தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்கவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதை அதிர்ச்சியுடன் கவனிக்கிறது அ.தி.மு.க. விழாவில் எம்.ஜி.ஆரை பற்றியும், ஜானகியம்மாளை பற்றியும் உணர்வுப்பூர்வமான பல தகவல்களை ஸ்டாலின் பகிர்ந்துகொண்டது எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு கிலியை தந்திருக்கிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். காரணம், ஸ்டாலினின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுதான்.
ஜானகியம்மாளின் நூற்றாண்டு தொடக்கவிழா சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 30-ந் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரான ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதில் நான் கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால், மனசாட்சிப்படி உண்மையை சிந்தித்தால் யாருக்கும் அதிர்ச்சியாக இருக்காது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 20 ஆண்டுகாலம் தி.மு.க.வில் இருந்தவர்.
தி.மு.க.வின் சமத்துவ -பொதுவுடைமைக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல உந்து சக்தியாக இருந்தவர் எம்ஜிஆர். பிறகு, காலத்தின் சூழல், தனி இயக்கம் கண்டார். அந்த இயக்கத்தில் அவரது பங்களிப்பு 15 ஆண்டுகள். அந்த வகையில் அவர் அதிகமிருந்தது தி.மு.க.வில்தான். தி.மு.க.வைப் பற்றி எம்.ஜி.ஆரே எழுதும்போது, ‘"தேசிய சிந்தனை கொண்ட நான், எனது கொள்கைக்கு கலைஞரை இழுக்கப் பார்த்தேன். ஆனால், கடைசியில் அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வில் சேர்ந்தேன். கட்சியின் பொருளாள ராகவும் இருந்தேன்'’என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இந்த விழாவில் நான் கலந்துகொண்டிருப்பது வியப்பாகத் தெரியாது. இங்கு எம்.ஜி.ஆர்.-ஜானகியம்மாள் பெயரில் மிகப்பெரிய கல்லூரி உருவாவதற்கு காரணம் கலைஞர்தான். ஜானகியம்மாள் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சத்யா ஸ்டூடியோ வளாகத் தில் ஒரு கல்லூரி கட்ட வேண்டும் என்றும், அதற்கு அனுமதி தரவேண்டும் என்றும், 1996-ல் கலைஞர் ஆட்சியின்போது அவரிடம் கோரிக்கை வைத்தார் ஜானகியம்மாள். அந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு உறுதுணையாக கலைஞர் இருந்தார். நான் இந்த விழாவுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்றவன் நான். இதே சத்யா ஸ்டூடியோ வுக்கு பலமுறை வந்திருக்கிறேன். என்மீது அளவுகடந்த பாசம் அவருக்கு எப்போ துமே இருந்தது. அவரை நான் பெரி யப்பா என்றே அழைப்பேன். திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்கள் மீது எம்.ஜி.ஆருக்கும் ஜானகியம்மாளுக் கும் தனிப்பற்று உண்டு. எம்.ஜி.ஆர். தனி இயக்கம் கண்டாலும் தங்களின் கொள்கை களில் அண்ணாயிசத்தைக் கட்டிக் காத்தார். சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பதுதான் அண்ணாயிசம். அந்த அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனை வருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது. அதனால் திராவிட இயக்க கொள்கைகளை காப்பதும், அதன் மூலம் தமிழகத்தை மேன்மையடையச் செய்வதும்தான் எம்.ஜி.ஆர்.- ஜானகி யம்மாளுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை''’என்று அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.
ஸ்டாலினின் இந்த பேச்சின் உள்ளார்ந்த அர்த்தம்தான் இப்போது அ.தி.மு.க.வில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விழாவில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். விசுவாசிகள் பல ரிடம் நாம் பேசியபோது,”"எம்.ஜி.ஆரைப் பற்றி ஸ்டாலின் நினைவுகூர்ந்த ஒவ்வொரு வார்த்தை யும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. தி.மு.க.வின் தலைவராக இருக்கும் ஸ்டாலின், அ.தி.மு.க. தொடர் புடைய விழாவில் கலந்துகொண் டதும், எம்.ஜி.ஆர்., ஜானகி யம்மாளை பற்றி புகழ்ந்து பல வரலாற்று உண்மைகளை பேசியதும் உண்மையிலேயே அ.தி.மு.க. தொண்டர் களின் மனதில் உற் சாகத்தை தந்திருக்கிறது. அண்ணாயிசம் என்கிற திராவிட இயக்க கொள்கை களில் பற்றுகொண்ட அனை வரும் அந்த கொள்கையை காப்பது தான் எம்.ஜி.ஆர்.-ஜானகியம்மா ளுக்கு செய்யும் மரியாதை என ஸ்டா லின் சொல்லியிருப்பது, வெறும் புகழுரை அல்ல; அ.தி.மு.க. தொண்டர்களை தி.மு.க. பக்கம் ஈர்க்கும் ஒரு முயற்சியும்கூட!
அதாவது, தற்போது மாலுமி இல்லாத கட்சியாக இருக்கிறது அ.தி.மு.க. எங்கள் கட்சியில் தலைவர்கள் தலைமைப் பதவிக்கு மோதிக்கொண்டிருக் கிறார்கள். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ரசிக்கவில்லை. தனிப் பட்ட முறையில், தொண்டர்களிடம் ஓட்டெடுப்பு நடத்திப் பாருங்கள், எடப்பாடி-பன்னீரின் பதவி ஆசை யை காறித் துப்புவார்கள். அதனால் விரக்தியிலிருக்கும் அ.தி.மு.க.தொண் டர்களை இழுக்க பா.ஜ.க. முயற்சிக் கிறது. அதனை தடுக்கும் வகையில், அ.தி.மு.க.வினரை தி.மு.க. பக்கம் கொண்டுவரவே ஸ்டாலின் பேச்சு இருந்தது. இன்னும் சொல்லப் போனால், தி.மு.க.விலிருந்து பிரிந்த அ.தி.மு.க., மீண்டும் தி.மு.க.வோடு இணைய வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் பேச்சிலிருந்த உள்ளர்த் தம். அந்த வகையில், அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஸ்டாலின் பேச்சு ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள் ளது'' என்கின்றனர்.
ஜானகியம்மாளின் தம்பி மக ளான லதா ராஜேந்திரனுக்கு சத்யா ஸ்டூடியோ வளாகம் சொந்தமானது. ராஜேந்திரனை தனது மருமகனாக பாவித்தவர் எம்.ஜி.ஆர். லதா ராஜேந் திரனின் மகனான குமார் ராஜேந் திரன்தான் எம்.ஜி.ஆர்.-ஜானகியம் மாள் கலைக்கல்லூரியை பராமரித்து வருகிறார். ஜானகியம்மாளின் நூற் றாண்டு தொடக்கவிழாவை விமர்சை யாக கொண்டாட நினைத்த குமார் ராஜேந்திரன், விழாவில் அ.தி.மு.க. தலைவர்களான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கலந்து கொள்வதைவிட, முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவேண் டும் என விரும்பியுள்ளார். இதனை ஸ்டாலினின் கவனத்துக்கு அவர் கொண்டுசெல்ல, "விழாவுக்கு வருவது எனக்குப் பெருமை' எனச்சொல்லி, கலந்துகொள்வதை உறுதிப்படுத்தி னார் ஸ்டாலின். அ.தி.மு.க.விலுள்ள எம்ஜி.ஆர். விசுவாசிகளை தி.மு.க.வுக் குள் ஈர்க்கும் ஸ்டாலினின் அரசிய லில் மிரண்டு போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
-இரா.இளையசெல்வன்