ராங்கால் ஸ்டாலின் டெல்லி விசிட்! சரண்டரா? சவாலா? விஜய் வழிக்கு வருவார்! பா.ஜ.க. தெனாவெட்டு!

ss

"ஹலோ தலைவரே, டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை நடவடிக்கைகளால் அரசியல் களம் பல்வேறு பரபரப்பைச் சந்தித்து வருகிறது.''”

"ஆமாம்பா, இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதையும் எடப்பாடி கிண்டல் செய்கிறாரே?''”

rr

"தமிழகத்தின் உரிமைப் பங்கான நிதியை வழங்காமல் மோடி அரசு, தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த சூழலில் 24ஆம் தேதி நிதி ஆயோக்கின் ஆலோசனைக் கூட்டம் நடப்பதால், அதில் கலந்துகொண்டு, தமிழகத்தின் நிதி உரிமையை நிலைநாட்டும் வகையில் ஸ்டாலின் குரல் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, 23ஆம் தேதி காலையில் அவர் டெல்லி செல்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும், அதில் ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை விடுவித்தது என்பதையும், அது இன்னும் எவ்வளவு தொகையைத் தமிழகத்துக்குத் தராமல் இழுத்தடித்து வஞ்சிக்கிறது என்பதையும் மோடியை வைத்துக்கொண்டே இந்தக் கூட்டத்தில் அவர் சரவெடிகளை வெடிக்கப் போகிறாராம். தி.மு.க. சீனியர்களோ, மாநில உரிமையைக் கேட்பதற்கு, ஸ்டாலின் கொஞ்சமும் தயங்கமாட்டார். இது திராவிடம் தந்திருக்கும் சுயமரியாதை உணர்ச்சி என்கிறார்கள். ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்று, மற்ற மாநில முதல்வர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்களாம். இதற்கிடையே, ரெய்டு பயத்தால்தான், டெல்லியிடம் தஞ்சமடைய ஸ்டாலின் ஓடுகிறார் என்று, சந்தடிச் சாக்கில் எடப்பாடி கிண்டல் அடிக்க, அவருக்கும் ’டேபிளுக்கு அடியில் காலைப்பிடிக்கும் நபர்’ என்று காரசாரமாகவே ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார்.''

"டாஸ்மாக் விவகாரத்தில் பெரிய பதட்டம் எதையும் தி.மு.க. தரப்பில் பார்க்க முடியவில்லையே?”

uday

"டாஸ்மாக் எம்.டி.யான விசாகன் ஐ.ஏ.எஸ்.ஸின் செல்போன் குறிப்புகளை அமலாக்கத்துறை முக்கிய துருப்புகளாக நினைக்கிறதாம். தி.மு.க. மேலிடம் கொடுத்த உத்தரவுகளையும், அவர்கள் தொடர்பான ஆவணங்களையும் தனது செல்போனிலேயே அவர் வைத்திருந்தாராம். எனவே, விசாகனை, தங்கள் விருப்பம் போல் கையில் எடுத்து, அவரை உதயநிதிக்கும் ஸ்டாலினுக்கும் எதிராக அப்ரூவராய் ஆக்கிவிடலாம் என்று அமலாக்கத் துறை கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறதாம். ஆனால் இந்த விசாகன், டாஸ்மாக் மேலாளராக வந்த பிறகு, முக்கிய புள்ளிகளோடு பெரிய அளவில் நிதிப்பரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை என்கிறது கோட்டைத் தரப்பு. அதனால்தான் தி.மு.க. மேலிடம் டாஸ்மாக் விவகாரத்தில் பயமில்லாமல் இருக்கிறதாம். அதிலும் துணை

"ஹலோ தலைவரே, டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை நடவடிக்கைகளால் அரசியல் களம் பல்வேறு பரபரப்பைச் சந்தித்து வருகிறது.''”

"ஆமாம்பா, இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதையும் எடப்பாடி கிண்டல் செய்கிறாரே?''”

