட்சத்திர ஹோட்டல்களில் எஃப்.எல்-3 பார் உரிமம் பெற வருடத்துக்கு 25 லட்சம் ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. இதுவே 24 மணி நேரமும் பார் இயங்க அனுமதிக்க 50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது தவிர விண்ணப்பக் கட்டணம் தனி. இந்த எஃப்.எல்-3 பார் உரிமம் பெற்று சென்னையிலுள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் மதுக்கூடங்கள் (பார்) இயங்கி வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், ஹையாத் ரீஜென்சி, தி பார்க், ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஆகிய 5 த

சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பார் உரிமம் (லைசன்ஸ்) ரத்து செய்துள்ள விவகாரம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணிகளை விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள்!

Advertisment

தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், தமிழகத்தில் உள்ள வெளி நாட்டினரையும் கவர்வதற்காகவும், வருவாயைப் பெருக்கவும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார் (மதுக்கூடம்) வைத்துக் கொள்ளவும், அதில் மதுபானங்களை பரிமாறவும் எஃப்.எல்.-3 உரிமம் வழங்கப்படுகிறது.

bar

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மூலம் வழங்கப்படும் இந்த உரிமத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்குரிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வசூலிக் கப்படுகின்றன. தற்போது, 5 நட்சத்திர ஹோட்டல்களில் எஃப்.எல்-3 பார் உரிமம் பெற வருடத்துக்கு 25 லட்சம் ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. இதுவே 24 மணி நேரமும் பார் இயங்க அனுமதிக்க 50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது தவிர விண்ணப்பக் கட்டணம் தனி. இந்த எஃப்.எல்-3 பார் உரிமம் பெற்று சென்னையிலுள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் மதுக்கூடங்கள் (பார்) இயங்கி வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், ஹையாத் ரீஜென்சி, தி பார்க், ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஆகிய 5 தனியார் ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமத்தை ரத்து செய்வதாக அதிரடி காட்டியிருக்கிறார் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் கார்த்திகா ஐ.ஏ.எஸ்.

அவரது உத்தரவில், சட்ட விதிகளுக்கு மாறாக, வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட விபரங்கள் தெரிய வந்தன. அதனால், மேற்கண்ட 5 தனியார் ஸ்டார் ஹோட்டல்களுக்கு வழங்கப் பட்டிருந்த எஃப்.எல்.-3 லைசன்ஸை தற்காலிகமாக ரத்து செய்தும், மதுபானக் கூடங்களை (பார்) உடனடியாக மூடவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

bb

இந்த உத்தரவு பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "ஸ்டார் ஹோட்டல்களில் தங்குபவர்கள் ஹோட்டலில் உள்ள பார்களை பயன்படுத்தலாம். அதுவும் அதிகபட்சம் 50 நபர்கள் பாரில் இருக்கலாம். அதேசமயம், வெளிநபர்கள் இந்த பார்களுக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால், பெரும்பாலான ஸ்டார் ஹோட்டல்களில் இந்த விதிகள் மீறப்படுகின்றன. வாரத்தின் இறுதி நாட்களில் 150 முதல் 200 நபர்கள்வரை பாரில் குடிக்க ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்கிறது. இதில் வெளியாட்கள்தான் அதிகம் பேர் இருக்கின்றனர். இதனை இன்ஸ்பெக்ஷன் செய்து கமிஷனர் உறுதிப் படுத்திக்கொண்டிருக்கிறார். அதனடிப் படையில், மேற்கண்ட 5 தனியார் ஸ்டார் ஹோட்டல்களின் பார் லைசன்ஸை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார் கமிஷனர் கார்த்திகா”என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஆயத்தீர்வை துறையினர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் ஆகிய தரப்புகளில் நாம் விசாரித்தபோது, "ஸ்டார் ஹோட்டல்களில் தங்குபவர்கள் மட்டும்தான் ஹோட்டல் பாரை பயன்படுத்த அனுமதி உண்டு என்றால், அவர்களை சந்திக்கவரும் ஹெஸ்ட்டுகள் மது அருந்த எங்கே செல்வார்கள்? அது மட்டுமல்ல, ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வருபவர்களும் மது அருந்துவர். அவர்களுக்கு மது வழங்க மறுத்தால் அது பிசினஸை பாதிக்கும். அதனால் வெளிநபர்கள் என்பது குறித்த பிரச்சனை, ஹோட்டல் தரப்பிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது. இது, பெரிய பிரச்சினையாகவும் விவாதிக்கப் பட்டது.

