தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (இ-கவர்ன்ஸ் ஏஜென்சி) நிறுவனம். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இந்த நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய செயலாளர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்.ஸின் சிபாரிசில், அசிஸ்டெண்ட் மேனேஜராக (பயிற்சி) பணி அமர்த்தப்பட்டார் டி.பிரசன்ன வெங்கடேஷ். போலிச் சான்றிதழ் மூலம் வேலையில் சேர்ந்ததாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தும் நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சி வந்ததும் பழைய புகார்கள் தூசி தட்டப்பட... போலிச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த வாரம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் பிரசன்ன வெங்கடேஷ்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "பிரசன்ன வெங்கடேஷ் பணியில் இணைந்தபோது கொடுக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களின் ஒரிஜினல்களை சமர்பிக்க, நிறுவனத்தின் இணைச் செயல் அலுவலர் அறிவுறுத்தினார் (குறிப்பாணை எண்:3412/தநா.மி.ஆ.மு./2019).ஆனால், சமர்ப்பிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி சான்றிதழ், வேலை வாய்ப்பு அட்டை, பணி நியமன ஆணை என பல சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்க
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (இ-கவர்ன்ஸ் ஏஜென்சி) நிறுவனம். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இந்த நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய செயலாளர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்.ஸின் சிபாரிசில், அசிஸ்டெண்ட் மேனேஜராக (பயிற்சி) பணி அமர்த்தப்பட்டார் டி.பிரசன்ன வெங்கடேஷ். போலிச் சான்றிதழ் மூலம் வேலையில் சேர்ந்ததாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தும் நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சி வந்ததும் பழைய புகார்கள் தூசி தட்டப்பட... போலிச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த வாரம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் பிரசன்ன வெங்கடேஷ்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "பிரசன்ன வெங்கடேஷ் பணியில் இணைந்தபோது கொடுக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களின் ஒரிஜினல்களை சமர்பிக்க, நிறுவனத்தின் இணைச் செயல் அலுவலர் அறிவுறுத்தினார் (குறிப்பாணை எண்:3412/தநா.மி.ஆ.மு./2019).ஆனால், சமர்ப்பிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி சான்றிதழ், வேலை வாய்ப்பு அட்டை, பணி நியமன ஆணை என பல சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டன.
மின் ஆளுமை முகமைக்கு ஒப்பந்த அடிப் படையில் வாகனங்களை இயக்கிவருகிறது விக்னேஷ் கேப்ஸ். இந்த கார் நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன டெண்டரில் கலந்துகொள்ள வசதியாக மின் ஆளுமை முகமையின் மூலம் சான்று அளித்திருக்கிறார் பிரசன்ன வெங்கடேஷ். அவருக்கு இப்படி சான்றளிக்கும் எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த மின் ஆளுமை முகமையின் தலைமையகம், அண்ணாசாலையிலுள்ள செங்கல்வராய நாயக்கர் மாளிகைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது, 16 சி.சி.டி.வி. கேமராக்களையும் பழைய அலுவலகத்திலிருந்து புதிய அலுவலகத்தில் பொருத்தும் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, பிரசன்ன வெங்கடேஷுக்கு இருக்கிறது. ஆனால், கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஒரு கேமராவின் மதிப்பு தோராயமாக 12,500 ரூபாய் என்ற வகையில் மின் ஆளுமை முகமைக்கு ஏற்பட்ட இழப்பு 2 லட்சம் ரூபாய்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் பிரசன்ன வெங்கடேஷின் பொறுப்பற்றதன்மைதான் காரணம் என்கின்றனர். எல்காட்டில் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் குறித்து பயிற்சி யளிக்கப்பட்டதில், பிரசன்ன வெங்கடேஷும் எல்காட்டில் உள்ள ஒரு பெண் அதிகாரியும் இணைந்து பல லட்சங்கள் ஊழல் செய்துள்ளனர். பிரசன்ன வெங்கடேஷின் வங்கி கணக்கில் பல கோடிகள் பரிவர்த்தனை நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரசன்ன வெங்கடேஷ் மீது சுமத்தப்பட்டு, உயரதிகாரிகளின் விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதற்கான ரிப்போர்ட்டை 7-12-2020-ல் சமர்ப்பித்துள்ளார் விசாரணை அதிகாரி. அதேபோல, டெபுடி டைரக்டரும் (நிர்வாகம்) தனது ரிப்போர்ட்டினை 15-12-2020-ல் தந்திருக்கிறார். அ.தி.மு.க ஆட்சி முடியும்வரை நடவடிக்கை இல்லை. இந்த நிலையில்தான், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்ற அஜய்யாதவ், முடக்கி வைக்கப்பட்டிருந்த பிரசன்ன வெங்கடேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ரிப்போர்ட்டை கையிலெடுத்தார்.
விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கு மாறு பிரசன்ன வெங்கடேஷுக்கு கடந்த மாதம் 14-ந்தேதி மெமோ கொடுத்தார் அஜய் யாதவ். கடந்த 21-6-2021ல் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரசன்ன வெங்கடேஷ் விளக்கமளித்தார். ஆனாலும், தகுதியற்ற கல்விச் சான்றிதழ் கொடுத்தல், தனியார்களின் லாபங்களுக்காக பணி செய்தல், அதன்மூலம் ஆதாயம் பெறுதல், அரசு நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்துதல், அரசு விதிகளின்படி நேர்மையாக பணிகளை செய்யாமல் உதாசீனம் செய்தல் உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி, பிரசன்ன வெங்கடேஷின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என சொல்லி அவரை பணியிலிருந்து தற்போது டிஸ்மிஸ் செய்து, 36 பக்க அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்.'' என்கிறார்கள் தகவல் தொழில்நுட்பத் துறையினர்.
இதேபோல, அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள பல்வேறு துறைகளின் ஊழல்களை ஆராய்ந்து வருகின்றது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இதில் பால்வளத் துறை யின் மாஜி அமைச்சர் ராஜேந் திர பாலாஜிக்கு எதிரான ஊழல்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. அந்தவகையில் ஆவின் நிறுவனத் தில் நடந்த பல ஊழல்களை ஆதாரப்பூர்வமாக நாம் அம்பலப்படுத்தியுள்ளோம். அந்த ஊழல்கள் மீது கவனம் செலுத்திய தலைமைச் செயலாளர் இறையன்புவின் உத்தரவின் பேரில், ராஜேந்திரபாலாஜியுடன் இணைந்து ஆவின் ஊழல்களுக்கு முதன்மை காரணமாக இருந்த பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்பட 34 அதிகாரிகள் 19-7-2021-ந் தேதி பல்வேறு மாவட்டங் களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக் கிறார்கள்.
ஆவினுக்கு 61 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூட்டுறவு தணிக்கை ரிப்போர்ட் கொடுத்த அறிக்கையின்படி பொது மேலாளர் ரமேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அலெக்ஸ் ஜீவதாஸிடம், அ.தி.மு.க ஆட்சிக் காலம் முழுவதும் டிமிக்கி கொடுத்து வந்த ரமேஷ்குமாரிடம், தி.மு.க ஆட்சி வந்ததும் அலெக்ஸ் ஜீவதாஸ் கடுமை காட்டிய பிறகே, உரிய கோப்புகள் கைக்கு வர... முழுமையான ரிப்போர்ட்டை மேலதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். கூட்டுறவுத்துறை சட்டவிதிகள் 81-ன் கீழ் சம்மந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து அரசு நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொகையை வசூலிப்பதுடன், கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதையும் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறார் அலெக்ஸ் ஜீவதாஸ்.
இந்த சூழலில்தான், ரமேஷ்குமார் உள்பட ஆவினின் பொது மேலாளர்கள், டெபுடி பொது மேலாளர்கள் என 34 அதிகாரிகளை இந்த மாதம் 19-ந்தேதி அதிரடியாக இடமாற்றம் செய்திருக்கிறார் ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐ.ஏ.எஸ். இது ஊழல் அதிகாரிகளை கதிகலங்க வைத்துள்ளது.
"தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகாரி களை களை எடுப்பதற்காக அதிரடியாக சாட்டையைக் கையிலெடுத்திருக்கிறது. இது தொடர வேண்டும்'' என்கிறார்கள் நேர்மையான நிர்வாகத்தை எதிர்பார்ப் பவர்கள்.