rr

"தமிழகத்தின் உரிமைப் பங்கான நிதியை வழங்காமல் மோடி அரசு, தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த சூழலில் 24ஆம் தேதி நிதி ஆயோக்கின் ஆலோசனைக் கூட்டம் நடப்பதால், அதில் கலந்துகொண்டு, தமிழகத்தின் நிதி உரிமையை நிலைநாட்டும் வகையில் ஸ்டாலின் குரல் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, 23ஆம் தேதி காலையில் அவர் டெல்லி செல்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும், அதில் ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை விடுவித்தது என்பதையும், அது இன்னும் எவ்வளவு தொகையைத் தமிழகத்துக்குத் தராமல் இழுத்தடித்து வஞ்சிக்கிறது என்பதையும் மோடியை வைத்துக்கொண்டே இந்தக் கூட்டத்தில் அவர் சரவெடிகளை வெடிக்கப் போகிறாராம். தி.மு.க. சீனியர்களோ, மாநில உரிமையைக் கேட்பதற்கு, ஸ்டாலின் கொஞ்சமும் தயங்கமாட்டார். இது திராவிடம் தந்திருக்கும் சுயமரியாதை உணர்ச்சி என்கிறார்கள். ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்று, மற்ற மாநில முதல்வர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்களாம். இதற்கிடையே, ரெய்டு பயத்தால்தான், டெல்லியிடம் தஞ்சமடைய ஸ்டாலின் ஓடுகிறார் என்று, சந்தடிச் சாக்கில் எடப்பாடி கிண்டல் அடிக்க, அவருக்கும் ’டேபிளுக்கு அடியில் காலைப்பிடிக்கும் நபர்’ என்று காரசாரமாகவே ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார்.''

"டாஸ்மாக் விவகாரத்தில் பெரிய பதட்டம் எதையும் தி.மு.க. தரப்பில் பார்க்க முடியவில்லையே?”

uday

"டாஸ்மாக் எம்.டி.யான விசாகன் ஐ.ஏ.எஸ்.ஸின் செல்போன் குறிப்புகளை அமலாக்கத்துறை முக்கிய துருப்புகளாக நினைக்கிறதாம். தி.மு.க. மேலிடம் கொடுத்த உத்தரவுகளையும், அவர்கள் தொடர்பான ஆவணங்களையும் தனது செல்போனிலேயே அவர் வைத்திருந்தாராம். எனவே, விசாகனை, தங்கள் விருப்பம் போல் கையில் எடுத்து, அவரை உதயநிதிக்கும் ஸ்டாலினுக்கும் எதிராக அப்ரூவராய் ஆக்கிவிடலாம் என்று அமலாக்கத் துறை கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறதாம். ஆனால் இந்த விசாகன், டாஸ்மாக் மேலாளராக வந்த பிறகு, முக்கிய புள்ளிகளோடு பெரிய அளவில் நிதிப்பரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை என்கிறது கோட்டைத் தரப்பு. அதனால்தான் தி.மு.க. மேலிடம் டாஸ்மாக் விவகாரத்தில் பயமில்லாமல் இருக்கிறதாம். அதிலும் துணை முதல்வர் உதயநிதி இப்போது, அறிவாலயத்தில் கூலாக அமர்ந்துகொண்டு, மாவட்டம்தோறும் தி.மு.க.வில் இருக்கும் பிரச்சினைகளைப் பஞ்சாயத்து செய்து வருகிறாராம். இதற்கிடையே டாஸ்மாக் விவகாரத்தை வைத்து "யார் அந்த தம்பி' என்ற கோஷத்தை, மக்கள் மத்தியில் ஹேஸ்டேக் ஆக்க, எடப்பாடி கரன்ஸிகளை வாரி இறைக்க ஆரம்பித்திருக்கிறார்.''”

"துணை முதல்வர் என்ற கெத்தோடு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை உதயநிதி தனியாக நடத்தி இருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்று 8 மாதங்கள் ஆகின்றன. இப்போதுதான் முதல்முறையாக துணை முதல்வர் என்கிற வகையில், அரசு உயரதிகாரிகளுடன் 20ஆம் தேதி தனியாக ஆலோசனைக் கூட்டத்தை உதயநிதி நடத்தினார். வட சென்னை வளர்ச்சித் திட்டம் என்னும் பெயரில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 6,876 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டப்பணிகளில் வேகத்தைக் காணவில்லை என்று குற்றச்சாட்டுக் குரல்கள் எழுந்த நிலையில், இவை குறித்து ஆராய கோட்டையில் இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் உதயநிதி. செயல்படுத்தப்படும் ஒவ்வொரு பணி பற்றியும் கேட்டறிந்த அவர், அது குறித்த சந்தேகங்களையும் எழுப்பி அதிகாரிகளிடமிருந்து பதில் பெற்றிருக்கிறார். நிறைவாக, அனைத்துத் திட்டப் பணிகளையும், மக்களின் பயன்பாட்டுக்கு விரைவாகக் கொண்டு வாருங்கள். வேறு ஏதேனும் தடைகள் இருந்தால் அதை என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகளுக்கு கறார் உத்தரவு பிறப்பித்தாராம் உதயநிதி.''”

