டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்சிங் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியது தேசிய அளவில் உற்றுக் கவனிக்கப்பட்டுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால் காவல்துறை, பாதுகாப்பு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக அதிகாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடமே இருக்கிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கினை விசாரித்த அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகள், "டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துவதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு'’என அதிரடியாக தீர்ப்பளித்தனர். இதனை ஜீரணிக்க முடியாத பிரதமர் மோடி, இதற்கு எதிராக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான், மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் கெஜ்ரி வாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்சிங்கும் சந்தித்துள்ளனர்.

kk

Advertisment

சந்திப்பு குறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்த போது,‘’"யூனியன் பிரதேசங்களை ஒழித்துக் கட்டவே இந்த அவசர சட்டத்தை கொண்டுவரு கிறார் மோடி. லோக்சபாவில் இந்த சட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், ராஜ்யசபா வில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட் டும்தான் பாஸாகும். அத னால் "அந்த சட்டத்தை தோற்கடிக்க நீங்கள் உதவ வேண்டும்' என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத் தார் கெஜ்ரிவால்.

அப்போது, "இதை நீங்கள் சொல்லவேண்டி யதே இல்லை; அவசர சட்டத்தை எதிர்த்து தி.மு.க. வாக்களிக்கும். உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்'' என்று ஸ்டாலின் உறுதி யளிக்க, நெகிழ்ச்சியானார் கெஜ்ரிவால். அப்போது பேசிய பகவந்த்மான்சிங், "இன்னொரு உதவியும் நீங்கள் எங்க ளுக்காக செய்ய வேண்டும். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர் களிடமும் நாங்கள் ஆதரவு திரட்டுகிற அதேசமயம், அக்கட்சிகளின் தலைவர் களிடம் எங்களுக்காக நீங்கள் பேச வேண்டும். உங்களின் வார்த்தைகளுக்கு அவர்களிடம் முக்கியத்துவம் உண்டு'' என சொல்ல, "அவசியம் நான் பேசுகிறேன்'' என நம்பிக்கை கொடுத்தார் ஸ்டாலின்.

இதனையடுத்து, "மாநில அரசுகளை ஒடுக்கும் பாசிச ஆட்சியை நடத்திவரும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்தால் தேசத்தின் ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவம் எல்லாமே ஒடுக்கப்பட்டுவிடும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை உரு வாக்குவார்கள். அது மாநில அரசுகளை மொத்தமாக அழித்துவிடும். அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோற்க வேண்டும். இதற்காக, விருப்பு வெறுப்புகளை மறந்து ஓரணியில் எதிர்க்கட்சிகள் இணைந்தால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்' என கெஜ்ரிவால் உணர்ச்சிப்பூர்வ மாக சொல்ல, அதனை ஆமோதித்தார் ஸ்டாலின்'' என்று சந்திப்பினை விவரித்தனர் தி.மு.க.வினர்.

-இளையர்