bar

இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய ஜெயலலிதா அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்தது. அதன்படி, ஹோட்டலில் தங்காதவர்களும், ஹோட்டலிலுள்ள ரெஸ்டாரெண்டுக்கு உணவு சாப்பிட வருகிற கஸ்டமர்களும் ஹோட்டல் பாரில் மது அருந்த எந்த தடையும் இல்லை என முடிவெடுக்கப்பட்டது. இதனை அன்றைக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை கமிஷனராக இருந்த மாலிக் ஃபெரோஸ்ஹான் ஐ.ஏ.எஸ். உத்தரவாக பிறப்பித்தார். இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்குப் பிறகு, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையிலிருந்து வேறு எந்த புதிய உத்தரவும் கடந்த 10 ஆண்டுகளில் பிறப்பிக்கப்படவில்லை. ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட அந்த உத்தரவுதான் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. அதனால் ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள பார்களை ஹோட்ட லுக்கு வரும் கஸ்டமர்கள் பயன்படுத்த தடையில்லை.

அப்படியிருக்கும்போது, பார்களை ரத்து செய்திருக்கிறார்கள். அதுவும் தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறார்கள். விதிகளுக்குப் புறம்பாக இயங்கினால் நிரந்தர தடை விதிக்கலாமே! அதைச் செய்யாமல், தற்காலிக தடை ஏன்? அப்படி எனில் ஏதோ உள் குத்து இருப்பதாகவே தெரிகிறது''’என்கிறார்கள்.

கோட்டையிலுள்ள உள்துறை வட் டாரங்களில் விசாரித்தபோது, "ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள பார்களில், உள்நாட்டு மது பானங்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு இறக்குமதி மதுபானங்களாக இருந்தாலும் சரி, அவைகளை டாஸ்மாக் மூலமாகத்தான் கொள்முதல் செய்து ஹோட்டல் நிர்வாகம் கஸ்டமர்களுக்கு சப்ளை செய்யவேண்டும். ஆனால், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களை பர்மா பஜார்களிலிருந்து வாங்கிவந்து அந்த சரக்குகளை வெளிப் படையாகவே காட்சிப்படுத்தி கஸ்டமர்களுக்கு சப்ளை செய்கின்றன பல ஸ்டார் ஹோட்டல்கள். இந்த திருட்டுத்தனத்தை மது விலக்கு ஆயத்தீர்வை கண்டுகொள்வதில்லை.

bars

தற்போது பார் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் சில விவகாரங்கள் இருக்கிறது. அதாவது, சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீக் எண்டில் சரக்கடிக்க ஸ்டார் ஹோட்டல்களுக்கு செல்கிறார்கள். அப்போது தங்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் எனவும், இலவசமாக மது கொடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். வருடத்துக்கு 50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி பார் லைசன்ஸ் வாங்கும் ஹோட்டல் நிர்வாகம், இந்த இலவசங்களை கொடுக்க முன்வருவதில்லை.

அதேபோல, கூட்டம் அதிகமாக இருந்தால் அதிகாரிகளை சிறப்பாகக் கவனிக்கவும் முடிவதில்லை. சில அதிகாரிகள் ஹோட்டல் அறையில் 1 நாள் முழுவதும் தங்கி சரக்கடிக்க விரும்புகிறார்கள். அப்போது அந்த ஒரு நாளைக்கு ரூம் வாடகை இலவசமாக தரவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஹோட்டல் நிர்வாகத் தரப்பில் இந்த இலவசங்கள் மறுக்கப்படுகின்றன. லைசன்ஸ் ரத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்''’என்கிற தகவல்களும் கிடைக்கின்றன.

இதற்கிடையே, ஸ்டார் ஹோட்டல் பார் லைசன்ஸ் ரத்து விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையின் கமிஷனரின் உத்தரவுக்கு எதி ராக கோர்ட்டுக்கு செல்ல பாதிக்கப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் ஆலோசிப்பதாகத் தெரிகிறது.

nkn070824
இதையும் படியுங்கள்
Subscribe