"பா.ஜ.க.- அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கமாட்டோம் என்று நடிகர் விஜய்யின் த.வெ.க. தரப்பு அறிவித்திருக்கிறதே?''”

vijay

"நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செய லாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுன், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் நாம் கேட்டபோது, "எங்கள் பிடியில் இருந்து எடப்பாடியாலேயே தப்பிக்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த விஜய் கட்சியெல்லாம் எம்மாத்திரம்? தேர்தல் நெருக்கத்தில், டெல்லி கையில் எடுக்கும் அஸ்திரத்தைப் பார்த்து, விஜய்யே ’நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்’ என்பார். அப்போது ஆதவ்வும் மோடிஜி வாழ்க என்பார். அதற்கான டெக்னிக்குகள் எல்லாம் டெல்லிக்குத் தெரியும். அதே சமயம் அவரை எங்கள் கூட்டணிக்கு நேரடியாகக் கொண்டுவருவதை விட, தி.மு.க.வின் வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக மட்டுமே அவரைக் கையாள நினைக்கிறது டெல்லி. எனவே, அதுதான் இந்த விவகாரத்தை தீர்மானிக்கும். எங்கள் தேசியத் தலைமை என்ன நினைக்கிறதோ, அப்படித்தான் நடிகர் விஜய்யால் தமிழ்நாட்டு அரசியலில் ரோல் பண்ண முடியும்'’ என்று அழுத்தம் திருத்தமாகவே சொல்கிறது கமலாலயத் தரப்பு.''”

"தமிழக பா.ஜ.க. 26ஆம் தேதி அதிரடி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறதே?''”

"வருகிற 26ஆம் தேதி சென்னையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் எனும் கோட்பாட்டை தமிழக மக்களிடம் கொண்டு செல்வதற்கான வழிகளை ஆராயும் ஆலோசனைக் கூட்டத்தை, தமிழக பா.ஜ.க. நடத்த இருக்கிறது. இதற் காக பல்வேறு வியூ கங்கள் வகுக்கப்பட் டுள்ளன. இதில் பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று, பலரையும் தொடர்புகொண்டு வருகிறார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் சென்னைக்கு வருகிறார். பா.ஜ.க.வின் கருத்தரங்க ஆலோசனைக் கூட்டத்திற்காக வரும் அவர், அப்படியே தனது கட்சியை தமிழகத்தில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆலோசிக்க இருக்கிறாராம்.''”

"பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் நடந்துவரும் மோதல் எந்த அளவில் இருக்கிறது?''”

ramdoss

"தைலாபுரத்தில் சமாதானக் கொடியைப் பறக்க வைக்க, பா.ம.க. சீனியர்களும் ராமதாஸின் குடும்பத்தினரும் தீவிரமாக முயற்சி எடுத்துவருகிறார்கள். எனினும் இரண்டு பக்கமும் இன் னும் வெப்பம் முழுதாக அடங்க வில்லை என்கிறார்கள். எனினும் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், "அன்புமணி மீது எனக்கு எந்தக் கசப்பும் இல்லை. நான் டாக்டர். கசப்பான மருந்து தரமாட்டேன்' என்று, தன் பக்கம் எந்த சிக்கலும் இல்லை என்று காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அன்புமணியிடம் இறுக்கம் அதிகமாகவே இருக்கிறதாம். இதற்கிடையே, அய்யாவுக்கும் அன்புமணிக்குமிடையே பிரச்சனை ஏற்படவும், அது அதிகமாகவும் காரணமானவர் ஜி.கே. மணிதான். அவரை கட்சியின் கௌரவ பதவியிலிருந்து நீக்கினால்தான் அன்புமணி சமாதானமாவார் என்று மகன் தரப்பு டிமாண்ட் வைத்ததாம். இது ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, சட்டமன்ற பா.ம.க.வின் தலைவராக ஜி.கே.மணி இருக்கும் போது, அவரைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதா? என குடும்பத்தினரிடம் அவர் கோபப்பட்டாராம். இந்த சூழலில், தீவிரமாக எடுக்கப்பட்ட முயற்சி களின் அடிப்படையில் வரும் 25ஆம் தேதி தைலாபுரத்தில் ராம தாஸும் அன்புமணியும் சந்தித்துப் பேச இருக்கிற ôர்களாம்.''”

"தேனாம்பேட்டை காங்கிரஸ் திடல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதே?''”

"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில், அடுக்குமாடி மால் ஒன்றைக் கட்டுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, ப்ளு பேர்ல் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது காங்கிரஸ் கட்சி. இதற்காக, 3 கோடி ரூபாய் நிறுவனத்தின் தரப்பிலிருந்து கட்சிக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு பிரச்சனைகளால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனினும், கட்டுமானத்திற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் அப்படியே கிடப்பில் வைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த இந்த விவகாரம், கடந்த 15 நாட்களாக கொழுந்து விட்டு எரிகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், வழக்கை வாபஸ் பெற வைக்கவும் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புறவழியில் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் காங்கிரஸ். சம்மந்தப்பட்ட நிறுவனமோ, ஒப்பந்தத்தின் படி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய். இதில் 30 சதவீதத் தொகையை செட்டில் பண்ணினால் எல்லாம் சுகமாக முடியும் என்கிறதாம். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், நீதிமன்றம் மூலம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.''”

ss

"ஊராட்சிகளில் வரி உயர்த்தப் பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே?''”

"தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சி கள் இருக்கின்றன. இதில் 99 சதவீத ஊராட்சிகள், போதிய வருவாய் இல்லா மல் திண் டாடு கின்றன. இதனால் அடிப்படைப் பிரச் சினைகளைக் கூட ஊராட்சிகளால் தீர்க்க முடியவில்லையாம். இது குறித்து தி.மு.க. அரசின் மேலிடத்துக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சூழலில், மக்களிடமிருந்து வசூலிக்கப் படும் பல்வேறு இனங்களுக்கான வரி விகிதத்தை, உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த வரி உயர்வை வெளிப்படையாக அறிவிக்காமல், சீக்ரெட்டாக உயர்த்திவிட்டனர். இதையறிந்த மக்கள், ஊராட்சி அலுவலர்களிடம் மல்லுக்கட்டத் தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த விவகாரம் கிராமப்புறங்களில் பெரிதாக வெடிக்கக்கூடும் என்கிறார்கள். இந்த வரி உயர்வை மோப்பம் பிடித்துள்ள அ.தி.மு.க., இது குறித்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகிறதாம்.”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். வரும் ஜூலை 24ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதில் குறிப்பாக தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், அப்துல்லா, சண்முகம் ஆகியோரோடு, ம.தி.மு.க. தலைவர் வைகோவின் பதவிக்காலமும் நிறைவை எட்டுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுக்கொண்டபடி, ம.நீ.ம. தலைவர் நடிகர் கமலுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை தி..மு..க. தர இருக்கிறது என்கிற டாக் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இதற் கிடையே தற்போது, ஆங்கிலப் பத்திரிகை யாளர் ஒருவரையும் தி.மு.க. ராஜ்யசபாவுக்கு அனுப்ப இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதேபோல் திராவிட இயக்க எழுத்தாளரான திருவாரூர் அர.திருவிடம் பெயரும் இதற்கான பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.''’

__________

இறுதிச் சுற்று!

அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை -பிரேமலதா!

ww

நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியுடன் கூட்டணி வைக்க தே.மு.தி.க. பிரேமலதாவை வலியுறுத்தி வருகிறார்கள் தே.மு. தி.க. நிர்வாகிகள். இந்த சூழலில், வியாழக்கிழமை (22/5/25) பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா, "சட்டமன்றத் தேர்த லில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் நடக்கும் கட்சி மாநாட்டில் தெரிவிப்போம். அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இல்லை. 234 தொகுதி களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கி விட்டன என்று தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை என்று சொல்லும் பிரேமலதா, தி.முக. வையும் சமீபகாலமாக விமர்சித்து வருகிறார். இதனையடுத்து குழம்பியுள்ள அக்கட்சியின் தொண்டர்கள், மாநில நிர்வாகி களிடம், "தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் நாம் இல்லைங் கிறது தெரிகிறது. அப்படியானால் நாம் எந்த கூட்டணியில் இருக்கப்போகிறோம் என்று நச்சரிப்பதால், "அம்மா (பிரேமலதா) விஜய் கட்சியுடன் பேசி வருகிறார். த.வெ.க.வுடன் கூட்டணி உருவாகும். கூட்டணி பற்றி யோசித்து குழப்பிக் கொள்ளாமல் பூத் கமிட்டி வேலைகளை கவனியுங்கள்'' என்று தெளிவுப்படுத்தி வருகின்றனர் தே.மு.தி.க. நிர்வாகிகள்.

-இளையர்

nkn240525
இதையும் படியுங்கள்
Subscribe